ஒரே டேட்டா - பல செல்கள்: எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டா அமைக்கையில், ஒரே டேட்டாவினை பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு டேட்டாவினைக் காப்பி செய்து, செல்களில் சென்று பேஸ்ட் செய்திடும் பல முனை வேலையில் இறங்க வேண்டாம். எந்த செல்களில் காப்பி செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுங்கள். இவை வரிசையாக இல்லை என்றால், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுங்கள்.
பின்னர் டேட்டாவினை ஒரு செல்லில் டைப் செய்திடுங்கள். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு என்டர் தட்டுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த செல்களில் எல்லாம் டேட்டா காப்பி செய்யபப்பட்டிருக்கும்.
எக்ஸெல்: சில குறிப்புகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும்.
Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.
ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home)அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
சார்ட்களில் டேட்டா லேபிள்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சார்ட்களுக்கு டேட்டா லேபிள் அமைப்பது அந்த சார்ட் தெரிவிக்கும் முக்கிய தகவல்களை எடுத்துக் காட்டும். நீங்கள் அமைக்கும் சார்ட் பார்மட்டைப் பொறுத்து இந்த லேபிள்கள் தகவல்களைக் காட்டுவதில் சிறப்பிடங்களைப் பெறுகின்றன. இது எப்படி என்று பார்க்கலாம்.
எடுத்துக் காட்டாக நீங்கள் ஒரு பை - சார்ட் அமைத்தால் அதில் டேட்டாவிற்கான லேபிள் இல்லை என்றால் நிச்சயம் தகவல்கள் என்ன சொல்ல வருகின்றன, ஒன்றுக்கொன்று எப்படித் தொடர்புடையன என்று தெரியாது. இந்த டேட்டா லேபிள்களை எப்படி அமைப்பது என்று காணலாம்.
எக்ஸெல் 2007 பயன்படுத்துபவர்களுக்கு:
1. முதலில் எந்த சார்ட்டுக்கு டேட்டா லேபிள் அமைக்க வேண்டுமோ அதன் மீது கிளிக் செய்து இயக்கவும்.
2. லேஅவுட் டேப் ரிப்பன் காட்டப்படுவதனை உறுதி செய்திடவும்.
3. இதில் உள்ள Data Labels என்ற டூலைக் கிளிக் செய்திடவும். இந்த வகையில் எந்த இடத்தில் டேட்டா லேபிள்களை அமைக்க வேண்டும் என்பதற்கு பல ஆப்ஷன்களை எக்ஸெல் தருகிறது.
4. எங்கிருந்தால் சிறப்பாக அந்த லேபிள் தன் பணியைச் செய்திடுமோ அங்கு வைக்கவும்.
அடுத்து எக்ஸெல் 2003 பயன்படுத்துபவர்களுக்கு:

2. பின் Chart மெனுவிலிருந்து Chart Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கே Chart Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
3. இந்த பாக்ஸில் உள்ள Data Lables என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும்.இந்த டயலாக் பாக்ஸில் இடது பக்கம் பல்வேறு வகையான டேட்டா லேபிள்களைக் காட்டும். உங்களுடைய சார்ட்டின் தன்மைக்கேற்ப காட்டப்படும் டேட்டா லேபிள்களின் எண்ணிக்கை மற்றும் தன்மை மாறும்.
4. இந்த டேட்டா லேபிள்களைப் பார்த்தால் அடிப்படையில் ஐந்து வகைகள் இருப்பதை உணரலாம். ஒவ்வொன்றும் டேட்டாவின் தன்மை மற்றும் லேபிளின் வகை ஆகியவற்றை இணைப்பதில் வேறுபட்டிருக்கும். இவற்றிலிருந்து உங்கள் நோக்கத்தை வெளிக்காட்டும் சிறந்த லேபிள்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
5. OK கிளிக் செய்திடவும். சார்ட் லேபிள்களுடன் வடிவமைக்கப்பட்டு காட்டப்படுவதற்கு தயாராக இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக