யாழ்ப்பாண பிஷப் ஞானபிரகாசம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில்தான் கச்சத் தீவில் புதிய தேவாலயம் கட்டப்படுகிறது என்று இலங்கையைச் சேர்ந்த பாதிரியார் ஜெயரஞ்சன் விளக்கமளித்துள்ளார்.
தேவாலயம் கட்டுவதற்கான முடிவை இலங்கை கடற்படை தன்னிச்சையாக எடுக்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
கச்சத் தீவில் ரூ. 1 கோடியில் புதிய தேவாலயத்தைக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாணக் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். யாழ்ப்பாணம் பிஷப் ஞானபிரகாசம், பங்குத்தந்தை ஜோசஃப் தாஸ் ஜெபரத்னம், அந்தோணி ஜெயரஞ்சன், நிக்ஸன் கொலின், இலங்கை கடற்படை, இலங்கை கடலோர காவல் படை உயரதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
புதிய தேவாலயம் கட்டும் நடவடிக்கைக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்பட தமிழக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் பாதிரியார் ஜெயரஞ்சன் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
கச்சத் தீவில் நூறாண்டுகளுக்கும் பழைமையான தேவாலயம் இருக்கும் நிலையில், புதிய கட்டடத்தைக் கட்டித் தருமாறு இலங்கைக் கடற்படையினரிடம் கடந்த பிப்ரவரி மாதத்தில் யாழ்ப்பாணம் பிஷப் ஞானபிரகாசம் வாய்மொழியாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன் பிறகு இலங்கை அரசுக்கும் இதுதொடர்பாக அவர் கடிதம் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில்தான் புதிய தேவாலயக் கட்டடம் அமைக்கப்படுகிறது.
இந்த முடிவை இலங்கைக் கடற்படை தன்னிச்சையாக எடுக்கவில்லை. கடலுக்கு நடுவில் உள்ள தீவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அதை இலங்கை கடற்படை மேற்கொள்கிறது என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக