உருளைக்கிழங்கு தட்டை
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 250g
அரிசிமா - 100g
கடலைமா - 100g
கறிவேப்பிலை - 50g
பூண்டு - 25g
இஞ்சி - சிறிதளவு
வெங்காயம் - 50g
செத்தல்மிளகாய் - 4
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
உப்பு , எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
உருளைக்கிழங்கை நன்கு அவித்து சுத்தம் செய்து மசிக்கவும்.
இஞ்சி, பூண்டு, மிளகாய் என்பவற்றை ஒன்றாக அரைக்கவும்.
வெங்காயத்தை , கறிவேப்பிலையும் சிறிதாக நறுக்கவும்.
அரிசிமா, கடலைமா, உப்பு , மசித்த உருளைக்கிழங்கு, அரைத்த விழுது , நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை , எலுமிச்சை சாறு என்பன சேர்த்து நன்கு பிசையவும்.
பிசைந்த மாக்கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி சட்டியில் எண்ணெய் விட்டு சூடானதும் போட்டு எடுக்கவும்.
சோற்றுடன் அப்பளத்திற்கு பதிலாக பரிமாறலாம்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
சோள ரொட்டி
தேவையான பொருட்கள்
சோள மா - 250g
கோதுமைமா - 250g
நெய் , உப்பு , மல்லித்தூள் - தேவைக்கேற்ப
இளஞ்சூடான நீர் - தேவைக்கேற்ப.
செய்முறை
சோள மா, கோதுமைமாவினை சேர்த்து நன்கு கலக்கவும்.
நெய் , உப்பு, மல்லித்தூள் சேர்த்து நன்கு கலந்து இளம் சூடான நீர் விட்டு ரொட்டி ப் பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.
30 நிமிட நேரத்தின் பின் வட்டங்களாக தட்டி தோசைத்தட்டில் எண்ணெய் பூசி சுட்டு எடுக்கவும்
சோள மா ரொட்டி ரெடி .
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த உணவாகும்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
கோழிக்குழம்பு
என்னென்ன தேவை?
சிக்கன் -அரை கிலோ ,
சிறிய வெங்காயம் -1 கப்
நறுக்கிய தக்காளி -1 கப்
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மல்லித் தூள் – 3 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்-அறை ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
தாளிக்க :
வெந்தயம் -கால் ஸ்பூன்
சோம்பு -கால் ஸ்பூன்
பட்டை -கிராம்பு
பிரியாணி இலை – தேவையான அளவு
கறிவேப்பிலை-தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
அரைக்க :
சோம்பு-கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
மிளகு -கால் ஸ்பூன்
பச்சை அரிசி -கால் ஸ்பூன்
பூண்டு-ஒரு பல்
கிராம்பு- இரண்டு
(இந்த பொருட்கள் எல்லாவற்றையும் எண்ணெய் இல்லாமல் அரை பொன் வறுவலாக வறுத்து, பூண்டு வைத்து, தண்ணீர் இல்லாமல் அரைத்து கொள்ளவும்).
எப்படி செய்வது?
கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, வெந்தயம், சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிக்கவும்.
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை வாணலியில் போட்டு பொன் நிறமாக வதக்கவும்.
அடுத்ததாக நறுக்கிய தக்காளி, அரைத்த இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் ஆகியவற்றையும் போட்டு, நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு மல்லித் தூள், மிளகாய் தூள் இரண்டையும் சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்துகொள்ளவும்.
அந்த மசாலாவை நறுக்கிய சிக்கன் துண்டுகளுடன் நன்கு பிசைந்து கொள்ளவும்.
வதங்கி கொண்டு இருக்கும் மசாலாவுடன் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்கு கிளறி, உப்பு சேர்த்து குறைந்த சூட்டில் வேகவிடவும்.
கோழி நன்றாக வெந்தவுடன் பொடித்து வைத்து இருக்கும் மசாலாவை கொதித்து கொண்டு இருக்கும் குழம்புடன் சேர்த்து நன்கு கிளறி அடுப்பை நிறுத்தி விடவும். சூடான கோழிக்குழம்பு ரெடி!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக