ஒரு சிலர் தாங்களாகவே, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொண்டுள்ளனர். சிலரோ, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தொடர்ந்த தூண்டுதல்களால் மாறிக் கொண்டு இயக்கி வருகின்றனர். புதிய சிஸ்டம் எதிர்பாராத வகையில் சில மாற்றங்களைக் கொண்டிருக்கும். பழகாத இது போன்ற விஷயங்கள், நமக்கு ஒரு வித ஏமாற்றத்தைக் கொடுக்கும். குறிப்பாக, நீங்கள் விண்டோஸ் 8 அல்லது 8.1 பயன்படுத்தாமல் இருந்தால், விண்டோஸ் 10 பல விஷயங்களில், சிறிய அளவில் ஏமாற்றம் கொடுக்கலாம். “இங்கு என்ன செய்வது என்றே தெரியவில்லையே” என நீங்கள் பலமுறை ஆதங்கப்படலாம்.
இது போன்ற அனுபவம் சில நாட்களே இருக்கும். நாம் எரிச்சல் கொண்ட விஷயங்களே, பின்னர், நமக்குப் பிடித்த செயல்பாடாகவும் மாறலாம். இதற்கு சில தந்திரமான முயற்சிகள் உள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.
இலவச விண்டோஸ்: நீங்கள் வரும் ஜூலை 29, 2016க்குள், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரை, லேப்டாப் கம்ப்யூட்டரை, விண்டோஸ் 10க்கு மேம்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அதன் பின், கட்டணம் செலுத்தித்தான் விண்டோஸ் 10 சிஸ்டம் பெற வேண்டியதிருக்கும். இலவசமாக, ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பெறுவது நல்லதுதானே. எனவே, நீங்கள் தற்போது விண்டோஸ் 7, விண்டோஸ் 8 / 8.1 பயன்படுத்திக் கொண்டிருந்தால், உடனே, விண்டோஸ் 10க்கு மாற்றிக் கொள்ளுங்கள்.
ஏற்கனவே மாறிவிட்டீர்களா? உங்கள் கம்ப்யூட்டரை விண்டோஸ் 10க்கு மாற்றிவிட்டீர்களா? முன்பு, விண்டோஸ் 7 பயன்படுத்தி வந்தீர்களா? அப்படியானால், நிச்சயம் விண்டோஸ் 10 இயக்கம் தொடக்கத்தில் மிக விரைவாக இயக்க நிலைக்கு வருவதனை உணர்ந்திருப்பீர்கள். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இது நிறைய நேரத்தினை எடுத்துக் கொள்ளும். விண்டோஸ் 10 சில நிமிடங்களில் அல்ல, சில நொடிகளிலேயே இயக்க நிலைக்கு வந்துவிடும். அதே போல, ஷட் டவுண் செய்வதும் அதி வேகத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
விண்டோஸ் பட்டன்: உங்களுடைய பழைய சிஸ்டத்தில், விண்டோஸ் பட்டனை அழுத்தி நீங்கள் பெற்ற அனுபவத்திற்கும், அதே செயல்பாட்டினை விண்டோஸ் 10 ல் மேற்கொள்வதற்கும் நிறைய வேறுபாடுகளைக் காணலாம். விண்டோஸ் 10ல் கிளிக் செய்திடுகையில், நீங்கள் சற்று முன்பு பயன்படுத்திய புரோகிராம்களின் பட்டியலைக் காணலாம். சென்று வந்த இணைய தளங்களையும் காணலாம்.
டெஸ்க்டாப் எங்கே? சிறிய வண்ண ஓடுகளாகத் திரையில் காட்டப்படுகிறதா? இந்த ஓடுகள் வந்த பின்னர் என்ன செய்திட வேண்டும் எனத் தெரியவில்லையா? விண்டோஸ் பட்டனில் மீண்டும் ஒரு முறை கிளிக் செய்திடுங்கள். ஆஹா! இதோ உங்கள் டெஸ்க்டாப் திரை காட்சி அளிக்கும்.
என் பைல்கள் எங்கே?: விண்டோஸ் 10 நீங்கள் உருவாக்கிய பைல்களை என்ன செய்கிறது? என்ற கேள்விக்கு விடை தெரியவில்லையா? எக்கச் சக்கமாக என் பைல்கள் இருந்தனவே, அவை எல்லாம் எங்கே? கவலைப் பட வேண்டாம்.
மஞ்சள் வண்ணத்தில் உள்ள கவர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். இதுதான், பைல் எக்ஸ்புளோரருக்கான ஐகான் ஆகும். நீங்கள் இதனை விண்டோஸ் எக்ஸ்புளோரர் என்று முன்பு அறிந்திருப்பீர்கள். (C:) > Users > Your Name (அல்லது கம்ப்யூட்டர் எந்த பெயரில் அறியப்படுகிறதோ, அந்தப் பெயர்) என்று சென்றால், உங்கள் பழைய பைல்கள் அனைத்தும் இருப்பதனைக் காணலாம்.
இணையம் எப்படி செல்வது?: விண்டோஸ் 10க்கு மாறிக் கொண்டோம். இதில் எப்படி இணைய வெளிக்குச் செல்வது? உங்கள் திரையின் வலதுபுறம் கீழாக, ஒரு சிறிய மேல் நோக்கிய அம்புக் குறி போன்ற வகையில் கேரட் அடையாளம் (^) இருக்கும். இதில் கிளிக் செய்தால், வழக்கமாக நீங்கள் இதுவரை பயன்படுத்தி வந்த, சிஸ்டம் ட்ரேயில் இருந்த ஐகான்கள் காட்டப்படும்.
இதில் வயர்லெஸ் நெட்வொர்க் போலத் தோற்றமளிக்கும் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். அல்லது கம்ப்யூட்டர் திரை படத்துடன், இடது மேலாக சிறிய கட்டத்துடன் இருக்கும் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் நெட்வொர்க் அமைப்புகள் எல்லாம் காட்டப்படும். இதில் ஏரோபிளேன் நிலை என்ற வகையில் உள்ள செயல்பாட்டிற்கான ஐகானும் காட்டப்படும்.
டெஸ்க்டாப் ஷார்ட் கட் வழிகளை என்னால் உருவாக்க முடியுமா?: நிச்சயமாக உருவாக்க முடியும். நீங்கள் ஷார்ட் கட் கீ தொகுப்பு ஏற்படுத்த விரும்பும் அப்ளிகேஷன் புரோகிராமினைத் (வேர்ட் போன்றவை) திறந்து கொள்ளுங்கள். கீழாக உள்ள டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Pin to Taskbar என்பதில் கிளிக் செய்திடவும். இனி அது எப்போதும் கீழாக அந்த ஷார்ட் கட் ஐகான் காட்சி அளிக்கும்.
எட்ஜ் பிரவுசர் பிடிக்கவில்லையா?: விண்டோஸ் 10 சிஸ்டத்தின் மிக முக்கியமான சிறப்பான வசதி, அதனுடன் மாறா நிலையில் தரப்படும் எட்ஜ் (Edge) பிரவுசர் தான். இது முன்பு தரப்பட்ட (இப்போதும் கிடைக்கிற) இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைக்காட்டிலும் பல வகைகளில் சிறப்பானதாகும்.
இது புதியதாக இருப்பதால், பழைய வேகத்தில் உங்களால் தேடித் தேடி இயக்க முடியாது. எனவே, எட்ஜ் சிறிது காலத்திற்கு வேண்டாம் எனில், அதனுடன், குரோம், பயர்பாக்ஸ் அல்லது ஏதேனும் ஒரு பழைய பிரவுசரையும் வைத்து இயக்கிப் பாருங்கள். இடையே, எட்ஜ் பிரவுசரிலும் இயங்கிப் பார்க்கவும். காலப் போக்கில், எட்ஜ் பிரவுசர் பழகியவுடன், அதனையே இயக்க தொடங்கிவிடுவீர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக