யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக் கடை ஒன்றில் பட்டப் பகலில் நகையைத் திருட முயன்ற இருவர் கையும் மெய்யுமாக கடை ஊழியர்களால் பிடிக்கப்பட்டு யாழ். பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று காலை 9 மணியளவில் யாழில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றுக்கு வந்திருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் 2 பவுண் பெறுமதியான கை வளையலை (காப்பு) திருட முயன்ற போது கடை ஊழியர்களினால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைதான இருவரும் பாணந்துறையைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
பொலிசார் இருவரிடமும் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
NewJaffna

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக