திங்கள், 8 ஆகஸ்ட், 2016

வேர்ட் டிப்ஸ்.. அகராதியில் இல்லாத சொல்: கட்டங்களை அமைத்து டெக்ஸ்ட், படம் அமைக்க:

அகராதியில் இல்லாத சொல்: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில் சில சொற்களின் கீழாக சிகப்பு வண்ணத்தில், நெளிவான கோடு ஒன்று காட்டப்படும். அந்த சொல்லில் எழுத்துப் பிழை எனப்படும் ஸ்பெல்லிங் தவறு இருக்கும் போது இந்த கோடு அமைக்கப்படும். ஆனால், சில சொற்கள் நீங்கள் அமைத்ததாக இருக்கும். அவை ஆங்கில அகராதியில் இருக்காது. அதனால் தான் எழுத்துப் பிழை என வேர்ட் காட்டுகிறது.


இந்த சொல்லின் எழுத்துப் பிழையை வேர்ட் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால், அந்த சொல்லின் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில் "Ignore All" என்பதில் கிளிக் செய்திட வேண்டும். அதன் பின்னர், அந்த டாகுமெண்ட்டில், அந்த சொல் நீங்கள் டைப் செய்தபடியே ஏற்றுக் கொள்ளப்படும்.

இந்த சொல்லை Custom Dictionaryல் சேர்த்துவிட்டால், எந்த டாகுமெண்ட்டில் அந்த சொல் வந்தாலும், அது பிழை எனக் காட்டப்பட மாட்டாது. ஆனால், அதே டாகுமெண்ட் மற்ற கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப் படுகையில், அந்த சொல் பிழை உள்ளதாகக் காட்டப்படும். இது டாகுமெண்ட்டைப் பார்க்கும் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்தினை உங்களிடம் ஏற்படுத்தும். எனவே, எந்த கம்ப்யூட்டரில் டாகுமெண்ட் திறக்கப்பட்டாலும், பிழையற்ற சொல்லாக உங்களின் சொல் காட்டப்பட வழி ஒன்று கண்டறியப்பட வேண்டும். இதற்கு இரு வழிகள் உள்ளன.

1. நீங்கள் இவ்வகையில் குறிப்பிட விரும்பும் சொல் அல்லது சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.

2. ரிப்பனில், Display டேப்பினைப் பெற்றுக் காட்டவும்.

3. இங்கு Language dialog box தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007ல், Proofing குருப்பில், Set Language டூலினைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2010 பயன்படுத்துபவராக இருந்தால், Language குரூப்பில், Language டூல் தேர்ந்தெடுக்கவும். இதில் Set Proofing Language என்பதில் கிளிக் செய்திடவும்.

4. இங்கு Do Not Check Spelling or Grammar என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

கட்டங்களை அமைத்து டெக்ஸ்ட், படம் அமைக்க: வேர்ட் தொகுப்பில் பக்கங்களை அமைக்கையில் டெக்ஸ்ட், வரை படங்கள், படங்கள், கிளிப் ஆர்ட் எனப் பலவகை அமைப்பை டாகுமெண்ட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நமக்கு கோடுகள் அமைந்த கட்டங்கள் இருந்தால் இவற்றை சரியான இடத்தில் அமைத்து அழகாக டாகுமெண்ட்டை உருவாக்க வசதியாக இருக்கும்.

இதற்காக டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியாக கட்டங்கள் அமைத்தால் அவையும் அச்சில் வந்து டாகுமெண்ட்டின் அழகைக் கெடுத்துவிடும். இதற்குப் பதிலாகப் பின்னணியில் ஒரு கட்டம் அமைத்து அவை நீக்கப்படுவதற்கான வழியையும் அமைத்துத் தரலாம். இதற்கு View மெனுவில் Toolbars என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் பிரிவுகளில் Drawing என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Drawing Toolbar கிடைக்கும். இதில் Draw என்பதில் கிளிக் செய்து பின் Grid என்பதைக் கிளிக் செய்திடவும்.

அடுத்து கிடைக்கும் பிரிவில் 'Display gridlines on screen' என்பதைத் தேர்ந்தெடுத்து நெட்டு வாக்கிற்காகவும் படுக்கைவாகிற்காகவும் ஒரு அளவைத் தேர்ந்தெ டுத்து அமைக்கவும். இதன் பின் OK கிளிக் செய்து வெளியேறவும்.
இந்த கிரிட் கட்டம் தோற்றத்தில் மட்டும் வைத்துப் பயன்படுத்தும் வகையில் நமக்குக் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி நாம் டெக்ஸ்ட் உட்பட படங்கள், வரைபடங்கள், போட்டோக்கள் போன்றவற்றைச் சரியாக அமைக்கலாம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல