கட்டங்களை அமைத்து டெக்ஸ்ட், படம் அமைக்க: வேர்ட் தொகுப்பில் பக்கங்களை அமைக்கையில் டெக்ஸ்ட், வரை படங்கள், படங்கள், கிளிப் ஆர்ட் எனப் பலவகை அமைப்பை டாகுமெண்ட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நமக்கு கோடுகள் அமைந்த கட்டங்கள் இருந்தால் இவற்றை சரியான இடத்தில் அமைத்து அழகாக டாகுமெண்ட்டை உருவாக்க வசதியாக இருக்கும்.
இதற்காக டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியாக கட்டங்கள் அமைத்தால் அவையும் அச்சில் வந்து டாகுமெண்ட்டின் அழகைக் கெடுத்துவிடும். இதற்குப் பதிலாகப் பின்னணியில் ஒரு கட்டம் அமைத்து அவை நீக்கப்படுவதற்கான வழியையும் அமைத்துத் தரலாம்.
இதற்கு View மெனுவில் Toolbars என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
பின் கிடைக்கும் பிரிவுகளில் Drawing என்பதில் கிளிக் செய்திடவும்.
இப்போது Drawing Toolbar கிடைக்கும்.
இதில் Draw என்பதில் கிளிக் செய்து பின் Grid என்பதைக் கிளிக் செய்திடவும்.
பின் உள்ள பிரிவில் 'Display gridlines on screen' என்பதைத் தேர்ந்தெடுத்து நெட்டு வாக்கிற்காகவும் படுக்கை வாகிற்காகவும் ஒரு அளவைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.
இதன் பின் OK கிளிக் செய்து வெளியேறவும்.
இந்த கிரிட் கட்டம் தோற்றத்தில் மட்டும் வைத்துப் பயன்படுத்தும் வகையில் நமக்குக் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி நாம் டெக்ஸ்ட் உட்பட படங்கள், வரைபடங்கள், போட்டோக்கள் போன்றவற்றைச் சரியாக அமைக்கலாம்.
வரிகளை ஒழுங்கு படுத்த: டாகுமெண்ட் அமைத்த பின்னர், சில வேளைகளில், ஒரு பாராவில் அனைத்து வரிகளும் ஒரே உயரத்தில் இல்லாமல் அமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம்.
இதற்குக் காரணம், நாம் தேர்ந்தெடுத்துள்ள எழுத்துருக்கேற்ற வகையில், வரிகளுக்கிடையேயான உயரம் அமைக்கப்படாததே காரணம். பாரா பார்மட்டிங் டயலாக் பாக்ஸ் மூலம், தானாக லைன் ஸ்பேசிங் அமைக்கும் (Auto line spacing) முறை தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தால், வேர்ட், வரியில் உள்ள மிகப் பெரிய எழுத்துருவினைக் கண்டறிந்து, அதன் அளவிற்கேற்ப, அதற்கேற்ற வகையில் வரிகளுக்கிடையேயான இடைவெளியை அமைக்கிறது.
ஒரு வரியில் உள்ள எழுத்துருவுக்கும், அடுத்த வரியில் உள்ள எழுத்துருவிற்கும் அளவில் வித்தியாசம் இருந்தால், வரிகளுக்கிடையேயான இடைவெளி வேறுபாடாக அமைகிறது. இந்த பிரச்னைக்குத் தீர்வு காண, வரிகளுக்கிடையேயான இடைவெளியைச் சரியாக நாமே அமைக்க வேண்டும்.
இதற்கு ஒரு வழி உள்ளது. நாம் எந்த அளவில் எழுத்துருவினைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அதன் அளவில் 120 சதவீத அளவில் வரிகளுக்கிடையே இடைவெளி அமைக்கலாம். எடுத்துக் காட்டாக டைம்ஸ் ரோமன் எழுத்துருவில் 10 பாய்ண்ட் அளவில் எழுத்துக்களைப் பயன்படுத்தினால், வரிகளுக்கான இடைவெளி 12 பாய்ண்ட்களாக இருக்க வேண்டும்.
முதல் எழுத்து அலங்காரம்: வேர்ட் டாகுமெண்ட்களில், பாராவின் முதல் எழுத்தை அல்லது கட்டுரையின் தொடக்க பத்தியின் முதல் எழுத்தினைச் சற்றுப் பெரிதாக, அலங்காரத்துடன் அமைப்பார்கள். இது ஒரு வித அழகு படுத்தும் முயற்சியே.
இதில் ஒரு வகை Drop cap என்பதாகும். இதனை எப்படி அமைப்பது எனப் பார்க்கலாம்.
1. டெக்ஸ்ட்டை வழக்கம் போல வேர்ட் புரோகிராமில் அமைக்கவும்.
2. பத்தியில் முதல் எழுத்தை மட்டும் தேர்ந்தெடுக்கவும்.
3. ரிப்பனில் Insert டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
4. கிடைக்கும் Text குரூப்பில், Drop Cap என்பதன் மீது கிளிக் செய்திடவும். வேர்ட் ட்ராப் கேப் அமைத்திட சில பொதுவான ஆப்ஷன்களைக் காட்டும்.
5. இங்கு Drop Cap Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் ட்ராப் கேப் டயலாக் பாக்ஸைக் காட்டும்.
6. உங்கள் விருப்பப்படி, ட்ராப் கேப் எப்படி அமைய வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
7. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
---------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக