ஐ.எஸ். தீவிரவாதிகள், தமது சொந்த தீவிரவாத குழுவிலிருந்து தப்பிச்செல்ல முயற்சித்த 7 பேருக்கு, உயிருடன் கொதித்துக் கொண்டிருந்த நீரில் வேகவைத்து மரணதண்டனை நிறைவேற்றியுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்த மரணதண்டனை குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
ஈராக்கில் சலாஹுதீன் மாகாணத் தில் ஷர்கத் எனும் இடத்தில் தீவிரவாதிகளுக்கும் படையினருக்குமி டையே இடம்பெற்ற மோதலின் போது அந்த 7 தீவிரவாத குழு உறுப்பினர்களும் தப்பிச்செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தீவிரவாத குழுவின் மத நீதிமன்றத்தில் அவர்கள் 7 பேரும் நிறுத்தப்பட்டபோது, அந்த நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள் ளது.
தொடர்ந்து அந்த 7 பேரும் தப்பிச் செல்ல முடியாத நிலையில் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் கொதித்துக் கொண்டிருந்த நீரைக் கொண்ட பாரிய அண்டாவுக்குள் தூக்கி வீசப்படுகின்றனர்.
இதனையடுத்து அவர்கள் கொதிநீரில் அவிந்து துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகள் கொதிக்கும் நீருக்குள் வீசி தம்மால் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவது இது முதல் தடவையல்ல.
கடந்த மாதம் மத்திய பலுஜ்ஜாஹ் ஹில் அல் – ஷுஹடா மற்றும் அல் – நஸாப்பில் தீவிரவாத குழுவை விட்டு தப்பிச் செல்ல முயன்ற 19 உறுப்பினர்களுக்கு கொதிக்கும் நீரில் உயிருடன் வீசி அவியவிட்டு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக