என் கம்ப்யூட்டர் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் மெதுவாக இயங்கும் என்று சொல்லப்படுகிறதே?
விண்டோஸ் 10- சிஸ்டம் இயங்கத் தேவையான ஹார்ட்வேர் அல்லது அதற்கும் அதிகமான கூடுதல் திறன் கொண்ட ஹார்ட்வேர் இருந்தால், நிச்சயம் வேகம் குறையாது.
1. விண்டோஸ் 7 சிஸ்டம் மூலமாக நான் உருவாக்கிய டேட்டா பைல்கள் அழிக்கப்படுமா?
நிச்சயமாக இல்லை. டேட்டா பைல்கள் அழிக்கப்பட மாட்டாது.
2. ”இலவச அப்கிரேட்” என்பதெல்லாம் சும்மா வியாபார தந்திரமாக இருக்கும். பின்னாளில், இதற்கென அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.
நிச்சயமாக இல்லை. இதுவே விண்டோஸ் வரிசையிலான இறுதி சிஸ்டமாக இருக்கலாம். நமக்குத் தொடர்ந்து இந்த சிஸ்டத்திற்கான பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்கான அப்டேட் பைல்கள் தரப்படும். எனவே, இந்த பயம் இல்லாமல், விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம்.
3. நான் ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் சாப்ட்வேர் புரோகிராம்கள், விண்டோஸ் 10ல் வேலை செய்யாது. இந்த புரோகிராம்களுக்காக நான் அதிகம் மீண்டும் செலவு செய்திட வேண்டியதிருக்குமே?
அனைத்து சாப்ட்வேர் புரோகிராம்களும் வேலை செய்யாது என்பது அடிப்படை இல்லாத கருத்து. ஒரு சில புரோகிராம்களை மைக்ரோசாப்ட் எடுத்துவிடுகிறது. அவை எவை என்று, விண்டோஸ் 10 அறிவிக்கிறது. அவற்றின் இடத்தில் என்ன சாப்ட்வேர் புரோகிராம் இயங்கும் எனவும் தெரிவிக்கிறது. மேலும், பல தர்ட் பார்ட்டி புரோகிராம்களும், இயங்காத புரோகிராம் இடத்தில் இயங்கக் கிடைக்கின்றன.
4. என் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட்வேர் துணை சாதனங்கள் விண்டோஸ் 10ல் இயங்காது என்று சொல்லப்படுகிறதே? உண்மையா?
ஒரு சில சாதனங்களுக்கான ட்ரைவர்கள் தரப்படுவதில்லை. ஆனால், இணையத்தில் அந்த துணை சாதனங்களுக்கான ட்ரைவர்கள், அவற்றைத் தயாரித்த நிறுவனங்களினாலேயே தரப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, டிவிடி ட்ரைவ் இயக்கத்தினைக் கூறலாம்.
5. நான் விண்டோஸ் 7 சிஸ்டத்தினை மிக மன நிறைவுடனும், சிரமமில்லாமலும் பயன்படுத்தி வருகிறேன். பின் ஏன், விண்டோஸ் 10க்கு அப்கிரேட் செய்திட வேண்டும்?
ஏற்கனவே பல முறை கூறியபடி, விண்டோஸ் 7க்கான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பேட்ச் பைல்கள் தரப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது. இப்போது, நீட்டிக்கப்பட்ட உதவி மட்டுமே தரப்படுகிறது. அதுவும், ஜனவரி 14, 2020ல் நிறுத்தப்படும். எனவே, இப்போதே
விண் 10க்கு மாற்றிக் கொண்டு, பாதுகாப்பான சூழ்நிலையை மேற்கொள்வது நல்லது.
6. எனக்கு விண்டோஸ் 8 பிடிக்கவில்லை. விண்டோஸ் 10 அதே போன்றதுதான் என்று கூறப்படுகிறதே? உண்மையா.
இல்லை. இல்லவே இல்லை. விண்டோஸ் 10 முற்றிலும் மாறுபட்டது. ஸ்டார்ட் மெனு இல்லை என்பதால், விண்டோஸ் 8 மக்களிடையே மதிப்பிழந்தது. எனவே, ஸ்டார்ட் மெனு மற்றும் விண் 8ல் தரப்பட்ட டைல்ஸ் மெனு இரண்டையும் இணைத்து விண் 10 ஸ்டார்ட் மெனு தரப்பட்டுள்ளது. மற்றவற்றிலும், புதிய தொழில் நுட்பம் மூலம் பல புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன.
7. விண்டோஸ் 10, அதற்கான அப்டேட் பைல்களை என் மீது திணிக்கும் என்று கேள்விப்பட்டேன், உண்மையா?
இது திணிப்பு அல்ல. விண்டோஸ் 10 இயக்கப் பயன்பாட்டினை, பாதுகாப்பாகவும், கூடுதல் வசதிகளுடன் தருவதற்காகவே, அடிக்கடி அப்டேட் பைல்கள் தரப்படுகின்றன. இவை வேண்டாம் என முடிவு செய்தால், அப்டேட் செய்திடாமல் விட்டுவிடலாம். ஆனால், பாதுகாப்பு கிடைக்காது. புதிய வசதிகள் அறியப்படாமலே போகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக