கடந்த ஆறு மாத காலமாக கடும் சளியால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றும் குணமடையாத 5 வயது சிறுமியொருவரின் மூக்கில் 1.5 அங்குல நீளமான பூட்டூசி இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
கலிபோர்னிய ஹெமெட் பிராந்தியத்தைச் சேர்ந்த கலோ என்ற மேற்படி சிறுமி 6 மாத காலத்திற்கு முன்னர் அந்த பூட்டுசியை மூக்கில் வைத்து விளையாடிய போது அது அவரது மூக்கினுள் உறிஞ்சப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த சிறுமி, மேற்படி சம்பவத்தை முழுமையாக மறந்துள்ளார்.
இதனையடுத்து கடும் சளியால் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவர்களிடம் சிறுமியின் தாயாரான கத்தலின் பவல் அழைத்துச் சென்ற போது, சிறுமிக்கு சாதாரண சளிச்சுரம் இருப்பதாக கருதி நோயெதிர்ப்பு மாத்திரைகளை மருத்துவர்கள் வழங்கியுள்ளனர்.
எனினும் சிறுமி குணமடையாததால் திகைப்படைந்த சிறுமியின் மாமனார், மூக்கை பலமாக சீறுமாறு சிறுமியை பணித்துள்ளார்.
அதனை செவிமடுத்து சிறுமி சீறிய போது அவரது மூக்கிலிருந்து பூட்டூசி வெளியே வந்து விழுந்துள்ளது.
இதனையடுத்து சிறுமி, 6 மாத காலத்துக்கு முன்னர் பூட்டூசியை மூக்கில் நுழைத்து விளையாடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக