கணணி மையம் (Windows 10) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணணி மையம் (Windows 10) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 மே, 2018

விண்டோஸ் 10 ஏப்ரல் அப்டேட் ரகசிய அம்சங்கள்.!

விண்டோஸ் 10 இயங்குதளத்துக்கான ஏப்ரல் 2018 அப்டேட் வெளியிடப்பட்டு விட்டது. டைம்லைன் மற்றும் நியர்பை ஷேரிங் போன்ற அம்சங்கள் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இத்துடன் செட்டிங்ஸ் ஆப் முன்பை விட பெரியதாகவும் சிறப்பாகவும் மாற்றப்பட்டு இருக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு பயனுள்ள அம்சங்களும் புதிய அப்டேட் கொண்டிருக்கிறது.

புதன், 1 பிப்ரவரி, 2017

விண்டோஸ் 10: இசை இயக்கும் செயலிகள்

சில ஆண்டுகளுக்கு முன்பு, விண்டோஸ் இயக்கத்தில் எந்த இயக்க முறைமையினைப் பயன்படுத்தி வந்தாலும், 'விண் ஆம்ப்' (WinAmp) என்னும் புரோகிராம் பாடல்கள் கேட்க பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன் பின் வந்த பல செயலிகள், விடியோ மற்றும் ஆடியோ பைல்களை இயக்கப் பல வசதிகளுடன் இலவசமாகக் கிடைத்ததால், விண் ஆம்ப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இறுதியில், அந்த நிறுவனமே, அதனை இணையத்திலிருந்து நீக்கிவிட்டது. இன்னும் பழைய விண்டோஸ் 98, விண்டோஸ் எக்ஸ்பி இயக்கமுறைமை உள்ள கம்ப்யூட்டர்களில், சிலர் விண் ஆம்ப் செயலியைப் பயன்படுத்துவதனைக் காணலாம்.

செவ்வாய், 17 ஜனவரி, 2017

விண்டோஸ் 10ல், வலது ஓரத்தில் அமைந்துள்ள நோட்டிபிகேஷனுக்கான ஐகானை அகற்ற

விண்டோஸ் 10 சிஸ்டம் Action Centre என்ற ஒன்றை அறிமுகம் செய்தது. இங்கு நமக்கான நோட்டிபிகேஷன் மற்றும் செட்டிங்ஸ் அமைப்பு மாறி மாறிக் காட்டப்படுகிறது.

திங்கள், 16 ஜனவரி, 2017

விண்டோஸ் 10 சுருக்கு விசைகள்

கம்ப்யூட்டர் பயன்பாட்டில், மவுஸ் சாதனம் நாம் எளிதாக சில செயல்பாடுகளை மேற்கொள்ள உதவியாய் உள்ளது. டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுக்க, காப்பி செய்திட, பேஸ்ட் செய்திட என இதன் உதவிகளைப் பட்டியலிடலாம். இருப்பினும், பலர் இதே செயல்பாடுகளை, கீ போர்டில் உள்ள கீகளை இயக்குவதன் மூலம் மேற்கொள்ளவே விரும்புவார்கள். இவற்றை 'ஷார்ட் கட் கீகள்' என அழைக்கிறோம். கீ போர்டின் மூலம் செயல்பாடுகளை மேற்கொள்வது, விரைவாகப் பணி முடிக்கப் பலருக்கு உதவுகிறது. மவுஸ் பயன்படுத்த விரும்பினால், நம் கரங்களை கீ போர்டில் இருந்து எடுத்து பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே, பலர், கீ போர்ட் விசைகளைப் பயன்படுத்தியே செயல்களை மேற்கொள்கின்றனர். இவர்களுக்கு ஷார்ட் கட் கீகள் பெரிதும் உதவுகின்றன.

செவ்வாய், 29 நவம்பர், 2016

விண்டோஸ் 10 டாஸ்க் பார்

விண்டோஸ் 10 சிஸ்டத்தின் டாஸ்க் பார், இதற்கு முன் வந்த விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் தரப்பட்டவை போல் தான் அமைக்கப்பட்டு இயங்குகிறது. கம்ப்யூட்டரில் செயல்படும் அனைத்து அப்ளிகேஷன்களுக்கும், குறுக்கு வழிகளையும், ஐகான்களையும் கொண்டு நமக்கு உதவுகிறது. ஆனால், விண்டோஸ் 10 சிஸ்டம், இந்த டாஸ்க் பாரினை நம் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துக் கொள்ள பல வழிகளைக் கொண்டுள்ளது. அவற்றை இங்கு சற்று விரிவாகக் காணலாம்.

புதன், 17 ஆகஸ்ட், 2016

வின்டோஸ் 10ல் அன் இன்ஸ்டால்

விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் பல சிறிய புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன. இவை தேவையில்லை எனும் பட்சத்தில் அன் இன்ஸ்டால் செய்திட முயன்றால், இவற்றில் அதற்கான ஆப்ஷன் தரப்படவில்லை. எவ்வாறு இவற்றை அன் இன்ஸ்டால் செய்து நீக்கலாம்?

எட்ஜ் பிரவுசரில் பேவரிட் குறிப்புகள் எந்த போல்டரில் வைக்கப்படுகின்றன

எட்ஜ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், நாம் குறித்து வைக்கும் இணையத் தளங்களுக்கான லிங்க் முகவரிகள், “Favorites” என அழைக்கப்படுகின்றன. பயர்பாக்ஸ் அல்லது குரோம் பிரவுசர்களில் இவை “Bookmarks” எனக் காட்டப்படுகின்றன. எந்தப் பெயரில் அழைத்தாலும், இவை ஒன்றையே குறிக்கின்றன. எட்ஜ் பிரவுசரில், பேவரிட் தளங்கள் குறித்த குறிப்பு எங்கு பதியப்படுகின்றன என்று தெரிந்தால், அவற்றை நிர்வகிப்பது எளிதாக இருக்கும்.

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

விண்டோஸ் 10 சில புதிய விநோதங்கள்

விண்டோஸ் 10ல், மைக்ரோசாப்ட், மக்கள் விரும்பும் அனைத்தையும் மீண்டும் கொண்டு வந்துள்ளது. அத்துடன் பல புதிய வசதிகளையும் அளித்துள்ளது. அந்தப் புதிய வசதிகளில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

விண்டோஸ் 10 சுருக்கு விசைகள்

1. Win + I: விண்டோஸ் கீயுடன் 'I' இணைக்கப்பட்டு அழுத்தப்படும்போது, நமக்கு All Settings விண்டோ கிடைக்கிறது. மைக்ரோசாப்ட், இப்போதைய இயக்க முறைமையில், கண்ட்ரோல் பேனலில் உள்ள அனைத்து இயக்க பிரிவுகளையும், புதியதான Settings செயலிக்கு மாற்றிவிட்டதால், இந்த சுருக்கு விசை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

விண்டோஸ் 10: பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க்

இந்த டிஜிட்டல் உலகில் ஒருவர் ஏறத்தாழ குறைந்தது பத்து பாஸ்வேர்ட்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டியதுள்ளது. வங்கிகள் 180 நாட்களுக்கு மேல், கட்டாயமாக பாஸ்வேர்டை மாற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்துகின்றன. இதில், வங்கிகள், புரபைல் (Profile) பாஸ்வேர்ட் மற்றும் ட்ரான்ஸாக்சன் (Transaction) என்ற ஒன்றையும் அமைக்கச் சொல்லியும், அவற்றையும் குறிப்பிட்ட காலக் கெடுவில் மாற்றச் சொல்லியும் அறிவுறுத்துகின்றன.

விண்டோஸ் 10 முதலாண்டு மேம்படுத்தல்

விண்டோஸ் 10 இயக்க முறைமை பொது மக்களுக்கு வழங்கப்பட்டு ஓராண்டாகிவிட்டது. இனி இலவசமாக விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள முடியாது. கட்டணம் செலுத்தித் தான் பெற வேண்டும். இந்த நிலையில், விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கான, பல வகை வசதி மேம்படுத்தலை, ஆகஸ்ட் 2 அன்று மைக்ரோசாப்ட் வெளியிட்டது. ஏற்கனவே, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இயங்கிக் கொள்பவர்களுக்கு இது எளிதாகக் கிடைத்து. பலவகை மாற்றங்களையும், புதிய வசதிகளையும் இந்த முதலாண்டு அப்டேட் மூலம் மைக்ரோசாப்ட் தந்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.

செவ்வாய், 5 ஜூலை, 2016

விண்டோஸ் 10 சிஸ்டத்தில் எழுத்துருக்கள்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்க முறைமைகள், சில குறிப்பிட்ட வகை எழுத்துருக்களை ஏற்றுச் செயல்படும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. சில பதிப்பாளர்கள், இந்த இயக்க முறைமையில் இயங்கும் வகையில், எழுத்துருக்களை உருவாக்கிப் பயன்படுத்துகின்றனர். நம் டாகுமெண்ட்கள் சிறப்பாக அமைய வேண்டுமென்றால், நம் கலைப் படைப்புகள், அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்றால், பிற நிறுவனங்கள் தரும் இந்த எழுத்துருக்களையும் பயன்படுத்த வேண்டியதுள்ளது. இவற்றை எப்படி, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் பதிந்து பயன்படுத்தலாம் மற்றும் தேவைப்படாத போது நீக்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.

செவ்வாய், 24 மே, 2016

விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறும்போது, மறைந்துபோகும் விளையாட்டுககளை மீண்டும் பெற

ஏற்கனவே விண்டோஸ் 7 சிஸ்டத்தில், சிஸ்டத்துடன் இன்ஸ்டால் செய்யப்பட்ட கேம்ஸ் விளையாட்டுகள், விண் 10க்கு மேம்படுத்தப்படுகையில் மறைந்து போகும்.

புதன், 18 மே, 2016

விண்டோஸ் 10க்கு மாறிய பின்னர் மீண்டும் விண்டோஸ் 7 க்கு மாற

உங்கள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 பதிந்து 30 நாட்கள் இன்னும் ஆகவில்லை என்றால், நீங்கள் பழைய விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளலாம். அதற்கான வழி முறைகளை இங்கு தருகிறேன்.

செவ்வாய், 17 மே, 2016

எட்ஜ் பிரவுசர்

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிய பின்னரும், பலர் எட்ஜ் பிரவுசரைப் பயன்படுத்தலாமா, வேண்டாமா? என்ற தயக்கத்தில் உள்ளனர். விண்டோஸ் 10 சிஸ்டத்தின் மிகச் சிறந்த பயன் தரும் ஒரு செயலியாக எட்ஜ் பிரவுசர் கிடைத்துள்ளது. தேவையற்ற சந்தேகங்களால், இந்த பிரவுசர் தரும் புதிய பல வசதிகளை இழந்துவிடக் கூடாது.

அறிந்து கொள்ள வேண்டிய விண்டோஸ் 10

ஒரு சிலர் தாங்களாகவே, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொண்டுள்ளனர். சிலரோ, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தொடர்ந்த தூண்டுதல்களால் மாறிக் கொண்டு இயக்கி வருகின்றனர். புதிய சிஸ்டம் எதிர்பாராத வகையில் சில மாற்றங்களைக் கொண்டிருக்கும். பழகாத இது போன்ற விஷயங்கள், நமக்கு ஒரு வித ஏமாற்றத்தைக் கொடுக்கும். குறிப்பாக, நீங்கள் விண்டோஸ் 8 அல்லது 8.1 பயன்படுத்தாமல் இருந்தால், விண்டோஸ் 10 பல விஷயங்களில், சிறிய அளவில் ஏமாற்றம் கொடுக்கலாம். “இங்கு என்ன செய்வது என்றே தெரியவில்லையே” என நீங்கள் பலமுறை ஆதங்கப்படலாம்.

விண்டோஸ் 10ல் கண்ட்ரோல் பேனல் பிரிவை எளிதாக அடைய

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ஸ்டார்ட் மெனுவின் கீழாக, முந்தைய விண்டோஸ் இயக்கங்களில் எளிதாகக் கிடைத்த கண்ட்ரோல் பேனல் தரப்பட்டுள்ளது. இதனை Settings app என அழைக்கின்றனர்.

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறும்போது “இழக்கும் பைல்கள்”

விண்டோஸ் 10க்கு மாறிக் கொள்வதே நல்லது.

விண்டோஸ் 7, விண்டோஸ் 8/8.1 லிருந்து, விண்டோஸ் 10க்கு மாறும்போது, எந்த புரோகிராமும், பைல்களும், போட்டோக்களும், டாகுமெண்ட்களும் இழக்கப்பட மாட்டாது. ஆனால், சில நீக்கப்படும். தொடர்ந்து கிடைக்காது. அவை எவை எனத் தருகிறேன்.

ஸ்டார்ட் மெனு உருவாக்கம்

மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் தொகுப்பினை அறிமுகப்படுத்திய போது, பயனாளர்கள் பலரும் பாராட்டி, பயன்படுத்தி, அனுபவித்த ஒரு டூல், ஸ்டார்ட் மெனு ஆகும். மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஸ்டார்ட் மெனுவினை, விண்டோஸ் 95 சிஸ்டத்தில் அறிமுகம் செய்தது. அதன் பின்னர், இதன் தோற்றத்தில் பெரிய மாற்றம் ஏதும் தரப்படவில்லை. இருப்பினும், வாடிக்கையாளர்கள், இதனைப் பெரிதும் ரசித்துப் பயன்படுத்தினார்கள். அதனால் தான், விண்டோஸ் 8 சிஸ்டம், ஸ்டார்ட் மெனு இல்லாமல் அறிமுகமானபோது, அனைவரும் திகைத்துப் பின் வாங்கினார்கள். பெரும் அளவில் குழப்பக் கூக்குரல்கள் எழுந்தன. இந்த நீக்கத்திற்குக் காரணமான பல புரோகிராமர்கள், அலுவலர்களை மைக்ரோசாப்ட் வீட்டுக்கு அனுப்பியது.

திங்கள், 9 மே, 2016

விண்டோஸ் 10 வண்ண ஓடுகளை நீக்க முடியுமா?

பலர் விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிய நிலையில், தங்கள் விருப்பப்படி சிலவற்றை மாற்ற முடியுமா என்று கேட்டு கடிதங்களை அனுப்புகின்றனர். அவற்றில் ஒன்று, விண்டோஸ் 10 தன் ஸ்டார்ட் மெனுவில் காட்டும் புரோகிராம்களுக்கான வண்ண ஓடுகள். ஆனால், பலர் இந்த ஓடுகள் வரிசை தங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று கூறுகின்றனர். எப்போதும் தகவல்களைத் தந்து கொண்டிருக்கும் (சீதோஷ்ண நிலை, செய்தி தலைப்புகள் போன்றவை) டைல்கள் இவர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல