மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒவ்வொரு பதிப்பிற்கும் தன்னுடைய நீட்டிக்கப்பட்ட ஆதரவினை, ஏற்கனவே அறிவித்த நாளிலிருந்து விலக்கிக் கொண்டு வருகிறது. இன்னும் சரியாக 12 மாதங்களில், விண்டோஸ் விஸ்டாவிற்கான தன் ஆதரவினை முழுமையாக விலக்கிக் கொள்ள இருக்கிறது.
வரும் 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் 11 முதல், விஸ்டாவினை முழுமையாக மைக்ரோசாப்ட் கைவிட்டு விடும். எனவே, இந்த ஓராண்டு காலத்திற்குள், விண்டோஸ் விஸ்டா பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள், விண்டோஸ் 7, விண்டோஸ் 8.1 அல்லது விண்டோஸ் 10 சிஸ்டம் ஒன்றுக்கு மாறிக் கொள்ள வேண்டும்.
2012 ஆம் ஆண்டிலேயே, ஏப்ரல் 10 முதல், மைக்ரோசாப்ட் விஸ்டாவிற்கான முதன்மை ஆதரவினை விலக்கிக் கொண்டு, நீட்டிக்கப்பட்ட ஆதரவினை மட்டும் வழங்கி வந்தது. தற்போது நீட்டிக்கப்பட்ட ஆதரவும் விலக்கிக் கொள்ளப்பட உள்ளது. அதன் பின்னர், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான எந்தவிதமான பாதுகாப்பு கோப்புகளும் வழங்கப்பட மாட்டாது.
எனவே, இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை குறி வைத்து அனுப்பப்படும் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளிடமிருந்து அல்லது இதில் காணப்படும் பிழைக் குறியீடுகளைப் பயன்படுத்தும் ஹேக்கர்களிடமிருந்து, விஸ்டாவிற்கு பாதுகாப்பு பைல்கள் கிடைக்காது.
அதிர்ஷ்டவசமாக, விஸ்டா மிகவும் குறைவான கம்ப்யூட்டர்களிலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொத்த கம்ப்யூட்டர்களில், இது 1.41% சதவீத அளவிலேயே இயங்கி வருகிறது. ஏனென்றால், விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் “மிகப் பெரிய தவறாக வடிவமைக்கப்பட்ட சிஸ்டம்” எனப் பெயர் எடுத்ததாகும். விஸ்டாவைப் பற்றிக் கூறுகையில், அது மோசமானதா அல்லது விண்டோஸ் 8 மோசமானதா என்ற விவாதம் தான் நம் நினைவுக்கு வரும்.
ஆனால், இன்னும் 2001ல் அறிமுகமான விண்டோஸ் எக்ஸ்பி, இன்னும் மக்களிடையே பிரபலமான சிஸ்டமாக இயங்கி வருகிறது. 10.90% கம்ப்யூட்டர்களை இது இயக்கி வருகிறது.
விஸ்டா பயன்படுத்துவோருக்கான புதிய வாய்ப்புகள் மிகவும் குறைவே. மைக்ரோசாப்ட், தன் விண்டோஸ் 10 சிஸ்டத்தினை இலவசமாகத் தரும் முடிவெடுக்கையில், விஸ்டா சிஸ்டத்தினை விட்டுவிட்டது. எனவே, விஸ்டா வைத்துள்ளவர்கள், கட்டணம் செலுத்தி மட்டுமே விண்டோஸ் 10 சிஸ்டம் பெற முடியும். அல்லது, விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8.1க்கு, ஜூலை 29க்குள் மாறிக் கொண்டு, பின்னர், விண்டோஸ் 10க்கு இலவசமாக மாறிக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக