செவ்வாய், 24 மே, 2016

இணையத்தில் பின் தொடரலைத் தடுக்க

இணையத்தில் நாம் உலா வருகையில், நம்மை அறியாமல், நாம் எந்த தளங்களைப் பார்க்கிறோம், என்ன என்ன தனி நபர் தகவல்களைத் தருகிறோம் என்பவற்றைப் பல மால்வேர் புரோகிராம்கள் பின்பற்றிக் கொண்டே இருக்கின்றன. இவை நம்மை அறியாமல் நம் கம்ப்யூட்டரில், மொபைல் போன்களில் வந்தமர்ந்தவையாக இருக்கும். அல்லது நாம் பயன்படுத்தும் பிரவுசரே, இதற்கான செயலியைப் பதித்திருக்கும். அல்லது பிரவுசரே, அவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கும்.


நாம் காணும் தளங்களிலேயே இதற்கான டூல்கள் பதிக்கப்பட்டிருக்கும். அவை, அத்தளம் மூலம் நம்முடைய ஒவ்வொரு நகர்தலையும் கவனித்து, அதற்கான தகவல்களைத் திரட்டி, வடிவமைத்தவருக்கு வழங்கும். ஆன்லைனில் நாம் பயன்படுத்தும் டூல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களும், நம்மைப் பின்பற்றும் வேலையை மேற்கொள்வது வழக்கமாகிவிட்டது.

இந்த புரோகிராம்களிடம் சிக்காமல் இருக்க, நாம் முகவரி அற்றவர்களாக இருக்க முடியாது. பல சூழ்நிலைகளில் நம்மைப் பற்றிய சரியான தகவல்களை அளிக்க வேண்டியதிருக்கும். இருப்பினும் சில செயல்பாடுகளை மேற்கொண்டால், நம் தகவல்கள் திருடப்படுவதனைத் தடுக்கலாம். அவற்றை இங்கு காணலாம்.

பிரவுசர் மற்றும் தேடல் சாதனத்தை மாற்றுக: பிரபலமான அனைத்து பிரவுசர்களும், இன் டர்நெட் எக்ஸ்புளோரர், குரோம், பயர்பாக்ஸ் போன்ற அனைத்தும், பிரைவேட் அல்லது இன் காக்னிடோ (have incognito or private browsing) என்றழைக்கப்படும், நம் தேடல்களைப் பின் தொடர்வதனைத் தடுக்கும் நிலைகளைக் கொண்டுள்ளன. இந்த பிரவுசர்களில், இந்த தனிநபர் நிலையை மேற்கொண்டால், நாம் இணையத் தேடலை முடித்த பின்னர், நம் இணைய சுவடுகள் அனைத்தும் நீக்கப்படுகின்றன.

அல்லது, தனிநபர் சுதந்திரத்தில் தலையிடாத பிரவுசரைப் பயன்படுத்தலாம். ஏவியேட்டர் அல்லது டார் (Aviator or Tor) பிரவுசர்கள் இதற்கு உதவும். இதிலும் சில சிறப்பு நிலைகளை மேற்கொண்டு, தனி நபர் தகவல்களைப் பின் தொடராதவாறு மேற்கொள்ளலாம்.

நீங்கள் வழக்கமான பிரவுசரைப் பயன்படுத்தினாலும், இணையத்தில் தேடலுக்கு, வேறு ஒரு தேடல் சாதனத்தை (Search Engine) பயன்படுத்தலாம். எடுத்துக் காட்டாக, கூகுள் பிரவுசரில், நீங்கள் தேடல் ஒன்றை மேற்கொள்கையில், உங்கள் தேடலுக்கான விடைகள் அனைத்தும், தனிப்பட்ட முறையில், உங்கள் அக்கவுண்ட் சார்ந்தும், முந்தைய தேடலுக்கேற்ற வகையிலும் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், DuckDuckGo and StartPage போன்ற தேடல் சாதனங்கள் இந்த செயலை மேற்கொள்வதில்லை. இவை கூகுள் தளத்திலிருந்து தேடலுக்கான விடைகளைப் பெற்றாலும், நம் தேடல்களும் விடைகளும் பதிவு செய்து வைக்கப்படுவதில்லை.

நீங்கள் பகிர்வதைக் கண்காணிக்கவும்
நம்மில் பலர் சமூக இணைய தளங்களை விரும்பிப் பயன்படுத்துகிறோம். அதில், நாம் பார்த்து ரசித்த திரைப்படங்களை மற்ற நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறோம். கேண்டி க்ரஷ் சாகா போன்ற விளையாட்டுகளை மற்றவர்களுடன் இணையத்திலேயே விளையாடுகிறோம். இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகையில், எந்த அளவிற்கு அடுத்தவர்களுடன் தொடர்பு கொள்கிறோமோ, அந்த அளவிற்கு, நம்மைப் பற்றிய தகவல்களும் செல்கின்றன. இந்த தகவல்களை வாங்கிக் கொண்டு தான், உங்கள் தேவைகளுக்கேற்ற விளம்பரங்களை, இந்த தளங்கள் நீங்கள் இணையத்தில் செல்கையில் தந்து கொண்டே இருக்கின்றன. அதே போல, நம்முடைய பேஸ்புக் மற்றும் கூகுள் அக்கவுண்ட் மூலம், மற்ற இணைய தளங்களுக்குச் செல்வது நமக்கு எளிதாக இருக்கலாம். ஆனால், அதன் மூலம், பல தர்ட் பார்ட்டி இணையதளங்களுக்கு நாம் நம்மைப் பற்றிய தகவல்களைத் தருகிறோம் என்பதை எப்போதும் எச்சரிக்கையாக மேற்கொள்ள வேண்டும்.

பிரவுசரின் ஆட் ஆன் செயலிகளைப் பயன்படுத்துக: உங்கள் இணைய நடவடிக்கைகளை யாரெல்லாம் பின்பற்றி வருகின்றனர் என்று தெரிந்து கொள்ளவும், அல்லது அவர்களின் பின்பற்றும் நடவடிக்கைகளைக் குறைக்கவும் விரும்புகிறீர்களா? அப்படியானால், நீங்கள் சில ஆட் ஆன் புரோகிராம்களைப் பயன்படுத்தலாம். அவை -~Ghostery, PrivacyFix மற்றும் Blur ஆகியவையாகும். பல முக்கிய பிரவுசர்களுக்கென இவை தனித்தனியே கிடைக்கின்றன. இவை, உங்களைப் பின்பற்றுபவர்களைத் தடுக்கின்றன. உங்கள் டேட்டாவினைப் பெறுகையில் பெரும் தடைகளை ஏற்படுத்துகின்றன. நீங்கள் விரும்பினால், சில தளங்களுக்கு இவற்றின் மூலம், தகவல்களைப் பெற அனுமதி அளிக்கலாம்.

ஒப்பந்தங்களின் விதிகள் அனைத்தையும் படித்தறிக: சில இணைய தளங்களின் சிறப்பு வசதிகளைப் பயன்படுத்த முற்படுகையில், பேஸ்புக் மூலம் பதிகையில், பல நிபந்தனைகள் அடங்கிய ஒப்பந்தம் தரப்பட்டு, இவற்றை ஏற்றுக் கொள்கிறீர்களா? என்று கேட்கப்படும். நாமும், அவற்றை எதுவும் படிக்காமல் Accept என்ற டேப்பில் கிளிக் செய்து வேகமாகச் சென்று கொண்டே இருப்போம். அப்படி இல்லாமல், இவற்றைப் படிக்க வேண்டும். அப்போது நேரம் இல்லை என்றாலும், அவற்றை காப்பி செய்து, பைலில் பதித்து, பின் ஒரு நேரத்தில் படிக்க வேண்டும். நம் பெர்சனல் தகவல்களை பயன்படுத்த அனுமதிப்பது போன்ற நிபந்தனைகள் இருந்தால், அந்த செயலியைப் பயன்படுத்துவதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

சந்தேகப்படும் தளங்கள், அஞ்சல்கள், தரவிறக்க பைல்கள் வேண்டாம்: நம்மைப் பின் தொடரும் பல சூழ்நிலைகளை இதன் மூலம் பெரும் அளவில் தடுக்கலாம். ஏதேனும் இணைய தளம் குறித்து சந்தேகம் ஏற்படுகிறதா? அல்லது மின் அஞ்சல்களைப் படிக்கையில், வழக்கத்திற்கு மாறான படங்கள், லிங்க் ஆகியன உள்ளனவா? டவுண்லோட் செய்யப்படும் பைல்கள் வித்தியாசமான பைல் வடிவைக் கொண்டுள்ளனவா? இப்படி எந்த சந்தேகம் வந்தாலும், உடனே அதனை நிறுத்திவிட வேண்டும். இவற்றை சோதனை செய்து, இவற்றில் வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம்கள் ஒட்டிக் கொண்டுள்ளனவா என்று கண்டறிந்து சொல்லும் பல சோதனைத் தளங்கள் உள்ளன. அவற்றிற்கு இவற்றை அனுப்பி, சோதனை முடிவு அறிந்த பின்னரே, அவை தீங்கு விளைவிப்பன அல்ல என்று இறுதியாக உறுதி செய்த பின், அவற்றைப் பயன்படுத்தவும்.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கென அனுப்பப்படும் மால்வேர் புரோகிராம்கள் மற்றும் வைரஸ்கள், நம் இணையத் தேடல் தடங்களை மட்டும் அறிவதில்லை. அவை நம் கம்ப்யூட்டரில் வைத்திருக்கும் அரிய தகவல்களையும் கைப்பற்றும் அபாயமும் எப்போதும் இருக்கிறது. எனவே, கவனமாக மேலே குறிப்பிட்ட செயல்பாடுகளை நிச்சயம் மேற்கொள்ள வேண்டும். ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஆண்ட்டி மால்வேர் தொகுப்புகளை எப்போதும் பயன்படுத்தவும். அவற்றையும் அவ்வப்போது அப்டேட் செய்து வைத்துப் பயன்படுத்த வேண்டும்.

----------------------------------
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல