வரவிருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் கூட்டுச் சேர்ந்திருப்பதையடுத்து இலங்கைத் தமிழர் பிரச்சினை தேர்தல் பிரசாரங்களின் முக்கிய பேசுபொருள்களில் ஒன்றாக இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.
இலங்கைப் போரின் இறுதிக் கட்டங்களின் போது தமிழகத்தில் தி.மு.க.வும் டில்லியில் காங்கிரஸ் கட்சியுமே ஆட்சியில் இருந்தன. தமிழர்களுக்கு ஏற்பட்ட அழிவைத் தடுக்கத் தவறியதாக கலைஞர் மீதும் சோனியா மீதும் ஏற்கனவே கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கும் தமிழகத்தின் ஏனைய கட்சிகள் சிறப்பாக, ஜெயலலிதாவின் அண்ணா தி.மு.க., தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்கள் மீண்டும் சேர்ந்துகொண்டுள்ளார்கள் என்று சூடுபறக்கப் பிரசாரம் செய்ய போகின்றன.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வதற்கு முடிவு செய்திருக்கும் ஜெயலலிதா அரசாங்கம், மோடி அரசிடம் கருத்துக்கேட்டு கடிதம் எழுதியிருப்பதையடுத்து தோன்றியிருக்கும் சூழ்நிலை தேர்தல் பிரசாரங்களை மேலும் பரபரப்பாக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.
முன்னதாக, 2014 பெப்ரவரியிலும் இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்வதற்கு முடிவெடுத்த ஜெயலலிதா அரசாங்கம் மத்திய அரசாங்கத்திடம் அபிப்பிராயத்தைக் கேட்டிருந்தது. அவ்வேளை காங்கிரஸ் தலைமையிலான அரசே மத்தியில் ஆட்சியில் இருந்தது. தமிழக அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
அன்று மூன்று நாள் அவகாசத்தில் பதில் தருமாறு காங்கிரஸ் அரசை கேட்டிருந்த ஜெயலலிதா அரசாங்கம் இப்போது எத்தகைய கால அவகாசத்தையும் குறிப்பிடாமல் எமது அரசிடம் கருத்துக் கேட்கிறது.
மோடி அரசு என்ன பதில் தெரிவிக்கப்போகிறது என்பதை அறிய இந்தியாவில் உள்ளவர்கள் மட்டுமல்ல, இலங்கையிலும் உள்ளவர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக காங்கிரஸ் டில்லியில் ஏற்கனவே போர்க்கொடி தூக்கியிருக்கிறது.
கலைஞரைப் பெறுத்தவரை இது ஒரு திரிசங்கு நிலை, ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்வதை ஆதரித்துக் கருத்துக் கூறினால் காங்கிரஸின் கோபத்துக்கு ஆளாக வேண்டிவரும். எதிராகக் கருத்துச்சொன்னால் தமிழக கட்சிகளின் கண்டனத்துக்குள்ளாக வேண்டிவரும். ஏதாவது ஒரு சட்ட ரீதியான பிரச்சினையை சுட்டிக் காட்டித்தான் கலைஞர் கருத்து வெளியிடகூடும்.
எது எவ்வாறிருந்தாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினையுடன் தொடர்புடைய விவகாரங்களை கலைஞருக்கு எதிரான வலிமையான ஆயுதமாகப் பயன்படுத்துவதில் பெரிய கெட்டிக்காரியாக ஜெயலலிதா செயற்படுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
கலைஞருக்கு எதிராகப் பயன்படுத்த முடியுமென்றால் ஜெயலலிதா எந்தவொரு பிரச்சினையையும் அதன் விளைவுகளைப் பொருட்படுத்தாமல் பயன்படுத்துவார். ஜெயலலிதாவுக்கு எதிராகப் பயன்படுத்த முடியுமென்றால் கலைஞரும் எந்தவொரு பிரச்சினையையும் அதன் விளைவுகளையும் பொருட்படுத்தாமல் பயன்படுத்தத் தவறமாட்டார். இதுவே தமிழக திராவிட அரசியலில் எழுதப்படாத ஒரு விதியாக இருந்து வருகிறது. இலங்கைத் தமிழர் பிரச்சினையும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட போது தமிழகத்தில் இருந்த சகல இலங்கைத் தமிழ் அதிகளையும் உடனடியாக திருப்பியனுப்ப வேண்டுமென்று எந்தவிதமான முன் யோசனையுமின்றிக் கோரிக்கை முன்வைத்தவர் ஜெயலலிதா.
இப்போது அதே ராஜீவ்காந்தி கொலை வழக்கின் கைதிகளை விடுதலை செய்வதற்கான முடிவையும் அவரே எடுத்து மோடி அரசாங்கத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்தக் கைதிகளின் ஆயுட்காலச் சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை ரத்துச் செய்வதற்கு ஜெயலலிதா அரசாங்கம் முடிவுகளை எடுத்த இரு சந்தர்ப்பங்களுமே தேர்தல் காலகட்டங்களேயாகும்.
மோடி அரசு கொடுக்கக்கூடிய பதிலில் தமிழக தேர்தல் களத்தில் அவரின் பாரதிய ஜனதா கட்சிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதிலும் சந்தேகமில்லை.
என்னதான் இருந்தாலும், இலங்கை தமிழர் பிரச்சினையை பயன்படுத்தி தமிழகத்தில் தன்னை யாருமே முட்டி முந்தாமல் இருப்பதை ஜெயலலிதா வெகு சாதுரியமாக உறுதிசெய்து கொண்டிருக்கிறார் என்பது உண்மை. தமிழே தன் மூச்சு என்று முழங்குகிற கலைஞர் கூட இதில் அடக்கம். வைகோ, சீமான், நெடுமாறன் எந்த மாத்திரம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக