வேர்ட் டாகுமெண்ட்டில், எதையேனும் பேஸ்ட் செய்தால், இறுதி வரி அல்லது படத்திற்குக் கீழாக, ஒரு சிறிய ஐகான் காட்டப்படுகிறது. இதில் கிளிக் செய்தால், சில ஆப்ஷன்கள் காட்டப்படுகின்றன. இதை லட்சியம் செய்திடாமல், தொடர்ந்து டைப் செய்தால், அது மறைந்துவிடுகிறது. பின்னர் தேடினாலும் கிடைப்பதில்லை. எதற்காக இந்த ஐகான்?
இந்த ஐகானில் காட்டப்படும் சில வசதிகள் நமக்காகத்தான் தரப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, இணைய தளம் ஒன்றிலிருந்து, நீங்கள் ஏற்கனவே தயாரித்துக் கொண்டிருக்கும் டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட் ஒன்றை பேஸ்ட் செய்கிறீர்கள்.
அப்போது, இணைய தளத்தில் எப்படி இருந்ததோ, அந்த எழுத்து வகை, அளவு ஆகியவற்றில் இது ஒட்டப்படும். இது, ஏற்கனவே நாம் அமைத்த டாகுமெண்ட்டில் வேறுபாடான ஒன்றாகத் தெரியும்.
ஆனால், நம் டாகுமெண்ட்டின் ஒரு பகுதியாக, அதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்டால் தான், டாகுமெண்ட் பார்க்க நன்றாக இருக்கும்.
இதற்காகத்தான் இந்த ஐகானும், அதில் தரப்படுகின்ற ஆப்ஷன் மெனுவும். இதில் மூன்று ஆப்ஷன்கள் தரப்படும்.
அவை: Keep Source Formatting, Match destination Formatting மற்றும் Keep Text only. நீங்கள் விரும்பியபடி அமைய, இரண்டாவது ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒட்டப்பட டெக்ஸ்ட் ஏற்கனவே உள்ள டெக்ஸ்ட்டின் ஸ்டைலை ஏற்றுக் கொண்டு தன்னை மாற்றிக் கொள்ளும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக