திங்கள், 9 மே, 2016

யு.எஸ்.பி. தொழில் நுட்ப வளர்ச்சி

தற்போது வரும் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில், இரண்டு யு.எஸ்.பி. போர்ட் பழைய வகை மற்றும் புதிய வகை (யு.எஸ்.பி. 3) தரப்படுகிறது. இதற்கிடையே, யு.எஸ்.பி. 4 போர்ட் தொழில் நுட்பத்திற்கு அதற்கான ஆய்வமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது. பலர் இது யு.எஸ்.பி.3 இன் இன்னொரு வடிவமே என்று கூறி வருகின்றனர். 8 அங்குலம், 5.25 அங்குலம் மற்றும் 3.5 அங்குலம் என்ற அளவுகளில் வெளியான பிளாப்பி டிஸ்க் பயன்பாட்டிற்கு, யு.எஸ்.பி. போர்ட் மற்றும் ப்ளாஷ் ட்ரைவ்கள் முற்றுப் புள்ளி வைத்தன.



யு.எஸ்.பி. போர்ட் மற்றும் ட்ரைவ் வகைகளும் வேகமாக வளர்ந்து இன்றைய நிலையை அடைந்துள்ளன. Universal Serial Bus என்பதன் சுருக்கமே, யு.எஸ்.பி. 1990 ஆம் ஆண்டு வாக்கில், இதன் வரையறை அமைக்கப்பட்டு, கம்ப்யூட்டர் தொழில் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டது. கீ போர்ட், குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக் காட்டும் சாதனங்கள், டிஜிட்டல் கேமராக்கள், பிரிண்டர்கள், போர்ட்டபிள் மீடியா பிளேயர்கள், டிஸ்க் ட்ரைவ்கள், நெட்வொர்க் அடாப்டர்கள் ஆகியவை பெர்சனல் கம்ப்யூட்டர்களுடன் இணைவது குறித்த தொழில் நுட்ப வரையறையை யு.எஸ்.பி. கொண்டுள்ளது.

தற்போது, ஸ்மார்ட் போன், பெர்சனல் டிஜிட்டல் அசிஸ்டண்ட் சாதனங்கள் மற்றும் விடியோ கன்சோல் சாதனங்கள் ஆகியவற்றுக்கும் இது பொருந்தி வருமாறு அமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. படிப்படியாக வளர்ந்து, சென்ற ஜூலை 2013ல், யு.எஸ்.பி. 3.1 வர்த்தக ரீதியாக மக்களுக்குக் கிடைத்தது. புதியதாக, யு.எஸ்.பி. வகை 4 விரைவில் வெளி வர இருக்கிறது. இது முன்பு வெளியான மற்றும் தற்போது புழக்கத்தில் இருக்கும் அனைத்து யு.எஸ்.பி. கேபிள்களையும் மாற்ற இருக்கிறது.

நம் வீட்டில், அலுவலகத்தில் சற்று சுற்றிப் பார்த்தால், Universal Serial Bus எனப்படும் யு.எஸ்.பி. கேபிள்களுடன் பயன்படுத்தப்படும் பல சாதனங்களைப் பார்க்கலாம். மொபைல் போன்கள், கேமராக்கள், தொலைக் காட்சிப் பெட்டிகள், விடியோ பிளேயர்கள், பிரிண்டர்கள், தொலைபேசிகள் என இவற்றின் வரிசை நீண்டு கொண்டே செல்லும். ஓராண்டில், ஏறத்தாழ 300 கோடிக்கு மேல், யு.எஸ்.பி. போர்ட்கள் விற்பனைக்கு அனுப்பப்படுவதாக ஒரு தகவல் கூறுகிறது. வர இருக்கும் யு.எஸ்.பி. வகை 4, இதன் பயன்பாட்டை இன்னும் அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

யு.எஸ்.பி. வகை 4 குறித்து அறிந்து கொள்ளும் முன், யு.எஸ்.பி. வகை A மற்றும் யு.எஸ்.பி. வகை B, இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடுகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாக, யு.எஸ்.பி. தர வரிசை மற்றும் பதிப்பு (versions), அதன் டேட்டா பரிமாற்ற இயக்க வேகம் மற்றும் செயல் திறன் கொண்டே வரையறை செய்யப்படுகின்றன. யு.எஸ்.பி. வகை (Type) என்பது அதன் வடிவமைப்பையும், இதனை இயக்கும் வயர் அமைப்பு மற்றும் போர்ட் ஆகியவற்றைக் குறிக்கிறது.

யு.எஸ்.பி. டைப் A (USB Standard-A, USB Type -A) யு.எஸ்.பி. ஸ்டாண்டர்ட் A எனவும் அழைக்கப்பட்டது. இது தட்டையாகவும், செவ்வக வடிவிலும் அமைக்கப்பட்டது. ஒரு யு.எஸ்.பி. கேபிளில், Type A கனெக்டர் (A-male connector) கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களில் இணைக்கப்படும் முனையாக இருக்கும். இதன் இணைப்பினை வாங்கிக் கொள்வது A- female போர்ட் என அழைக்கப்படும்.

பலவகையான யு.எஸ்.பி. பதிப்புகள் (USB 1.1, USB 2.0, USB 3.0) USB Type-A வடிவமைப்பினையே கொண்டிருந்தன. அதாவது, டைப் ஏ கனக்டர் (Type-A connector) எப்போதும் டைப் ஏ போர்ட்டுடனேயே இணைந்தன. எடுத்துக் காட்டாக, யு.எஸ்.பி. பதிப்பு 3 கொண்ட எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ், யு.எஸ்.பி. போர்ட் 2 உடனும் இணைந்து செயல்பட்டது. அதே போல, வயர்களால் ஆன யு.எஸ்.பி. கேபிள்களைக் கொண்டிருந்த, சிறிய சாதனங்களான, மவுஸ், கீ போர்ட், நெட்வொர்க் அடாப்டர் போன்றவை எப்போதும் யு.எஸ்.பி. ஏ கனக்டர்களையே பயன்படுத்தின.

யு.எஸ்.பி. 3 கனக்டர்களும், போர்ட்களும், யு.எஸ்.பி. வகை 2ஐக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் பின்களைக் கொண்டுள்ளன. ஏனென்றால், அப்போதுதான், கூடுதல் வேகத்தில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். இருப்பினும், இந்த பின்கள் அமைக்கப்பட்ட வகையானது, முந்தைய யு.எஸ்.பி. 2 போர்ட்களிலும், இவற்றைப் பயன்படுத்த முடிகிறது.

யு.எஸ்.பி. வகை 2: வழக்கமான யு.எஸ்.பி. கேபிளில், ஒரு முனையில் டைப் பி கனக்டர் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. இதனை Type B- male என அழைக்கின்றனர். இணைக்கப்படும் சாதனங்களில் உள்ள யு.எஸ்.பி. போர்ட் Type B- female என அழைக்கப்படுகிறது. பிரிண்டர், போன் மற்றும் எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் போன்றவை இதனைப் பயன்படுத்துகின்றன.

தனி நிறுவன யு.எஸ்.பி. (Proprietary USB)
அனைத்து சாதனங்களும் இதே போன்ற ஒரே மாதிரியான யு.எஸ்.பி. கேபிள்களையும், போர்ட்களையும் கொண்டுள்ளன என்று நாம் ஒட்டு மொத்தமாகக் கொள்ள முடியாது. சில நிறுவனங்கள், தங்களின் சொந்த தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட யு.எஸ்.பி. வகைகளைக் கொண்டுள்ளன. டைப் பி ப்ளக் மற்றும் கனக்டர் ஆகியவற்றின் இடத்தில் தங்களுடைய வடிவமைப்பில் உருவானவற்றை அமைத்துக் கொண்டுள்ளன. இதற்கு எடுத்துக் காட்டாக, நம் அனைவருக்கும் அறிமுகமான ஐபேட் மற்றும் ஐபோன்களைக் கூறலாம். வழக்கமான டைப் பி முனையில், இவை 30 பின் அல்லது லைட்னிங் கனக்டர் அமைப்பைக் கொண்டுள்ளன. இவற்றிலும் டைப் ஏ வழக்கம்போலவே தரப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

யு.எஸ்.பி. வகைகள் வளச்சி:

1. யு.எஸ்.பி.1.1: ஆகஸ்ட், 1988ல் வெளியானது. எல்லாரும் பயன்படுத்திய முதல் யு.எஸ்.பி. பதிப்பு இதுதான். இதற்கு முன் வந்த யு.எஸ்.பி.1, நுகர்வோர் சாதனங்களில் இடம் பெறவே இல்லை. இதன் அதிகபட்ச வேகம் 12Mbps. இப்போது இது வழக்கத்தில் இல்லை.

2. யு.எஸ்.பி.2: 2000 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இது வெளியானது. உச்ச பட்ச வேகத்தில் இயங்கும்போது 480Mbps வேகத்தில் டேட்டா பரிமாறப்படும். இதன் அதிக பட்ச மின் சக்தி பரிமாறும் திறன் 2.5V, 1.8A ஆக உள்ளது. இது யு.எஸ்.பி. 1.1. பதிப்புடனும் செயல்படும்.

3. யு.எஸ்.பி. 3: நவம்பர், 2008ல் இது அறிமுகமானது. மிக அதிக வேகத்தில் இயங்கும்போது, இதன் டேட்டா பரிமாற்ற வேகம் 5Gbps ஆக உள்ளது. யு.எஸ்.பி. 3 போர்ட் (கனக்டரும் கூட) பொதுவாக நீல நிறத்தில் இருக்கும். இது முந்தைய பதிப்பான யு.எஸ்.பி. 2 உடன் இணைந்தும் செயல்படும்.

4. யு.எஸ்.பி. 3.1: 2013 ஆம் ஆண்டில், ஜூலை 16ல் வெளியானது. இது யு.எஸ்.பி. 3 பதிப்பின் வேகத்தைக் காட்டிலும் இரு மடங்கு வேகத்தில் (10Gbps) இயங்குகிறது. இதனை இப்போது SuperSpeed USB 10 Gbps எனவும் அழைக்கின்றனர். USB 3.1 ஐப் பயன்படுத்தும் சாதனங்கள் விரைவில் வரும் என எதிர்பார்க்கும் நிலையில், யு.எஸ்.பி. Type C வகையிலேயே இனி சாதனங்கள் வரும் என கருத்து தெரிவிப்பவர்களும் உண்டு.

5. யு.எஸ்.பி. டைப் சி: இதன் போர்ட் மற்றும் கனக்டர், மைக்ரோ பி யு.எஸ்.பி.யில் உள்ளது போலவே உள்ளன. Type- C போர்ட் அளவு 8.4 மிமீ x 2.6 மிமீ என்ற அளவில் உள்ளது. இதனால், மிகச் சிறிய அளவிலான சாதனங்களுடனும் இது இயங்கக் கூடியதாக உள்ளது. இதன் இன்னொரு அம்சம், இதனை எப்படி வேண்டுமானாலும், சாதனத்துடன் இணைக்கலாம்.

தற்போதைய யு.எஸ்.பி. ப்ளக்கினை இணைக்கையில், நம்மில் பெரும்பாலோர், அதனை மாற்றி வைத்து இணைக்க முயற்சி செய்து, பின் தலை மாற்றி, சரியாக போர்ட்டில் இணைப்போம். புதிய யு.எஸ்.பி. 4 வகையில், எப்படி வேண்டுமானாலும் இணைக்கலாம். இதுதான் சரியான இணைக்கும் பக்கம் என்று ஒன்று இல்லை. லைட்னிங் கனக்டர் என அழைக்கப்படும் ஆப்பிள் நிறுவன இணைப்புகள் போல, இந்த புதிய வகை வடிவமைக்கப்படுகிறது.

தற்போது புழக்கத்தில் வந்து கொண்டிருக்கும் Type- C USB, யு.எஸ்.பி. 3.1 ஐ சப்போர்ட் செய்திடும். இதனுடைய இயங்கும் வேகம் 10Gbps ஆக அதிகரிக்கும். இதன் அதிக பட்ச மின் சக்தி பரிமாறும் திறன் 20V(100W) and 5A ஆக உள்ளதால், தற்போது டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் போன்களை, யு.எஸ்.பி. கேபிள்கள் கொண்டு பவர் சார்ஜ் செய்வது போல, யு.எஸ்.பி. டைப் 4 வகை கனக்டர் மூலம், எதிர்காலத்தில் லேப்டாப்களையும் சார்ஜ் செய்திட முடியும். இணைப்புகளில் பயன்படுத்தும் வயரின் அளவும் குறையும்.

டைப் சி யு.எஸ்.பி. மற்றும் யு.எஸ்.பி. டைப் 3.1, இவற்றிற்கு முன் இயங்கிய யு.எஸ்.பி.வகை 3 மற்றும் வகை 2 உடன் இணைந்து செயலாற்றும். ஆனால், டைப் சி யு.எஸ்.பி.யுடன், டைப் ஏ போர்ட் மற்றும் ப்ளக் இணைக்கப்படவில்லை. எனவே, யு.எஸ்.பி. வகை 4, பரவலாக உலகெங்கும் பயன்பாட்டிற்கு வரும் முன்னால், யு.எஸ்.பி. 4, முந்தைய வகை யு.எஸ்.பி. வகையுடன் செயல்பட, இடையே ஓர் அடாப்டர் தேவையாய் இருக்கும்.

---------------------------------------------------
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல