சனி, 9 ஜூலை, 2016

மூக்கு – சென்­டி­மெண்ட்டும் ட்ரீட்­மெண்ட்டும்

ஒவ்­வொரு பெண்ணின் அழ­கையும் அவ­ரு­டைய கண் அல்­லது மூக்­கோடு ஒப்­பிட்டு தான் பேசு­வார்கள். உதா­ர­ண­மாக மூக்கு முழி­யு­மாக இருக்­கிறாள் என்றோ, கண்ணு நல்­லா­யி­ருக்கு ஆனா, இந்த மூக்கு தான் கொஞ்சம் எடுப்பா இருக்கு என்றோ சொல்­லக்­கேட்­டி­ருப்போம். அத்­துடன், ஒரு பெண்ணின் தோற்றப் பொலிவை அதி­கப்­ப­டுத்­து­வதும் மூக்கே. மேலும் பெண்ணின் முகத்தில் அமைந்­துள்ள மூக்கு, அழ­கைத்­த­ரு­வ­துடன் அவ­ரது குண இயல்பின் வெளிப்­பா­டா­கவும் கரு­த­கி­றார்கள். அதனால் ஒவ்­வொரு பெண்ணும் ஒப்­பனை செய்து கொள்­வதில் மூக்­குக்கு முக்­கி­யத்­துவம் தரு­கிறாள். கிளி மூக்கு, குடை மிளகாய் மூக்கு, சப்பை மூக்கு, கோண­லான மூக்கு, கூரான மூக்கு என மூக்கின் தோற்­றத்தை வைத்து பெண்­களை குறிப்­பி­டு­வ­தையும் காண்­கிறோம்.


எப்­ப­டிப்­பட்ட தோற்றம் கொண்ட மூக்கை எப்­படி பரா­ம­ரிப்­பது என்­பது குறித்தும் பார்ப்போம் என்கிறார் அழகு கலை நிபுணர் திருமதி சுமதி அனந்தராமன்.

அதற்கு முன் மூக்கு குறித்து சாமுத்­ரிகா லட்­சணம் கூறும் விளக்­கத்தை உங்கள் மூக்­கோடு தொடர்­புப்­ப­டுத்திக் கொண்டு பார்த்து கொள்­ளுங்கள்.

பொது­வாக பெண்­களின் மூக்கு சற்று உயர்ந்து காணப்­ப­டு­வது நல்­லது எனச் சொல்­லப்­ப­டு­கி­றது. அதிலும், மூக்கின் நுனிப்­ப­குதி அமைப்­புதான் முக்­கி­ய­மாக சொல்­லப்­ப­டு­கி­றது. மூக்கின் நுனி கூராக இருந்தால் அதி புத்­தி­சாலி அர­சாளும் யோகம் உண்டு என்றும், எலியைப் போன்ற மூக்கு அதா­வது இலேசாக தூக்­கி­ய­படி இருந்தால் காம உணர்வு அதி­க­மாக இருக்கும் என்றும், மூக்கின் நுனிப் பகுதி உருண்டு காணப்­பட்டால், புத்­தி­சா­லி­யாக இருப்­பார்கள் என்றும்,மார்க்­கெட்டிங் துறையில் சிறந்து விளங்­கு­வார்கள் என்றும், குடை மிளகாய் போன்ற மூக்கைக் கொண்­ட­வர்கள் மற்­ற­வர்­களை அடக்கி ஆளும் எண்­ண­மு­டை­ய­வர்­க­ளாக இருப்­பார்கள் என்றும், மண்ட மூக்கு போலி­ருந்தால் அவர்கள் மற்­ற­வர்­களை சிறிய அள­வி­லா­வது இம்­சைப்­ப­டுத்­து­வதில் விருப்பம் கொண்­ட­வர்­க­ளாக இருப்­பார்கள் என்றும், மூக்­குக்கு பயிற்சி எடுத்து நீண்ட பென்சில் போல் மூக்கின் அமைப்பைக் கொண்­ட­வர்கள் எதிர்­கா­லத்தை அறியும் திறன் பெற்­ற­வர்கள் என்றும் சொல்­லப்படுகி­றது.

மூக்கின் பரா­ம­ரிப்பு மிகவும் எளிது. ஒழுங்கான பேஷியல் கூட போதும். அதுவும் முடி­யா­விட்டால் வீட்டில் செய்து கொள்ளும் சின்ன ட்ரீட்­மெண்ட்டே போதும்.
மிக எளி­தான, மூக்­குக்­கான அழகுக் குறிப்­பினை பார்ப்போம்.

*சப்பை மூக்கு என்ற ஷேப்பைக் கொண்­ட­வர்கள் மூக்கின் நடுப்­ப­கு­தியில் மட்டும் நீள­வாக்கில், சரும நிறத்­தை­விட லைட்­டான நிறத்தில் காம்பேக்ட் பவு­டரும், மற்ற இரு பக்­கங்­க­ளிலும் சரும நிறத்­தை­விட டார்க்­கான நிறத்தில் பவு­டரும் போட்டால் மூக்கு எடுப்­பாக தெரியும்.

*கூரான மூக்கு என்ற ஷேப்பை உடை­ய­வர்கள், இரு பக்­கங்­க­ளிலும் லைட் கல­ரிலும், நடுப்­ப­கு­தியில் மட்டும் டார்க் கல­ரிலும் பவுடர் போட்டால் மூக்கின் கூர்மை சற்று மட்­டுப்­பட்டு அழ­காகக் காட்­சி­ய­ளிப்­பீர்கள்.

* கோணல் மூக்கு என்ற அமைப்பைக் கொண்­ட­வர்கள், கோண­லாக சற்று வளைந்­துள்ள உட்­ப­கு­தியில் லைட் கலரும், வளைவின் மேல் பகு­தியில் டார்க் கலரும் கொடுத்தால் கோணல் அவ்­வ­ள­வாகத் தெரி­யாது.

*புரு­வங்­க­ளுக்கு மத்­தி­யில்­இ­ருந்து சட்­டென பள்­ள­மாக இறங்கி ஆரம்­பிக்கும் மூக்­கினைக் கொண்­ட­வர்கள், பள்­ள­மாக உள்ள பகு­தியின் மேல் லைட் கலரில் பவுடர் போட்டால் மூக்கு சற்று எடுப்­பாகத் தெரியும். * சில­ருக்கு குண்­டா­கவும் அக­ல­மா­கவும் மூக்கின் அமைப்பு இருந்தால், மூக்கின் இரு­பக்கம் உள்ள மடல் போன்ற பகு­தியில் மட்டும் டார்க் கல­ரிலும், நடுப்­ப­கு­தியில் லைட் கல­ரிலும் பவுடர் போட்டால் மூக்கு சற்று மெலிந்து இருப்­பதைப் போல் தோற்­ற­ம­ளித்து உங்கள் மூக்­க­ழகை எடுத்துக் காட்டும்.

*இதைத்­த­விர்த்து சிலரின் மூக்கு நீள­வாக்கில் பெரி­தாக இருக்கும். அத்­த­கைய அமைப்­பு­டைய பெண்கள் மூக்கின் நுனியில் கொஞ்சம் அதி­க­மாக மேக்கப் போட்டுக் கொள்ள வேண்டும். இதனால் அவர்­களின் மூக்கு பார்ப்­ப­தற்குச் சின்­ன­தாகத் தெரியும். * அதே தரு­ணத்தில் மூக்கின் அமைப்பு எப்­ப­டி­யி­ருந்­தாலும் பெண்கள் மூக்கு கண்­ணாடி அணிந்­தி­ருந்தால் அவர்­க­ளுக்கு அழகு சற்று குறை­யத்தான் செய்யும். அவர்கள் கொஞ்சம் பட்­டை­யா­கவே தங்கள் கண் இமை­க­ளுக்கு மை தீட்டிக் கொள்ள வேண்டும். அப்­படி செய்­து­கொள்ளும் போது கண்ணின் தோற்றப் பொலிவு அதி­க­ரிப்­ப­துடன், மூக்கின் அமைப்பும் எடுப்­பா­கத்­தெ­ரியும்.

ஆண்­களின் மூச்­சுக்­காற்றை விட பெண்­களின் மூச்­சுக்­காற்­றுக்கு சக்தி அதிகம் என்­பதால், முன்­னோர்கள் பண்­டைய காலத்­தி­லேயே மூக்கு குத்­திக்­கொள்ளும் வழக்கம் உரு­வா­னது. மூக்கு குத்­து­வ­தி­னாலும் காது குத்­து­வ­தி­னாலும் உட­லி­லுள்ள வாயுக்கள் வெளி­யே­று­கின்­றன. எம்­மா­தி­ரி­யான மூக்கு அமைப்பைக் கொண்ட பெண்கள், எவ்­வ­கை­யான மூக்­குத்­தியை அணிந்தால் நன்­றாக இருக்கும் என்­ப­தையும் காணலாம்.

அகன்ற மூக்கு உள்­ள­வர்­க­ளுக்கு 5 கல் கொண்ட வட்ட மூக்­குத்தி அழகை அதி­க­ரித்துக் காட்டும். பேச­ரியும், அக­ல­மான மூக்­குத்­தியும் எடுப்பாய் இருக்கும்.

*நீண்ட மூக்கு, சப்பை மூக்கு மற்றும் குடை­மி­ளகாய் போன்ற வடி­வங்­களில் மூக்கின் அமைப்­பினைப் பெற்­ற­வர்கள், மூக்­குத்தி போட்டுக் கொண்டால் மூக்கின் அமைப்பை ஓர­ளவு மாற்றி அழ­காக்­கலாம். அதிலும் குறிப்­பாக சப்பை மூக்­கு­டை­ய­வர்கள் சங்கு மூக்­குத்தி, முத்து மூக்­குத்தி போட்டால் மூக்கின் அமைப்பை மாற்­றிக்­காட்டி அழ­குடன் திகழ்வீர்.

*கூரான நாசியைக் கொண்­ட­வர்கள் இடது மூக்கில் ஒற்­றைக்கல் மூக்­குத்தி அணியும் போது உங்­களின் முக அழகே தனி­யாகத் தெரி­யத்­தொ­டங்கும்.

அதே போல் மூக்­குத்தி அணியும் முன் உங்­களின் முகத் தோற்றம், உங்­களின் சருமப் பொலிவு ஆகி­ய­வற்­றையும் கவ­னத்தில் கொள்­ள­வேண்டும். உதா­ர­ண­மாக சிவந்த நிற­மு­டை­ய­வர்கள் பச்­சைக்கல் மூக்­குத்தி அணிந்தால் எடுப்­பாக இருக்கும்.மாநிறம் உள்­ள­வர்கள் சிவப்­புக்கல் மூக்­குத்­தியும், கறுப்பு நிற­மா­ன­வர்கள் வெள்­ளைக்கல் மூக்­குத்தியும் போட்டால் அம்­ச­மாக இருக்கும். குறு­கிய, நீண்ட முகம் உள்­ள­வர்­க­ளுக்கு ஒரு கல் மூக்­குத்தி. அகல முகம் உள்­ள­வர்­க­ளுக்கு கற்கள் பதித்த அகன்ற மூக்­குத்தி அணிந்தால் கச்­சி­த­மாக பொருந்தி அழ­குடன் இருப்­பீர்கள். அத்­துடன் எந்­த­வித மூக்கின் அமைப்பைக் கொண்­ட­வர்­க­ளாக இருந்­தாலும் சரி பெஷன் என்று கூறிக் கொண்டு வலதுப் பக்க மூக்கில் மூக்­குத்தி அணி­யக்­கூ­டாது. இடது பக்­கத்தில் தான் மூக்­குத்­தியை அணி­ய­வேண்டும்.

அதே சம­யத்தில் சில பெண்கள் மூக்கு குத்திக் கொள்ளும் போது, அந்த இடத்தை கவ­ன­மாக தெரிவு செய்­ய­வேண்டும். ஏனெனில், காது குத்தல் போலல்ல, மூக்கில் குத்திக் கொள்­வது. மூக்கு குத்தும் இடத்தை துல்­லி­ய­மாக தெரிவு செய்­ய­வேண்டும். ஏனெனில், தவ­றா­கி­விட்டால் அந்த துளையை அடைப்­பது கடினம். அவை முக அழகைக் கெடுத்­து­வி­டக்­கூடும்.

இதனைத் தவிர்த்து மூக்கின் முக்­கி­ய­மான பிரச்­சினை அங்கு உண்­டாகும் பிளாக் ஹெட்ஸ்­ எ­னப்­படும் கரும்­புள்­ளிகள். ஒரு சில­ருக்கு அரி­தாக இவை வையிட் ஹெட்­ஸாக அதா­வது வெண்­மை­யான புள்­ளி­க­ளாக தோன்றும். இவ்­வி­ரண்டு பிரச்­சி­னை­யையும் கவ­ன­மா­கவும், நுட்­ப­மா­கவும் கையா­ள­வேண்டும். சந்­தை­களில் கிடைக்கும் பிளாக் ஹெட் ரிமூ­வர்ஸைப் பயன்­ப­டுத்­தலாம். இவற்றை தொடர்ந்தும், அடிக்­க­டியும் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது என எச்­ச­ரிக்­கி­றார்கள்.

அத்­துடன் இவை நாட்­பட்ட பிளாக் ஹெட்ஸை அப்­பு­றப்­ப­டுத்­து­வ­தில்லை. பிளாக் ஹெட்ஸை அப்­பு­றப்­ப­டுத்­த­வேண்டும் என்று எண்­ணினால் பாட்டி வைத்­தியம் என்று கூறப்­படும் ஆவிப்­பி­டித்தல் தான் இதற்கு சரி­யான சிகிச்சை முறை. இதனை வீட்­டி­லேயே செய்­யலாம்.

வீட்டில் மேற்­கொள்ளும் போது, பேஷி­ய­லுக்கு செய்­வ­துபோல் எண்­ணெய்ப்­பசை உள்ள நல்ல ஃபேஸ் மசாஜ் க்றீமை மூக்­கிற்கு நன்­றாக தடவி, இத­மாக மசாஜ் செய்ய வேண்டும். மூக்கின் பக்க வாட்­டிலும், நுனி­யிலும் சற்று கூடு­த­லான கால அளவு வரை மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாத்­தி­ரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்­றாக வியர்க்கும் வரை ஆவி பிடிக்க வேண்டும். இப்­போது வெளிச்­ச­மான இடத்தில் அமர்ந்து, கண்­ணா­டியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்­களில் பிளாக் ஹெட் ரிமூ­வரால் மெது­வாக அழுத்த வேண்டும்.

வெளியே வேரோடு வரும் பிளாக் ஹெட்ஸை டிஷ்­யூவால் துடைத்து எடுத்­து­வி­டுங்கள். இப்­ப­டியே மூக்கில் உள்ள பிளாக், வையிட் ஹெட்ஸ் முழு­து­மாக நீக்கி விடலாம். இப்­போது குளிர்ந்த நீரில் மூக்­கினை நன்­றாக கழு­வினால் போதும். அதே போல் வாரம் ஒரு முறை முகத்­தினை ஸ்க்ரப் செய்­யும்­போது மூக்கு பகு­தியில், பக்­க­வாட்டில் மசாஜ் செய்­தாலே வையிட் ஹெட்ஸ் வராது. மூக்கின் உள்ளே ஒரு சில­ருக்கு அதி­க­மாக முடிகள் இருந்து, வெளியில் இலேசாக எட்டிப் பார்க்கும். இதுவும் அழகை கெடுக்­கிற விட­யம்தான். சின்­ன­தாக புரு­வத்தை ட்ரிம் செய்ய உதவும் கத்­த­ரிக்­கோலை கொண்டு இலேசாக ட்ரிம் செய்­து­வி­டலாம். இதற்­கென்று பிரத்தி­யே­க­மான கத்­த­ரிக்­கோலும் கடை­களில் கிடைக்கும். இந்த தொல்­லைகள் பொது­வாக 40 வயதை தாண்­டி­ய­வர்­க­ளுக்கு அதிகம் இருக்கும். அதிக எண்ணெய் உண­வு­களை எடுத்துக் கொள்­ப­வர்­க­ளுக்கும், எண்­ணெய்ப்­பசை சருமம் உள்­ள­வர்­க­ளுக்கும் பிௌக் ஹெட்ஸ் அதிகம் காணப்­படும். சாதாரண, உலர்ந்த சருமம் உள்­ள­வர்­க­ளுக்கு இந்த பிரச்சினை குறைவு.

–தொகுப்பு திவ்யதர்ஷினி
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல