ஞாயிறு, 10 ஜூலை, 2016

கரு தங்­கும்­போது பெண்­களின் உடலில் ஏற்­படும் மாற்­றங்கள்

ஒரு பெண் இப்­பூ­மியில் பிறந்து வளர்ந்து கல்வி, தொழில்­நி­லை­களில் உயர்­நி­லை­களை அடைந்து எவ்­வ­ளவு முன்­னே­றி­னாலும் ஒரு திரு­ம­ணமும் அதனைத் தொடர்ந்து ஏற்­படும் தாய்மைப் பேறுமே அவ­ளது வாழ்வை முழு­மை­யாக்­கு­கின்­றன. இதுவே இயற்­கையும் இறை­வனின் படைப்பும்.


தாய்­மை­ய­டையும் பெண் ஒரு­வரின் உடல், மன நிலை­களில் பல்­வேறு மாற்­றங்கள் ஏற்­படு­கின்­றன. அதா­வது இவ்­வ­ளவு நாளும் சாதா­ரண ஒரு பெண்­ணாக வலம்­வந்த அந்­தபெண் கர்ப்­ப­ம­டைந்து இன்­னொரு உயி­ரைச்­சு­மந்து இப்­பூ­மிக்குக் கொண்­டு­வ­ரு­வ­தா­னது அவ­ளது வாழ்க்­கையின் அடுத்த படி­நிலை. இதனை சிலர் மறு­ஜென்மம் என்று கூட கூறுவர். இவ்­வா­றான ஒரு உயர்­ப­டி­நி­லைக்கு செல்லும் பெண் அதற்­கேற்­ற­வாறு அவ­ளது உடல் உள மாற்­றங்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­யுள்­ளது.

இவ்­வா­றான மாற்­றங்கள் எவை என்­பதும் அவற்றை எவ்­வாறு முகங்­கொ­டுப்­பது என்­பது பற்­றியும் ஆராய்வோம்.

கருத்­த­ரிப்பின் போது பெண்ணின் பாலு­றுப்­பு­களில் மட்­டு­மன்றி ஏனைய உடல் உறுப்­பு­க­ளிலும் மாற்­றங்கள் ஏற்­ப­டு­கின்­றன. இவ்­வாறு ஏற்­படும் மாற்­றங்கள் பிர­சவம் நடை­பெற்­றபின் ஆறு கிழ­மை­க­ளுக்குள் பழை­ய­படி முன்­புபோல் மாறி­வி­டு­கின்­றன. உடல் உறுப்­பு­களில் ஏற்­படும் மாற்­றங்கள் பெரும்பாலா­னவை கருவைச் சேர்ந்­துள்ள பிள­சென்ராவிலி­ருந்து சுரக்­கப்­படும் ஹோர்மோன்­க­ளினால் ஏற்­ப­டு­கின்­றன.

இம்­மாற்­றங்­களில் பெரும்­பா­லா­னவை கர்ப்­பந்­த­ரித்­த­வுடன் தொடங்கி தொடர்ந்து கர்ப்­ப­காலம் முடியும் வரை நடை­பெறும்.

கருப்­பையில் ஏற்­படும் மாற்­றங்கள்

சாதா­ரண பெண்­களில் (கரு அற்ற நிலையில்) 50– 6-0 g நிறை­யு­டைய அநே­க­மாக கெட்­டி­யான ஒரு உறுப்­பாக கர்ப்­பப்பை உள்­ளது.

கருத்­த­ரித்­ததும் இது மெலி­வான உறுப்­பாக மாறி ஒரு குழந்தை, தொப்­புள்­கொடி, குழந்­தையை சுற்­றி­யுள்ள பனிக்­கு­டநீர் என்­ப­வற்றை ஏற்று தாங்கிக் கொள்­ளக்­கூ­டிய ஒரு உறுப்­பாக மாற்­ற­ம­டை­கி­றது. ஹோர்மோன்­களின் மாற்­றங்­களால் கருப்பை வளர்ச்­சி­ய­டை­வதால் இதன் நிறையும் அதி­க­ரிக்­கின்­றது.

வழக்­க­மாக தலை­கீ­ழாக வைக்­கப்­பட்ட பியர்ஸ் பழத்தின் உரு­வத்­தி­லி­ருக்கும் கர்ப்­பப்பை 3 ஆம் மாதத்தில் உருண்டை உரு­வ­மாக மாறி நீள்­வட்ட வடி­வாக கர்ப்ப முடி­விலும் இருக்கும். இவ்­வாறு பல மாற்­றங்­க­ளுக்கும் உட்­படும் கர்ப்­பப்பை பிர­ச­வத்தின் பின்னர் மீண்டும் பழைய நிலையை (பெரும்­பாலும்) அடையும்.

கர்ப்­பப்பை வாயிலில் ஏற்­படும் மாற்­றங்கள்

இது கரு அற்ற நிலையில் கெட்­டி­யா­ன­தாக இருக்கும். பின்னர் கர்ப்­பந்­த­ரித்­ததும் மென்­மை­ய­டை­வ­துடன் இதன் நிறமும் சற்று நீல­நிற சாயலை அடை­கின்­றது. இவை இரத்த ஓட்டம் அதி­க­ரிப்­பதால் ஏற்­ப­டு­வன. கருத்­த­ரிப்பு நடை­பெற்­றதும் ஒரு­வகை சளி­கட்டி போன்ற திரவம் இதன் வாயை மூடு­கின்­றது. இது பிர­சவம் தொடங்­கும்­போது சற்று இரத்­தத்­துடன் சேர்ந்து இரத்­தக்­க­சி­வாக வெளி­யே­று­கின்­றது. கர்ப்­ப­கால முடிவில் கருப்பை வாய் இன்னும் மெது­மை­யாகி இல­கு­வாக விரி­வ­டை­யக்­கூ­டி­ய­தாக மாறு­கின்­றது. இதனால் பிர­ச­வத்தின் போது முழு­மை­யாக விரி­வ­டைந்து குழந்தை வெளி­யேற உத­வு­கின்­றது. இம்­மாற்­றங்கள் எல்லாம் ஹோர்மோன்­க­ளினால் ஏற்­ப­டு­கின்­றன.

யோனிக்­கு­ழலில் ஏற்­படும் மாற்­றங்கள்

யோனிக்­கு­ழலில் உள்­மென்­சவ்வு கருத்­த­ரித்த பின்னர் கடி­ன­மா­கின்­றது. இதன் இரத்த ஓட்­டமும் அதி­க­ரிக்­கின்­றது. இதன் விளை­வாக இதி­லி­ருந்து சுரக்கும் திரவம் அதி­க­ரிக்­கின்­றது. இதனால் யோனிக்­கு­ழலின் நிறமும் மாற்­ற­ம­டை­கின்­றது. யோனிக்­கு­ழலின் நீளம் அதி­க­ரிப்­ப­துடன் சுவர்கள் விரி­வ­டை­கின்­றன. இவ்­வாறு விரி­வ­டை­வ­த­னால்தான் இதன்­மூலம் குழந்தை பிறக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது

கருப்பை வாயி­லி­ருந்தும் யோனிக் குழ­லி­லி­ருந்தும் உற்­பத்­தி­யாகும் திர­வங்கள் கூடு­தலால் கரு­வுற்ற பெண்­களில் அதிகம் வெள்­ளை­ப் படுதல் ஏற்­ப­டு­கின்­றது. இவ்­வெள்ளை நிறத்­தி­ரவம் சற்று தடிப்­பா­ன­தாக இருக்கும். இதனால் ஒரு தீமையும் ஏற்­ப­டாது. இது கரு­வுற்­றி­ருப்­ப­தனால் ஏற்­படும் மாற்­றங்­களால் கரு­வுற்ற பெண்­களில் சற்று கூடு­த­லாக இருக்கும்.
இத­னை­விட ஏதேனும் கிருமித் தொற்­றுக்­களால் ஏற்­படும் வெள்­ளை­ப­டு­த­லுக்கு வைத்­திய ஆலோ­சனை பெறுதல் சிறந்­தது.

மார்­ப­கங்­களில் ஏற்­படும் மாற்­றங்கள்

கருத்­த­ரித்த பெண்­களில் மார்­ப­கங்கள் பெரி­தாகி அவற்றின் முலைக்­காம்­பு­களும் பெரி­தா­கின்­றன. இவற்றின் நிறமும் மாற்­ற­ம­டை­கின்­றன. (மேலும் கரு­மை­ய­டை­கின்­றன)
இவை சற்று அதி­க­மாக நிமிர்ந்தும் சிலிர்ப்பும் தொடு வலி­யு­ணர்ச்­சியும் ஏற்­ப­டு­கின்­றன.
சில­பெண்­களில் முலைக்­காம்­பி­லி­ருந்து ஒரு­வ­கை­யான திரவம் ஊறும். கருத்­த­ரித்து 12 கிழ­மை­க­ளி­லி­ருந்து இது தொடங்கும் இதனை சீம்பால் என்பர். மார்­ப­கங்­களை சற்று அழுத்­தினால் இத்­தி­ர­வத்தை வெளி­யேற்­றலாம்.

இரு­தயம்/இரத்தக் குழாய்­களில் ஏற்­படும் மாற்­றங்கள்

கருத்­த­ரித்த பெண்­களில் இரத்த ஓட்டம் இத­யத்­து­டிப்பு என்­பன அதி­க­ரிக்­கின்­றன. இரத்­தத்தை கட்­டி­ப­டச்­செய்யும் பொருட்கள் இரத்­தத்தில் அதி­க­ரிக்­கின்­றன. குழந்­தைக்கு தேவை­யான இரும்­புச்­சத்து, பிரா­ண­வா­யுவை கொண்டு செல்­வ­தற்­காக குரு­தியில் சிவப்­ப­ணுக்கள் அதி­க­ரிக்­கின்­றன.

இக்­கா­லப்­ப­கு­தியில் சிவப்­ப­ணுக்­களை அதி­க­ரிக்கச் செய்யும் இரும்­புச்­சத்து மாத்­தி­ரை­களை
 பெண்கள் ஒழுங்­காக உள் எடுத்தல் அவ­சியம். கருத்­த­ரிப்பின் போது ஏற்­படும் மாற்­றங்­களை தாங்­கு­வ­தற்­காக இரு­த­யமும் இரத்­தக்­கு­ழாய்­களும் அள­வுக்கு சற்று அதி­க­மா­கவே மாற்­ற­ம­டை­கின்­றன. இதன்­போது இரத்த அழுத்த நோயு­டை­ய­வர்கள் தகுந்த வைத்­திய ஆலோ­ச­னையைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும்.

சிறு­நீ­ர­கங்கள், தோல் பகு­தி­க­ளுக்கு இரத்த ஓட்டம் அதி­க­ரிப்­பதால் கருத்­த­ரித்­த­வர்­களில் உடம்பு சற்று சூடாக இருப்­ப­துடன் அதி­க­ளவு வியர்வை வெளி­யேற்­றமும் காணப்­படும். சில­ருக்கு மூக்­க­டைப்பு, முர­சி­லி­ருந்து இரத்­தக்­க­சிவு போன்­ற­னவும் ஏற்­ப­டலாம்.

சுவா­சத்­தொ­கு­தியில் ஏற்­படும் மாற்­றங்கள்

கர்ப்­பப்பை பெரி­தா­கும்­போது பிரிப்­புத்­தசை மேலு­யர்­வதால் நீங்கள் மூச்சு விடும்­போது அதனை உண­ரக்­கூ­டி­ய­தாக உள்­ள­தோடு சற்று ஆழ­மாக மூச்­சு­வி­ட­வேண்­டியும் ஏற்­ப­டு­கி­றது. கர்ப்­பத்­தி­லுள்ள சிசு­விற்கும் சேர்த்து அதிக ஒட்­சிசன் தேவைப்­ப­டு­வ­தாலும் இவ்­வா­றான மாற்­றங்கள் சுவா­சத்தில் ஏற்­ப­டு­கின்­றன. இந்த சந்­தர்ப்­பங்­களில் கிருமி நோய்த்­தொற்­றுக்கள் ஏற்­பட்டால் உட­ன­டி­யாக தகுந்த வைத்­திய ஆலோ­ச­னையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

சிறு­நீ­ர­கங்கள் மற்றும் சிறு­நீரை வெளி­யேற்றும் பகு­தி­களில் ஏற்­படும் மாற்­றங்கள்

இவை எல்­லா­வற்­றி­னதும் பரி­மா­ணங்கள் அதி­க­ரிப்­பதால் இவற்றின் இரத்த ஓட்டம், கழி­வு­களை வடி­கட்­டுதல் என்­ப­னவும் அதி­க­ரிக்­கின்­றன. ஆகவே கருத்­த­ரித்­த­வர்கள் அடிக்­கடி சிறுநீர் வெளி­யேற்ற வேண்­டி­யி­ருக்கும்.

சிறு­நீரைச் சேக­ரிக்கும் பகு­திகள் விரி­வ­டை­வதால் சிறுநீர் தேங்­கு­வது அதி­க­ரித்து அதன்­கா­ர­ண­மாக கிருமி நோய்­க­ளுக்குக் கார­ண­மா­கின்­றது. கருத்­த­ரித்த பெண்­களில் சுருங்­கு­த­சைகள் சற்று தளர்­வ­டை­வதால் சிறு­நீரை அடக்க முடி­யாமை, சிறுநீர் ஒழுக்கு, இருமல், சிரிப்பு, மூக்­குச்­சீறல் செய்­யும்­போது கட்­டுப்­பா­டின்றி சிறி­ய­ளவு சீறுநீர் வெளி­யே­றுதல் போன்­றன ஏற்­ப­டலாம்.

சிறு­நீ­ரக மாற்­றங்கள் யாவும் பிர­ச­வத்தின் பின் சிறிது காலத்தில் மீண்டும் பழைய நிலையை அடைந்­து­வி­டு­கின்­றன.

வயிறு, குடல் போன்­ற­வற்றில் ஏற்­படும் மாற்­றங்கள்

வளர்ந்­து­வரும் கருப்­பையால் வயிறு, குடல், பெருங்­குடல் என்­பன அவற்றின் வழ­மை­யான இடத்­தி­லி­ருந்து சற்­று­மேலே அல்­லது பக்­கங்­க­ளுக்கு தள்­ளப்­ப­டு­கின்­றன. இவ்­வாறு வயிற்­றுத்­த­சைகள், இரைப்பை தசை­களில் ஏற்­படும் மாற்­றங்­களால் நெஞ்­செ­ரிவு ஏற்­ப­டு­கின்­றது. பெருங்­கு­டலில் ஏற்­படும் மாற்­றங்­களால் மலச்­சிக்கல் ஏற்­ப­டு­கின்­றது. இதனால் பெண்களில் மூலநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

நாளங்களுள் ஏற்படக் கூடிய இரத்த அழுத்தம் காரணமாக கருத்தரித்த பெண்களில் வெரிகோஸ் வெயின் ஏற்படலாம். ஹோர்மோன் மாற்றங்களால் பித்தப்பையில் தோன்றும் பித்தக் கற்களால் வயிற்றுவலி ஏற்படவும் வாய்ப்புண்டு.

இவை தவிர ஹோர்மோன்களின் தொழிற் பாட்டால் மார்பகங்களில் பால்சுரத்தல் தூண்டப் படுகின்றது.

சாதா­ர­ண­மாக கருத்­த­ரித்த பெண் ஒரு­வரின் நிறை அதி­க­ரிக்­கின்­றது. அதி­க­ரிக்கும் எடையின் அரைப்­பங்கு பெரும்­பாலும் குழந்தை, பனிக்­கு­டநீர் போன்­ற­வற்றால் ஏற்படு கின்றது.
எனவே பெண்­களே! கர்ப்பம் என்­பது இயற்­கை­யான ஒரு நிகழ்வு. இதனை கவ­னத்­து­டனும் ஒழுங்­கான வைத்­திய பரி­சோ­த­னை­க­ளு­டனும் பரா­ம­ரித்து பிர­ச­வத்தை இல­கு­வாக்­கு­வது உங்­க­ளது கடமை. பிர­ச­வத்தின் பின்னும் ஒழுங்­கான உண­வுப்­ப­ழக்­கங்கள், உடற்­ப­யிற்­சிகள் மூலமும் உங்கள் வைத்­தி­யரின் அறி­வு­ரை­யு­டனும் உங்கள் உடல்நிலையைப் பேணுவதும் உங்கள் கடமை.

டாக்டர் கு.சுஜாகரன்
இலங்கை
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல