செவ்வாய், 5 ஜூலை, 2016

எளிய ஆங்கிலத்தில் மாற்றி எழுத ஒரு இணைய தளம்

ஒரு மொழியில் எழுதுகையில், எழுதப்படுவது அனைவராலும் புரிந்து கொள்ளப்படும் வகையில் எளிமையாகஎழுதலாம். அடிக்கடி பயன்படுத்தாத, அல்லது சற்று நேரம் எடுத்துப் புரிந்து கொள்ளும் வகையிலான சொற்களைக்
கொண்டும் எழுதலாம். எடுத்துக் காட்டாக, தமிழில் 'ஜன்னல்' என்பதை ஜன்னல் என்று எழுதினால், வழக்குமொழிச் சொல் எனப் பலரும் புரிந்து கொள்வார்கள். 'சாளரம்' என்று எழுதினால், “இதென்ன புலவர் தமிழாக
உள்ளதே” எனச் சிலர் புரிந்து கொள்ளலாம்.


அதே ஜன்னலை, 'காலதர்' என எழுதினால், (கால்=காற்று, அதர்= வரும்
வழி. காலதர் = காற்று வரும் வழி, ஜன்னல்) பெரும்பாலானவர்கள் பொருள் தெரியாமல் கலக்கமடைவார்கள்.

சொல்லில் மட்டுமின்றி, வாக்கியத்திலும் கூட இதே போல, எளிமையின்றி எழுதும் வகையும் உண்டு. ஆங்கிலத்தில் இது சற்று அதிகமாகவே இருக்கும். நமக்கு வேண்டிய பொருள் குறித்த கட்டுரை ஒன்று, சற்று கடினமான ஆங்கிலத்தில் இருந்தால், யாராவது இதனை எளிமைப்படுத்தி எழுதினால் நன்றாக இருக்குமே என்று நாம் விரும்புவோம். இந்த செயலில் நமக்கு உதவிட, இணையத்தில் ஒரு தளம் உள்ளது. Rewordify! என்பது இந்த
தளத்தின் பெயர். இந்த தளத்திற்குச் சென்று, நாம் எளிமைப்படுத்த வேண்டிய கடினமான உரைக்கோவையினை இட்டால், அது அந்த டெக்ஸ்ட்டை எளிமைப்படுத்தித் தருகிறது. எடுத்துக் காட்டாக, இந்த தளத்தில் தரப்பட்டுள்ள
வாக்கியத்தினையும், அது எளிமைப்படுத்தப்பட்டு தரப்படும் வாக்கியத்தினையும் நீங்கள் படித்துப் பார்த்தால்,

இதன் செயல்பாட்டினை அறியலாம்.கடினமான வாக்கியம் (ஆங்கிலத்தில்): The ravenous throng scampered toward the delectable viands, which was impeccably arrayed on the table. இதன் எளிமையான வாக்கியம்: The extremely hungry crowd ran toward the
delicious food, which was extremely well organized (into rows) on the table. இன்னொரு எடுத்துக் காட்டு: Four score and seven. படிக்கும் போது எளிமையாகத் தோன்றினாலும், சிலருக்கு மட்டுமே இது எளிமையாக இருக்கும்.

Score என்பது 20. எனவே, இது 87 ஐக் குறிக்கிறது.

இந்த செயல்பாடு மட்டுமின்றி, இந்த தளம் மூலம் நாம் ஆங்கிலத்தில் சொற்களைக் கற்றுக் கொள்ளலாம். பயனாளர்கள் இந்த தளத்தினை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்; என்ன என்ன பயன்களை அடையலாம் என்று விரிவாக இந்த தளத்தின் முகப்பு பக்கத்திலேயே தரப்பட்டுள்ளது இதன் சிறப்பு. ஆங்கிலத்தில் கட்டுரைகளைத் தேடுவோர் மட்டுமின்றி, சொற்களைக் கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கும், இது ஒரு பயனுள்ள தளமாகும்.
இதன் இணைய முகவரி: https://rewordify.com/

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல