கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் பிறரிடம் மிகவும் அன்பாக பழகும் குணம் கொண்டவர்.
அப்படிப்பட்ட குணம் கொண்டவர், நபர் ஒருவரின் செயலால் சற்று நிதானத்தை இழந்து கோபப்பட்டுள்ளார்.
போப் பிரான்சிஸ் அவர்கள், ஆறு நாள் பயணமாக மெக்ஸிகோ நாட்டிற்கு சென்றுள்ளார், அங்கு வன்முறை நடைபெறும் இடங்கள் மற்றும் மில்லியன் கணக்கான ஏழை மக்களை சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் சொற்பொழிவுகைள நிகழ்த்தி வருகிறார்.
இந்நிலையில், மெக்ஸிகோவில் உள்ள அரங்கம் ஒன்றிற்கு அவர் செல்கையில், நூற்றுக்கணக்கான நபர்கள் அவரை பார்ப்பதற்கு திரண்டனர், அவர்களிடம் கைகுலுக்கி பேசியுள்ளார்.
அப்போது நபர் ஒருவர் போப்பாண்டவரை நெருங்கிய பின்னரும் அவ்விடம் விட்டு செல்லாமல் அவருடையை கையை விடாமல் பிடித்திருந்ததால், நிலைகுலைந்த போப்பாண்டவர், தனக்கு முன்னால் இருந்த ஊனமுற்ற நபரின் மீது விழுந்துள்ளார்.
பின்னர், அந்த ஊனமுற்ற நபரை கட்டியணைத்து அவரது தலையில் முத்தமிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால், சற்று நிதானத்தை இழந்த போப், குரலினை உயர்த்தி, “சுயநலமாக இருக்காதே” என்று இரண்டுமுறை கூறியுள்ளார்.
அதன்பின்னர், போப்பாண்டவரின் உதவியாளர்கள் அந்த கூட்டத்தை அப்புறப்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக