இணையப் பயனாளர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பிரவுசராக, குரோம் இடம் பெற்று வருகிறது. சென்ற ஏப்ரல் மாதத்தில், குரோம் பிரவுசரை 56.75% பயனாளர்கள் பயன்படுத்தினர். அடுத்த இடத்தில் உள்ள பயர்பாக்ஸ் பிரவுசரை 14.24% பேரும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை, 12.14% பேரும் பயன்படுத்தினார்கள்.
குரோம் பிரவுசரை பெரும்பான்மையானவர்கள் பயன்படுத்தினாலும், இந்த பிரவுசர் தரும் பல பயனுள்ள நீட்சி செயலிகளை (Extension Programs) அதிகம் பேர் பயன்படுத்துவதில்லை என்று தெரிய வந்துள்ளது. குரோம் தரும் இந்த நீட்சி செயலிகள், கூகுள் தரும் அனைத்து செயலிகளுடனும் தொடர்பு கொண்டு இயங்கும் தன்மை உடையவை. மேலும், வேறு நிறுவனங்கள் தரும் நீட்சி செயலிகளைக் காட்டிலும், குரோம் தருபவை பாதுகாப்பானதும், கூடுதல் பயன் தருபவையும் ஆகும். அவை இயக்கத்திற்காக, இலவசமாகத் தரப்படுகின்றன என்ற தகவல் பலரிடம் இல்லை. அப்படியே தெரிந்திருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களைப் பலர் புறந்தள்ளி விடுகின்றனர் என்பதே உண்மை. அத்தகைய செயலிகள் குறித்து இங்கு பார்க்கலாம். கீழே தரப்பட்டுள்ளவற்றில் சிலவற்றை நீங்கள் தற்போது பயன்படுத்தி வரலாம். இருப்பினும், அதிக பயன் தரும் நிலை என்ற அடிப்படையில், இவை தரப்படுகின்றன.
Google Dictionary
கூகுள் தரும் நீட்சி செயலிகளில், அழகான அனைவரும் விரும்பும் செயலி Google Dictionary Chrome extension. இணையத்தை நாம் பயன்படுத்துகையில், நமக்கு ஏற்படும் பொருள் சார்ந்த தலைவலியை இது தீர்க்கிறது. பல வேளைகளில் நாம் ஆங்கில மொழியில் அமைந்த தளங்களைக் காண்கிறோம். அவற்றில் சில சொற்கள் என்ன சொல்கின்றன என்று புரியாது. அவற்றைப் புரிந்து கொண்டால் தான், அந்த தளம் சொல்ல வரும் தகவலை நாம் தவறின்றிப் புரிந்து கொள்ள இயலும். அத்தகைய சூழ்நிலையில் நமக்குக் கை கொடுக்கும் செயலி கூகுள் அகராதி. இதன் மூலம், நாம் அறியாத கடினமான ஒரு சொல்லின் பொருளை நாம் உணர்ந்து கொள்ள இயலும். அதே வேளையில், அந்த மொழியில், ஆங்கிலத்தில், நாம் அறிந்து வைத்திருக்கும் சொற்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துக் கொள்ள இயலும். இந்த செயலியை, கூகுள் தளத்திலிருந்து இலவசமாக இணைத்துக் கொள்ளலாம். இணைத்துக் கொண்ட பின்னர், நாம் பார்க்கும் இணைய தளத்தில், நாம் பொருள் காண விரும்பும் சொல்லைத் தேர்ந்தெடுத்து, பிரவுசரின் மெனு பாரில் உள்ள இதன் ஐகானில், இருமுறை கிளிக் செய்தால், உடன் அதன் பொருள் காட்டப்படும். அந்தப் பொருள் குறித்து மேலும் விளக்கம் தேவைப்பட்டால், அதில் உள்ள More என்ற சொல்லில் கிளிக் செய்தால், கூடுதல் விளக்கம் கிடைக்கும். இது நாம் கூகுள் தேடல் தளத்தில் define மற்றும் பொருள் தேடும் சொல்லைக் கொடுத்தால் கிடைக்கும் தளம் காட்டப்படும். இங்கு கிடைக்கும் ஆடியோ ஐகானில் கிளிக் செய்தால், அந்தச் சொல்லினை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று ஒலிக்கப்படும். Earth View from
Google Earth
கூகுள் எர்த் செயலி தரும் நம் பூமியின் படத்தினை அடிக்கடி பார்த்தால், நம் உள்ளத்திற்கு உற்சாகம் தோன்றும் அல்லவா! ஒரு சிலவற்றை நாம் மிகவும் விரும்பி, அதனை நம் திரைக் காட்சியாக அமைக்க பிரியப்படுவோம். அதற்கான உதவியை இந்த மீட்சி செயலி நமக்குத் தருகிறது. பிரவுசரில், புதிய டேப் ஒன்றைத் தொடங்க கிளிக் செய்கையில், காலியாகத்தான் புதிய பக்கம் கிடைக்கும். இது சில விநாடிகள் என்றாலும், நமக்கு அது அலுப்பினைத் தரும். அதற்குப் பதிலாக, நம் பூமியின் விதவிதமான படங்கள் கிடைத்தால் உற்சாகமாக இருக்குமே. ஒவ்வொரு புதிய இணையப் பக்கத்திற்கான டேப் திறக்கும்போதும், விண்ணைச் சுற்றி வரும் துணை செயற்கைக் கோளிலிருந்து (சேட்டலைட்டிலிருந்து) எடுக்கப்பட்ட பூமியின் அழகான படம் காட்டப்படுகிறது. இந்தக் காட்சி போல இன்னும் என்ன கிடைக்கும் என்று அறிய ஆவலா? இங்கு கிடைக்கும் மெனு கிளிக் செய்து, Earth View Web Gallery க்குச் செல்லவும். Leanback Mode என்பதனைத் தேர்ந்தெடுத்து, உலகின் பல பாகங்களிலிருந்து எடுக்கப் பட்ட பூமியின் தோற்றப் படங்களை ஒரு ஸ்லைட் ஷோவாகப் பார்க்கலாம். Google Similar Pages நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளத்திற்கு இணையான வேறு தளப் பக்கங்களைக் காண வேண்டுமா? அதற்கான உதவியை இந்த நீட்சி செயலி தருகிறது. இதன் மூலம் நம் ஆர்வத்திற்கேற்ற இணைய தளங்களை வடிகட்டி காணலாம். இதனை குரோம் இந்த நீட்சி செயலி மூலம் மேற்கொண்டு நமக்குத் தருகிறது. இணையம் என்னும் கடலில் நாம் விரும்பும் பொருள் மீதான அனைத்து தளங்களையும் நாம் காண இயலாது. இந்த செயலி மூலம் அவற்றில் ஒரு சில தளங்களை நாம் காணலாம்.
Google Mail Checker
இந்த நீட்சி செயலி, ஜிமெயிலைத் திறக்கும் ஐகானைக் கொண்டுள்ளது. இதனை கூகுள் தருவதால், பாதுகாப்பும் எளிமையும் கொண்டுள்ளது. இது ஏற்கனவே, பயனாளர்கள் மத்தியில் பயன்படுத்தப்படும் Checker Plus for Gmail என்ற நீட்சி செயலிக்கு மாற்றானது.
Save to Google Drive இந்த நீட்சி செயலி மூலம் நாம் சேமிக்க விரும்பும் படங்களைச் சேமிக்கலாம். ஒரு சில பயனாளர்கள், மிக அதிகமாக படங்களுடன் பணியாற்றுவார்கள். இணையத்தில் காணும் படங்களை உடனுடக்குடன் சேவ் செய்திட விரும்புவார்கள். இவற்றை கூகுள் ட்ரைவில் சேவ் செய்திடும் பழக்கம் உண்டு என்றால், இந்த நீட்சி செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விருப்பப்பட்ட படத்தின் மீது, ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனு மூலம் கூகுள் ட்ரைவில் உள்ள போல்டரில் சேவ் செய்திடலாம். படம் மட்டுமின்றி, இணைய தளத்தில் உள்ள டெக்ஸ்ட்டையும் சேவ் செய்திடலாம். படம் மற்றும் டெக்ஸ்ட் ஆகியவற்றை பைல்களாக சேவ் செய்த பின்னர், இதே நீட்சி செயலியினைப் பயன்படுத்தி, மீண்டும் திறந்து பார்க்கவும் செய்திடலாம்.
Data Saver
இந்த நீட்சி செயலியைப் பயன்படுத்தி, நம் கம்ப்யூட்டர் அல்லது ஸ்மார்ட் போனுக்கு, குறிப்பிட்ட இணைய தளத்தை அணுகத் தேவைப்படும் டேட்டாவினைக் குறைக்கலாம். இந்த நீட்சி செயலி, டேட்டாவினைச் சுருக்கிப் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துகிறது. இது கூகுள் சர்வர்களின் துணை கொண்டு இயங்குகிறது. இந்த நீட்சி செயலியைப் பயன்படுத்துகையில் Details என்பதில் கிளிக் செய்தால், எந்த அளவிற்கு நாம் டேட்டாவினை சேவ் செய்திருக்கிறோம் என்று ஒரு வரைபடமாகப் பார்க்கலாம்.
Personal Blocklist:
நாம் குறிப்பிட்ட பொருள் குறித்து கூகுள் தேடல் தளத்தின் மூலம் தேடுகையில்,
நாம் தேடும் நிலைக்குச் சற்று குறைந்த பண்புகளைக் கொண்ட தளங்களை, இந்த நீட்சி செயலி மூலம் தடுத்து வைக்கலாம். இந்த
நீட்சி செயலி மூலம் நீங்கள் தேடி அறியும், search engine results page (SERP) பக்கத்தில் தேவையற்ற தளங்களைத் தடுக்க உதவுகிறது.இவ்வாறு தடுக்கப்பட்ட இணைய தள முகவரிகளை, தடையிலிருந்து நீக்கவும் இந்த செயலி உதவுகிறது. இவ்வாறு நாம் தடுத்து வைக்கும் தளங்களின் பட்டியலைப் பெற்று அதில் மாற்றங்களையும் மேற்கொள்ளலாம்.
Caret Browsing:
நம் இணையத் தேடல் முறையில் உதவிடும் நீட்சி செயலி இது. Caret என்பது நகர்த்தக் கூடிய கர்சர். இதனைக் கொண்டு டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கலாம். இதனைப் பயன்படுத்துவோர் மிக மிகக் குறைவே. இந்த நீட்சி செயலியைப் பதிந்த பின்னர், குரோம் பிரவுசரை மீண்டும் இயக்கவும். கர்சரை எந்த இடத்திலும், ஓர் இணையப் பக்கத்தில் கொண்டு செல்லவும். அதன் பின்னர், அத்தளத்தில், அம்புக் குறி கீகளைக் கொண்டு இயங்கலாம். ஏதேனும் லிங்க்கை அடைந்துவிட்டால், கண்ட்ரோல் + எண்டர் அழுத்தி, குறிப்பிட்ட இணைய தளத்தினைத் திறக்கலாம். இதில் தரப்பட்டும் Options பட்டன் மேலும் பல வசதிகளைக் காட்டுகிறது.
Google Translate:
இந்த நீட்சி செயலியின் பயன் நாம் நாடுகளை, வேறு கலாச்சார மக்களை சந்திக்கையில் தெரிய வரும். வேறு ஒரு மொழியை நீங்கள் கற்றுக் கொள்ளும் மாணவராக இருப்பின், இந்த நீட்சி செயலியின் அருமை உங்களுக்குப் புரியும். கூகுள் உங்கள் விருப்பங்களிலிருந்து உங்கள் மொழி மற்றும் தேவையை உணர்ந்து கொண்டு, வேறு ஒரு மொழியில் நீங்கள் ஓர் இணைய தளத்தினைக் காண்கையில், அந்தப் பக்கம் முழுமையும் மொழி பெயர்க்க விருப்பமா? என்று கேட்டு, உங்களுக்குப் புரியும் மொழியில் மொழி பெயர்த்துத் தரும். ஓர் இணைய தளத்தினைப் பார்த்துக் கொண்டிருக்கையில், ஏதேனும் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்து, ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் Options மெனுவில், Translate ஐகான் மீது கிளிக் செய்தால், அந்த சொல் உங்களுக்காக மொழி பெயர்க்கப்பட்டு காட்டப்படும். உங்கள் மொழி என்னவென்று, முதலிலேயே ஆப்ஷன்ஸ் பட்டியலில் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் மிகச் சிறப்பான அம்சம் என்னவென்றால், அந்த சொல்லை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இந்த மெனு மேலாக உள்ள ஆடியோ ஐகானில் கிளிக் செய்திட வேண்டும். இவ்வாறான தேடப்படும் சொற்களைப் பட்டியலாக சேவ் செய்து வைத்துப் பின் நாளில் மீண்டும் பார்த்துக் கொள்ளும் வசதியும் இந்த நீட்சி செயலியில் தரப்படுகிறது.
Google Input Tools:
நாம் விரும்பும் மொழியில் டெக்ஸ்ட் அமைக்க இந்த நீட்சி செயலி உதவுகிறது. இந்த செயலி, ஏறத்தாழ 90 மொழிகளுக்கும் மேலாக அவற்றிற்கான கீ போர்ட்களைக் கொண்டுள்ளது. திரையில் காட்டப்படும் இந்த கீ போர்ட்களின் வழியாக, அந்த மொழிகளில் நாம் டைப் செய்திடலாம். கையெழுத்தினை உணர்ந்து டெக்ஸ்ட் அமைக்கும் வசதி 40 மொழிகளுக்கு மேலாக தரப்பட்டுள்ளது. இந்த நீட்சி செயலியின் ஐகானில் கிளிக் செய்து, அதில் காட்டப்படும் Options பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் உங்கள் தேவைக்கான மொழிகளையும், அவற்றை எப்படி உள்ளீடு செய்திடலாம் என்பதையும் தேர்ந்தெடுக்கலாம். மொழி ஒலி பெயர்ப்பு வசதியும் கிடைக்கிறது. நீங்கள் விரும்பும் மொழியில் டெக்ஸ்ட் அமைக்க, ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தி, அம்மொழியில் எழுதினால், அந்த மாற்று மொழியில் சொற்கள் அமைக்கப்படும். மேலே குறிப்பிட்டவை தவிர, இன்னும் பல பயனுள்ள நீட்சி செயலிகளை, கூகுள் தன் குரோம் பிரவுசருக்குத் தந்துள்ளது. மேலே தரப்பட்டுள்ளவை, பலருக்கும் பயன்படக் கூடியவை என்ற அடிப்படையில் தரப்பட்டுள்ளன. மற்றவற்றை நீங்களே, இணைய தளத் தேடல் மூலம் தேடி எடுத்துப் பயன்படுத்தலாம்.
எந்த நிலையிலாவது, இந்த நீட்சி செயலிகள் தேவை இல்லை என்றால், குரோம் பிரவுசரின் Settings பக்கம் சென்று, Manage Extension பிரிவு சென்று, குறிப்பிட்ட எக்ஸ்டன்ஷன் புரோகிராம் அருகே உள்ள குப்பைத்தொட்டி ஐகானில் கிளிக் செய்தால், அது நீக்கப்பட்டுவிடும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக