கிராமப்புறங்களில் சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதற்கு, மண்சட்டிகள் தான் காரணம். ஆம், மண் பாத்திரங்களில் உணவை சமைத்து சாப்பிடும் போது, உணவின் சுவை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும். இப்போது நாம் கிராமப்பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கப் போகிறோம். இந்த சமையலின் ஸ்பெஷலே மண்சட்டியில் சமைப்பது தான். எனவே உங்களுக்கு கிராமத்து மீன் குழம்பை சுவைக்க விருப்பம் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு மண்சட்டியில் சமைத்து சுவையுங்கள்.
தேவையான பொருட்கள்:
மீன் - 1/2 கிலோ
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கிரேவிக்கு...
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
புளிச்சாறு - 2 டேபின் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
தேங்காய் - 1/4 கப்
கறிவேப்பிலை - 1 கையளவு
இஞ்சி - 2 இன்ச்
பச்சை மிளகாய் - 2
தாளிப்பதற்கு...
எண்ணெய்- 4 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கையளவு
பூண்டு - 6 பற்கள்
மிளகு - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவி, ஒரு பௌலில் போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு மண்சட்டியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காயந்ததும், தாளிப்பதற்கு கொடுதுள்ள பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும்.
பிறகு அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, உப்பு மற்றும் மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து பிரட்டி 1 நிமிடம் வதக்கவும்.
பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குறைவான தீயில் குழம்பை கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் மீன் துண்டுகளை சேர்த்து, 5-6 நிமிடம் மீனை வேக வைக்கவும்.
அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் புளிச்சாறு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், கிராமத்து மீன் குழம்பு ரெடி!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக