சனி, 9 ஜூலை, 2016

வாஸ்து தோஷத்தை நீக்கும் விஞ்ஞான பூர்வமான பரிகாரம்!

வீட்­டைக்­கட்டி பார், கல்­யாணம் பண்­ணிப்பார் என்­பது முது­மொழி. ஆனால் வாஸ்து படி வீட்­டைக்­கட்டி பார் என்­பது இன்­றைய புது­மொழி. வீடு கட்­டு­வ­தற்­கான மனை வாங்­கு­வ­தற்கே மலை­ய­ளவு உழைக்­க­வேண்­டி­ய­ி­ருக்கும். இந்த காலத்தில் வாங்­கிய மனையில் வாஸ்து படி வீட்டை அமைக்க அனை­வரும் விரும்­பு­வார்கள். ஆனால் அனை­வ­ருக்கும் அது சாத்­தி­ய­மா­குமா? என்றால் நடை­மு­றையில் சாத்­தி­ய­மா­காது என்று உறு­தி­யாக சொல்­லலாம். ஏனெனில் வாஸ்து முறைப்­படி வீட்டை கட்­ட­வேண்டும் என்றால் வாஸ்து கூறும் விதி­மு­றை­களைப் பாருங்கள்.


வீடு கட்ட தேர்வு செய்யும் வீட்­டு­மனை சது­ர­மா­கவோ, நீள் சதுர வடி­விலோ இருக்­கலாம். ஆனால் வீட்­டு­ம­னைகள் முக்­கோண வடிவில் இருந்­து­வி­டக்­கூ­டாது. தெற்கு, மேற்கு திசை பார்த்த மனையை காட்­டிலும், வடக்கு, கிழக்கு திசை பார்த்த மனையை தெரிவு செய்­வது சிறந்­தது. ஈசா­னியம் மட்டும் குறைந்த நிலையில் இருக்­காமல் இருக்­கு­மாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டின் தனப்­ப­கு­திக்கு உரிய கிழக்கு வடக்கு ஈசா­னிய திசைகள் பள்­ள­மாக இருக்­கும்­படி சரி செய்து கொள்ள வேண்டும்.மேற்கு, தெற்கு, தென்­மேற்கு கன்னி மூலையை மேடாக அமைக்க வேண்டும். கிழக்கு வடக்கு திசை­களில் அதி­க­மான காலி இடம் விட வேண்டும். பூமி­பூஜை செய்து அஸ்­தி­வாரம் தோண்டும் போது வட­கி­ழக்கு திசை­யான ஈசான மூலையில் இருந்து பணியை தொடங்க வேண்டும்.கிழக்கு, வடக்கு ஈசான்யம் தவிர மற்ற திசை­களில் கிணறு, பள்ளம் இருந்தால் அதை மண்­கொண்டு நிரப்பி சரி செய்ய வேண்டும். தென்­கி­ழக்கு மூலையில் சமையல் அறையை கிழக்கு பார்த்­த­வாறு அமைப்­பது சிறந்­தது. படுக்கை அறையை தென்­மேற்கு பகு­தியில் அமைக்­கலாம். வீட்டின் பரண்கள் தெற்கு, மேற்கு சுவர்­களில் தான் அமைய வேண்டும்.

இது போன்ற பட்­டியல் நீண்­டு­கொண்­டே­யி­ருக்கும். இதற்­கா­கவே தற்­போது பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் ஒப்­பந்­த­தா­ரர்­க­ளிடம் வீடு கட்டும் பணியை ஒப்­ப­டைத்­து­வி­டு­கி­றார்கள்.
ஆனால் சிறிது நாள் கழித்து எம்­மு­டைய குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு ஏதேனும் காரி­யத்­தடை நடை­பெற்­றாலோ அல்­லது ஆரோக்­கிய குறை­பாடு ஏற்­பட்­டாலோ உடனே உற­வி­னர்கள் சொல்லும் முதல் குற்­றச்­சாட்டு வாஸ்து தோஷம் .

முச்­சந்தி வீடு, இடு­காட்­டுக்கு அருகில் உள்ள வீடு , முட்டு சந்து, நான்கு பக்­கமும் வீதி­க­ளில்லை. என தங்­க­ளுக்கு தெரிந்த கார­ணங்­களை முன்­மொ­ழிவர் அல்­லது ஒரு சில­ருக்கு புதி­ய­தாக குடி போன­தி­லே­யி­ருந்து எது­வுமே துலங்­காமல் இருக்கும், எப்­பவும் கெட்ட சம்­ப­வங்கள் அல்­லது துர்­ச­கு­னங்கள் நடந்து கொண்டே இருக்கும் நல்ல விட­யமே நடக்­காது. காரணம் இன்­ன­தென்று புரி­யாமல் தவிப்பர்.

அத்­துடன் உங்­களை சந்­திக்கும் அனை­வரும் தங்­க­ளுக்கு தெரிந்த வாஸ்து தோஷத்­திற்­கான பரி­கா­ரங்­கள் ­செய்­யு­மாறு வற்­பு­றுத்­துவர்.

ஆனால் இது குறித்து பல­ரிடம் கேட்­ட­போது, இது போன்ற வாஸ்து தோஷங்கள் மட்­டு­மல்­லாமல் வாழ்வில் ஏற்­படும் ஏனைய முட்­டுக்­கட்­டை­க­ளுக்கும் ரெய்கி நிபுணர் டொக்டர் ஏ மீனாட்­சி­யை­ சந்­தித்தால் இதற்­கெல்லாம் அரு­மை­யான தீர்வு கிடைக்கும் என்­கி­றார்கள். அதனைத் தொடர்ந்து டொக்டர் ஏ மீனாட்­சியை சந்­தித்தோம்.

அவர்கள் பிரச்­சி­னையின் வீரியம் மற்றும் முக்­கி­யத்­து­வத்தைப் பற்றி புரிந்­து­கொண்டு முன்­வைத்த இரண்டு விட­யங்கள் ஜியோ­ப­தியும், சக்தி ஸ்கேனர் கரு­வியும்.
இதைப் பற்றி அவர் கூறி­ய­தா­வது.

ஜியோ என்றால் பூமி, பதி என்றால் பிரச்­சினை. வாஸ்து சாஸ்­தி­ரத்தின் படி சமை­ய­லறை எங்கு இருக்­க­வேண்டும்? கழி­வறை எங்கு இருக்­க­வேண்டும்? படுக்­கை­யறை எங்கு இருக்­க­வேண்டும்? இவை­க­ளெல்லாம் எந்த திசையை நோக்கி இருக்­க­வேண்டும் என்ற விதி­மு­றை­யுடன் கட்­டி­யி­ருப்போம். ஆனால் நாம் கட்­டிய வீடு எம்­மா­தி­ரி­யான சக்­தி­யுடன் இயங்­கு­கி­றது? அவை எமக்கு எப்­படி சாத­க­மான இருந்து இயங்­கு­கி­றது? என்­பது முக்­கியம். இதற்­கான ஆய்வை நாம் பூமியின் அடி­யி­லி­ருந்து தொடங்­க­வேண்டும். ஏனெனில் பூமியின் மேற்­பு­றத்தில் தான் இந்த வீடுகள் எல்லாம் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

Geopathic Stress என்­பது பூமிக்கு அடியில் நிகழும் மாற்­றங்­களால் ஏற்­படும் தீய தீர்­வுகள்.
இதற்கு பூமிக்­க­டி­யி­லுள்ள நீரோட்டம், தாதுப் பொருட்கள் மற்றும் பூமியின் மின்­காந்த அலைகள் கார­ண­மா­கின்­றன.

இந்த தீய அதிர்­வுகள் Geopathic Stress line களாக பூமியின் மேற்­ப­ரப்பில் வெளிப்­ப­டு­கின்­றன. அந்த இடத்தில் நாம் குடி­யி­ருக்கும் வீடு அல்­லது தொழில் புரியும் இடங்கள் அமைந்­தி­ருந்தால் பாதிப்­புக்­குள்­ளா­கின்­றன.

Geopathic Stress line கள் இருக்கும் இடத்தில் செடி கொடிகள் காய்ந்து விடும். சுவற்றில் விரி­சல்கள் ஏற்­ப­டலாம்.

Geopathic Stress line கள் ஒன்­றோடு ஒன்று சந்­திக்கும் இடத்தை நோடு என்­கிறோம். அங்கு அதி­கப்­ப­டி­யான நெகட்டிவ் எனெர்ஜி உரு­வாகும்.

அந்த நோடு உள்ள இடங்­களில் Geopathic Stress ன் தாக்கம் அதி­க­மாக இருக்கும். அந்த இடங்­களில் 6 முதல் 8 மணி நேரம் நாம் இருக்கும் போது, அந்த தீய சக்­தி­க­ளினால் நாம் பாதிப்­பிற்­குள்­ளா­கிறோம்.

80 சத­வீதம் வியா­தி­க­ளுக்கு Geopathic Stress தான் காரணம் உறக்­க­மின்மை, குடும்­பத்தில் உற­வு­களில் பிரச்­சினை, குழந்­தை­யின்மை, பிஸினஸ் லாஸ், ஆக்­ஸிடென்ட், கேன்சர் போன்ற தீராத நோய்கள் வரு­வ­தற்கும் இவையே முக்­கிய கார­ண­மா­கின்­றன.
நாம் வசிக்கும் இடங்­களில் Geopathc Stress line கள் இருக்­கி­றதா என்­பதை ஆரா ஸ்கேனர் மெசின் மூலம் கண்­ட­றி­யலாம்.

அவ்­வாறு இருந்தால், அந்த லைன்கள் வரும் இடத்தின் மீது அனு­பவம் மிகுந்த வல்­லு­நர்­களைக் கொண்டு ஜியோ­பதிக் ராடு­களைப் பொருத்தி சரி செய்­யலாம். ஜியோ­பதிக் ராடு­க­ளி­லி­ருந்து வரும் பாசிட்டிவ் அலைகள், Geopathic Stress line களி­லி­ருந்து வரும் நெகடிவ் எனெர்­ஜியை சரி செய்­கி­றது. அந்த இடம் முழு­வ­துமே ஜியோ­பதிக் ஸ்டிரஸ் தாக்­கத்­தி­லி­ருந்து பாது­காக்கப்படு­கி­றது. அதன் பின்னர், அந்த இடமே சுபி­ட்ஷ­மாக இருக்கும்.

இது­போன்­ற­தொரு இடத்தில் ஒரு மனிதன் தொடர்ந்து பல மணி­தி­யா­லங்கள் வரை பணி­யாற்­றி­னாலோ அல்­லது உறங்­கி­னாலோ அல்­லது அமர்ந்து வேலை செய்­தாலோ அது அவரைப் பாதிக்­கி­றது. ஏனெனில் அவ­னு­டைய உடல் தாங்­கக்­கூ­டிய சக்­தியை விட கூடு­த­லாக அவ­னு­டைய உடலில் சக்­தி­யா­னது பாய்­கி­றது. இதன் அளவு அதி­க­ரிக்க, அதி­க­ரிக்க அவ­னு­டைய உடலில் அவ­னுக்கே தெரி­யாமல் இதன் தாக்­கங்­களால் பல மாற்­றங்கள் ஏற்­படும். திடி­ரென்று ஒரு நாள் அவ­னுக்கு புற்­றுநோய் என்­பார்கள். திடி­ரென்று விபத்து ஏற்­பட வாய்ப்­புண்டு. அத­னை­ய­டுத்­து­அந்த குடும்­பத்தில் குழப்­பங்கள் தோன்­றக்­கூடும். பிள்­ளை­களின் படிப்பு கெடும். வீட்டில் எப்­போதும் அமை­தி­யின்­மையும்,போராட்­ட­மு­மாக இருக்கும். அவர்கள் நினைக்­காத காரி­யங்கள் எல்லாம் நடக்கத் தொடங்­கி­விடும். கணிக்க முடி­யாத சூழல்கள் ஏற்­ப­டக்­கூடும். சுற்­றத்­தார்கள் கூட நல்­லாத்­தானே இருந்­தார்கள் என்ன ஆயிற்று என்று வினவும் அள­விற்கு அவை அமை­யக்­கூடும்.

இந்­நி­லையில் நாங்கள் இந்த ஜியோ­பதி ஸ்ட்ரஸ் என்­பது எங்­கி­ருக்­கி­றது? என்­பதை கண்­டு­பி­டிக்­கிறோம். எங்­களின் அனு­பவம் மூல­மா­கவே இதனை கண்­ட­றி­கிறோம். அத்­துடன் இதற்­கா­கவே நாங்கள் சக்தி ஸ்கேனர் என்­றொரு கரு­வியை வைத்­தி­ருக்­கிறோம். சக்தி ஸ்கேனர் மூலம் சக்­தியின் இடத்தை கண்­ட­றிந்து, அதன் அள­வையும், வீரி­யத்­தையும் கணக்­கி­டு­கிறோம். அதன்­பின்னர் அந்த சக்தியை குறைக்கவோ அல்லது சமப்படுத்தவோ தங்கம் உள்ளிட்ட தாதுபொருள்களை வைத்து முயற்சிக்கிறோம்.

அத்துடன் இவற்றை எந்த இடத்தில் எது போல வைத்தால் சக்தியின் அளவை குறைக்கலாம் என்பதை முதலில் நிர்ணயிக்கிறோம். அதன் பிறகு அங்கே பொருத்துகிறோம்.
அங்கு சக்தி என்பது இல்லாததாக்கி விடுகிறோம். இது தான் எங்களின் பிரதான பணி. கேட்பதற்கு எளிதாக இருந் தாலும் இது மிகவும் நுட்பமான பணி. இதனைப் பொருத்திய பின் அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றங்களும், வளர்ச் சியும் உறுதியாகிவிடும்.இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையத் தொடங்கிவிடும்.

தொகுப்பு: திவ்யதர்ஷினி

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல