மொபைல் போனில் இயங்கும் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பதிப்புகளை வெளியிடுகையில், கூகுள் அதற்கு ஏதேனும் ஓர் இனிப்பு பண்டத்தின் பெயரை வைப்பது வழக்கம். வர இருக்கும் புதிய சிஸ்டத்தின் பெயரை, சென்ற ஜுன் 30ல் கூகுள் அறிவித்தது. அனைவரின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, இதன் பெயர் Android Nougat என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பிய நாடுகளில், உணவிற்குப் பின் சுவைக்க எடுத்துக் கொள்ளப்படும் ஓர் இனிப்பாகும். இதனைச் சிலர் “நூகா” என்றும், சிலர் “நகட்” என்றும் ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். இங்கு பெரும்பாலும் 'நகெட்' என்றே அழைக்கப்படுகிறது.
அடுத்த பதிப்பின் பெயர் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சில மாதங்களாகப் பல நாடுகளில் ஏற்பட்டிருந்தது. கூகுள் நிறுவனம், இதற்கென பயனாளர்களிடம் ஒரு வாக்கெடுப்பினை நடத்தியது. ஓர் இணைய தளத்தை உருவாக்கி, அதில் பெயர்களைக் கேட்டது. 'நெய்யப்பம்' என்ற பெயர் கூடி பரிந்துரைக்கப்பட்டது. இறுதியில் Nought என்ற பெயரினை கூகுள் தேர்ந்தெடுத்துள்ளது.
சென்ற பதிப்பான மார்ஷ்மலாய் (நாம் இதனை 'மெதுமிட்டாய்' என்று அழைத்தோம்.) பதிப்பு 6.0 என அறிவிக்கப்பட்டது. இந்த 'நகெட்' பதிப்பு Android Nougat 7.0 என அழைக்கப்பட்டது.
கூகுள் தன் தலைமை அலுவலகத்தில், (Mountain View) புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் குறிக்கும் வகையில் பெரிய பொம்மையை சிலை மாதிரி வடிவமைத்து அமைக்கும். இந்த முறையும் Android Nougat சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்பட இருக்கும் புதிய வசதிகள் சிலவற்றை ஏற்கனவே கூகுள் தன் டெவலப்பர் கருத்தரங்கில் அறிவித்திருந்தது.
1. நெக்சஸ் மற்றும் பிற ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில், இந்த சிஸ்டம் பயன்படுத்தப்படுகையில், திரையினை இரண்டாகப் பிரித்து, இரு வேறு அப்ளிகேஷன்களை இயக்க முடியும். இதனால், ஒரு விண்டோவில் யு ட்யூப்பில் விடியோ படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இன்னொரு விண்டோவில், பேஸ்புக் மெசஞ்சரில் பதிவினை மேற்கொள்ள முடியும்.
2. வெவ்வேறு அப்ளிகேஷன்களின் தன்மைக்கேற்ப, விண்டோவின் பின்புலத்தினை இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் மாற்றும். அல்லது நாமாகவும் அமைத்து இயக்கலாம்.
3. 'Quick Settings' என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. ஒன்பது செட்டிங்ஸ் அமைப்புகளை, அழுத்தி விடுத்து இயக்கும் Toggle பட்டன் வழி மேற்கொள்ளலாம்.
4. மார்ஷ்மலாய் என்ற சென்ற சிஸ்டத்துடன் தரப்பட்ட Doze, என்னும் டூலில் பல மேம்படுத்தல்கள் இந்த சிஸ்டத்தில் அறிமுகமாகின்றன. போன் பயன்பாட்டில் இல்லாத போது செயல்படுவது மட்டுமின்றி, திரையை 'Off' நிலையில் வைக்கும்போதும், இது செயல்பட்டுக் கொண்டே இருக்குபடி இப்போது அமைக்கப்படுகிறது. இதனால், பேட்டரியின் திறன் வீணாகாது.
5. இன்னொரு முக்கிய வசதி, சிஸ்டம் அளவில் மொபைல் எண்களை தடுப்பது. தற்போது நாம் சில அப்ளிகேஷன்கள் மூலம், நம்மை அடிக்கடி அழைத்து தொல்லை கொடுக்கும் வேண்டாத மொபைல் எண்களை Block செய்கிறோம். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், சிஸ்டம் அளவில் இந்த எண்களை தடுக்கலாம். இதனால், அனைத்து அப்ளிகேஷன்களிலும் தடுக்கப்பட்ட எண்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
இந்த புதிய சிஸ்டம் பயன்பாட்டிற்கு வருகையில், இன்னும் பல புதிய வசதிகளை எதிர்பார்க்கலாம். தற்போதைக்கு, சோதனை இயக்கப் பதிப்பு (Beta) கிடைக்கிறது. கூடுதல் வசதிகளுடன், செம்மையான முழுமையான பதிப்பு விரைவில் இலவசமாகத் தரவிறக்கம் செய்திடும்படி, கூகுள் விரைவில் வழங்கும்.
ஆண்ட்ராய் சிஸ்டத்தின் பெயர் வரலாறு
கூகுள் தன் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு இனிப்பு பண்டத்தின் பெயர்களை, ஆங்கில எழுத்துகளின் வரிசைப்படி அமைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இதனால், பலர், அடுத்த பெயர் இதுவாக இருக்கும் எனத் தங்களுக்குப் பிடித்த பெயர்களை, ஊகமாகச் சொல்வதுண்டு. தொடக்கத்தில் இருந்து கூகுள் அமைத்த பெயர்களை, அவை வெளியிட்ட நாட்களுடன் இங்கு பார்க்கலாம்.
1. கப்கேக் 1.5 / ஏப்ரல் 27,2009.
2. டோனட் 1.6 / செப்டம்பர் 15, 2009.
3. எக்ளேய்ர் 2.0 / 2.1 / அக்டோபர் 26, 2009.
4. ப்ரையோ 2.2 / மே 20, 2010
5. ஜிஞ்சர் ப்ரெட் 2.3 /டிசம்பர் 6, 2010
6. ஹனி கோம்ப் / 3.0 / பிப்ரவரி 22, 2011
7. ஐஸ்கிரீம் சாண்ட்விச் 4.0 / அக்டோபர் 18, 2011
8. ஜெல்லி பீன் 4.1 /ஜுலை 9, 2012
9. கிட்கேட் 4.4/ அக்டோபர் 31, 2-013.
10. லாலி பாப் 5.0 /நவம்பர் 12, 2014.
11. மார்ஷ்மலாய் 6.0 /அக்டோபர் 5, 2015
12. நகெட்??/ ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் 2016.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக