ஏற்கனவே விண்டோஸ் 7 சிஸ்டத்தில், சிஸ்டத்துடன் இன்ஸ்டால் செய்யப்பட்ட கேம்ஸ் விளையாட்டுகள், விண் 10க்கு மேம்படுத்தப்படுகையில் மறைந்து போகும்.
ஆனால், அவற்றை மீண்டும் பெற்றுவிடலாம்.
உங்களுடைய விண்டோஸ் 10 கம்ப்யூட்டர் மூலம், விண்டோஸ் ஸ்டோர் செல்லவும்.
இதற்கான விண்டோஸ் ஸ்டோர் ஐகான் உங்கள் கம்ப்யூட்டரின் டாஸ்க் பாரில் இருக்கும்.
ஷாப்பிங் பேக் மாதிரி இது காட்டப்படும்.
இதில் கிளிக் செய்திடவும். அல்லது ஸ்டார்ட் மெனுவில் தேடல் கட்டத்தில் தேடிப் பெறலாம்.
ஸ்டோர் திறக்கப்பட்டவுடன், உங்களுக்குத் தேவையான கேம்ஸ் உள்ளதா எனத் தேடிப் பார்க்கலாம்.
உதாரணத்திற்கு Mahjong மற்றும் Free Cell ஆகியவற்றின் இலவச பதிப்பினைக் காணலாம்.
இவை இலவசம் தான் என்பதை, அந்த கேம்ஸ் தலைப்பிலேயே அறியலாம்.
Free பட்டனில் கிளிக் செய்து, அவற்றை டவுண்லோட் செய்திடவும்.
ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்திலேயே அவை டவுண்லோட் ஆகி, கம்ப்யூட்டரில் பதியப்பட்டுவிடும்.
இவை, அண்மையில் இணைக்கப்பட்ட புரோகிராம் பட்டியலில் இடம் பெற்றிருப்பதனைக் காணலாம். அல்லது All Programs என்ற பட்டியலிலும் காணலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக