சீனாவைச் சேர்ந்த யுவதியொருவர் வீதி விபத்தொன்றில் சிக்கியபின், இது குறித்த தகவலை சமூக வலைத்தளத்தில் வெளியிடும்வரை வீதியிலிருந்து எழுந்திருக்க மறுத்ததால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
சீனாவின் ஜியாங்கியோவ் நகரில் இந்த யுவதி செலுத்திச் சென்ற ஸ்கூட்டர், கார் ஒன்றுடன் மோதியது. வீதியின் மத்தியில் ஸ்கூட்டருடன் சேர்ந்து அப் பெண்ணும் சரிந்து வீழ்ந்தார்.
அதன்பின் அவர் உடனடியாக எழ முற்படவில்லை. வீதியில் வீழ்ந்து கிடந்தவாறே தன்னைப் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் தரவேற்றம் செய்யும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டார். இதனால், அவ் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர் பொலிஸார் வந்து அப் பெண்ணுடன் பேசி அவரை அங்கிருந்து நகர வைத்தனர். அப் பெண் வலியினால் அழவில்லை எனவும் அவர் தனது செல்லிடத் தொலைபேசியை துலாவுவதில் கவனமாக இருந்தார் எனவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இப் பெண், விபத்தின் பின்னர் என்ன செய்வது என்பது குறித்து தனது சமூக வலைத்தள நண்பர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம் எனவும் இதன்போது அதிகாரிகள் வரும்வரை “குற்றம் நடைபெற்ற இடத்திலிருந்து” நகர வேண்டாம் என சிலர் அந்த யுவதிக்கு ஆலோசனை வழங்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், அப் பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுவது குறித்த கவலை யின்றி அவர் வீதியில் கிடந்தமை குறித்து பலரும் விமர்சித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக