மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்க முறைமைகள், சில குறிப்பிட்ட வகை எழுத்துருக்களை ஏற்றுச் செயல்படும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. சில பதிப்பாளர்கள், இந்த இயக்க முறைமையில் இயங்கும் வகையில், எழுத்துருக்களை உருவாக்கிப் பயன்படுத்துகின்றனர். நம் டாகுமெண்ட்கள் சிறப்பாக அமைய வேண்டுமென்றால், நம் கலைப் படைப்புகள், அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்றால், பிற நிறுவனங்கள் தரும் இந்த எழுத்துருக்களையும் பயன்படுத்த வேண்டியதுள்ளது. இவற்றை எப்படி, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் பதிந்து பயன்படுத்தலாம் மற்றும் தேவைப்படாத போது நீக்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.
எங்கு எழுத்துருக்களைக் கண்டறியலாம்?
விண்டோஸ் 10 இயக்க முறைமை, மூன்று வகை கட்டமைப்பில் உருவான எழுத்துருக்களை ஏற்றுக் கொள்கிறது. அவை: TrueType, OpenType மற்றும் PostScript ஆகியவை ஆகும். இணையத்தில் பல தளங்களில், எழுத்துருக்கள் கிடைக்கின்றன என்றாலும், பலரும் விரும்புவது https://fonts.google.com/. ஏனென்றால் இங்கு பல வகை எழுத்துருக்களை இலவசமாகப் பெறலாம். சில நல்ல எழுத்துருக்கள் வேறு இணைய தளங்களில் உள்ளன. ஆனால், அவற்றைக் கட்டணம் செலுத்தி மட்டுமே பெற்றுப் பயன்படுத்த முடியும். இவை http://www.fonts.com/ மற்றும் https://www.microsoft.com/typography/fonts/default.aspx ஆகிய தளங்களில் கிடைக்கின்றன.
எழுத்துரு ஒன்றை எப்படிப் பதிவது?
மேலே குறிப்பிட்ட தளங்கள் மற்றும் பிற தளங்களிலிருந்து எழுத்துருக்களைத் தரவிறக்கம் செய்துவிடலாம். இவற்றை போல்டர் ஒன்றில் பதிந்து வைக்கவும். எழுத்துருக்கள், சுருக்கப்பட்ட 'ஸிப்' பைலாக இருந்தால், அதனை விரித்து, எழுத்துருக்களாகப் பதிந்து வைக்க வேண்டும்.
1. அடுத்து, 'fonts' என தேடல் கட்டத்தில் டைப் செய்து என்டர் தட்டவும். கிடைக்கும் முடிவுகளில், Fonts Control Panel ஐகானில் கிளிக் செய்திடவும். இனி, எழுத்துருக்கள் நிறைந்த கண்ட்ரோல் பேனல் விண்டோ காட்டப்படும்.
2. தொடர்ந்து, சிஸ்டத்தில் பதியப்படாத, எழுத்துருக்களைப் பதிவு செய்து வைத்திட்ட போல்டரைத் திறக்கவும். இதனை நீங்கள் Download Folderல் அமைத்திருந்தால், Windows + E கீகளை அழுத்தி, எக்ஸ்புளோரர் விண்டோவினைத் திறந்து, அதில் இடது பக்க மெனுவில் Downloads போல்டரைத் திறக்க முடியும்.
3. அடுத்து, நீங்கள் பதிய விரும்பும் எழுத்துருவினை, இழுத்து வந்து கண்ட்ரோல் பேனல் Fonts Windowவில் இடவும். போல்டரை மொத்தமாக இழுத்து விட முடியாது. எழுத்துருக்களை மட்டுமே தேர்ந்தெடுத்து இழுத்துவிட முடியும். உடன் குறிப்பிட எழுத்துரு பதியப்பட்டு, பயன்பாட்டிற்குத் தயாராய் இருக்கும்.
எழுத்துருக்களை நீக்குவது எப்படி?
தேவையற்ற எழுத்துரு என ஒன்றை முடிவு செய்து, ஹார்ட் ட்ரைவின் இடத்தை அது எடுத்துக் கொள்வதனை விரும்பவில்லை என்றால், அதனை நீக்கிவிடலாம். விண்டோஸ் 10ல் எப்படி இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.
1. முதலில், மேலே காட்டியபடி, தேடல் கட்டத்தில் Fonts என டைப் செய்து, Fonts: control panel." விண்டோவினைத் திறக்கவும்.
2. நீங்கள் எந்த எழுத்துருவினை அல்லது எந்த எழுத்துரு குழுவை நீக்க விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் ஒரே ஒரு எழுத்துருவினை மட்டும் நீக்க விரும்பினால், அது அதன் குழுவில் ("font family") இடம் பெற்றிருப்பதனைக் காணலாம். எடுத்துக் காட்டாக, Cambria Bold என்ற எழுத்துரு Cambria என்ற குழுவில் இடம் பெற்றிருக்கும். அங்கு சென்று, அந்த எழுத்துருவினை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து Delete கீயை அழுத்த வேண்டும். உங்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தி காட்டப்படும். உடன் yes என்பதில் கிளிக் செய்தால், அந்த எழுத்துரு நீக்கப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக