1. Win + I: விண்டோஸ் கீயுடன் 'I' இணைக்கப்பட்டு அழுத்தப்படும்போது, நமக்கு All Settings விண்டோ கிடைக்கிறது. மைக்ரோசாப்ட், இப்போதைய இயக்க முறைமையில், கண்ட்ரோல் பேனலில் உள்ள அனைத்து இயக்க பிரிவுகளையும், புதியதான Settings செயலிக்கு மாற்றிவிட்டதால், இந்த சுருக்கு விசை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
2. Win + A: விண்டோஸ் கீ + A, விண்டோஸ் 10ல் உள்ள 'ஆக் ஷன் சென்டரை' திறக்கிறது. அனைத்து நோட்டிபிகேஷன் எனப்படும் அறிவிப்புகளை இங்கு காணலாம். இதற்காக டாஸ்க் பாரில் உள்ள சிறிய ஐகானைக் கிளிக் செய்திட வேண்டாம்.
3. Win+S: விண்டோஸ் 10ல் இணைத்துத் தரப்பட்டுள்ள மிகப் பெரிய வசதி, 'கார்டனா' எனப்படும் நம் பெர்சனல் டிஜிட்டல் உதவியாளர். இதனைப் பெற இந்த சுருக்கு விசையைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் இதனைக் கிளிக் செய்தால், “ நான் உங்களுக்கு உதவிடும் முன், செட்டிங்ஸ் சென்று நான் உணரக் கூடிய மொழியை செட் செய்திட வேண்டும்” என செய்தி கிடைக்கும். பேசி வேலை வாங்க முடியவில்லை என்றால், டெக்ஸ்ட் அமைத்தும் உதவி கேட்கலாம். டெக்ஸ்ட் வழியாக இதனைப் பயன்படுத்த Win+C சுருக்குவிசையினைத் தர வேண்டும். பேச்சு மொழி வழி ("Hey, Cortana") செட் செய்திடவில்லை என்றால், இதனை நாம் பயன்படுத்தலாம். நாம் விரும்புவதை, கம்ப்யூட்டரிலும், இணையத்திலும் தேடி எடுத்துக் கொடுக்கும்.
4. Win + Ctrl + D: விர்ச்சுவல் டெஸ்க்டாப் என கூடுதலாக, டெஸ்க்டாப் திரைகளை உருவாக்க இந்த சுருக்கு விசைகளைப் பயன்படுத்தலாம். விண்டோஸ் 10ல் அறிமுகப்படுத்தப்பட்ட பயனுள்ள வசதி இது. கூடுதலாக கிடைக்கும் டெஸ்க்டாப் திரைகளில், நாம் விரும்பும் அப்ளிகேஷனை அமைத்து இயக்கலாம். ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷனை நம் கண்காணிப்பில் வைத்து இயக்கும் இந்த வசதியைப் பயன்படுத்தியவர்கள் அனைவரும் விரும்புவார்கள்.
5. Win + Ctrl + Left / Right Arrow Keys: ஒன்றுக்கு மேற்பட்ட விர்ச்சுவல் டெஸ்க்டாப் விண்டோக்களை திறந்து, அவற்றில் பணியாற்றிக் கொண்டிருந்தால், இந்த சுருக்கு விசைகள், அவற்றிற்கு இடையே செல்லப் பயன்படும்.
6. Win + Ctrl + F4: இதனைப் பயன்படுத்தி, மேலே சொல்லப்பட்ட விர்ச்சுவல் டெஸ்க்டாப் விண்டோவினை மூடலாம்.
7. Win + Tab : இந்த சுருக்கு விசைகள் விண்டோஸ் 10ல் புதியதாகத் தரப்பட்டுள்ள Task View வசதியைக் காண வழி தரும்.
8. Ctrl+Alt+Tab: உங்களுடைய டெஸ்க்டாப் விண்டோவில், திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கும் அனைத்து அப்ளிகேஷன்களையும் காண, இந்த சுருக்கு விசைகளைப் பயன்படுத்தலாம். இது முந்தைய Alt+Tab போல செயல்பட்டாலும், மவுஸ் அல்லது ஆரோ கீகளைப் பயன்படுத்தியே, புரோகிராம்களைத் திறக்க இயலும்.
9. Win + Arrow Keys: விண்டோவினை மொத்தமாக ஓர் ஓரத்திற்கு ஒதுக்குவது, விண்டோஸ் 10 இயக்க முறைமையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுருக்கு விசைகளைப் பயன்படுத்தி, விண்டோவினை எந்த மூலைக்கும் கொண்டு செல்லலாம்.
10. Win +G: Game VDR என்று ஒரு டூல், விண்டோஸ் 10ல் இணைக்கப்பட்டு தரப்பட்டுள்ளது. இதனைப் பலரும் அறிந்திருக்கவில்லை. இதனைப் பயன்படுத்தி, விடியோ காட்சிகளைப் பிடிக்கலாம். இந்த சுருக்கு விசைகளைப் பயன்படுத்தி, Game VDR டூலைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம். உடனேயே பதியும் பணியை மேற்கொள்ளலாம். பொதுவாக, இது போன்ற டூலினை, கேம்ஸ் விளையாடுபவர்கள் பயன்படுத்துவார்கள். இருப்பினும், மற்ற புரோகிராம்களைப் பதியவும் பயன்படுத்தலாம். முழுத் திரையையும் பதியப் பயன்படுத்த முடியாது. ஒரே ஒரு புரோகிராம் விண்டோவினை மட்டும் பதிந்து கொள்ளலாம்.
11. Win +Alt+G: அப்போதைய புரோகிராம் அல்லது கேம் விண்டோவினை உடனடியாகப் பதிவு செய்திட, இந்த சுருக்கு விசைகளைப் பயன்படுத்தலாம். இது Game VDR டூலை இயக்கி, அப்போது இயக்கத்தில் இருக்கும் விண்டோவினைப் பதியத் தொடங்கும்.
12. Win +Alt+R: Game VDR தொடங்கிய பின்னர், இந்த சுருக்கு விசைகளைப் பயன்படுத்தி, உடனடியாக, அப்போது மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் பதிவினை நிறுத்தலாம்.
விண்டோஸ் 10 இயக்க முறைமையில், மைக்ரோசாப்ட், சிஸ்டத்தில் உள்ள கட்டளைப் புள்ளி இயக்கத்தில் (Command Prompt) சில மேம்படுத்தலை மேற்கொண்டுள்ளது. Command Prompt Windowவில், மேற்கொள்ளக் கூடிய சுருக்கு விசைகளை இங்கு காணலாம்.
Ctrl+A: கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோ உட்பட, அனைத்து இயக்க விண்டோவில் உள்ள டெக்ஸ்ட்டினை தேர்ந்தெடுக்கிறது.
Ctrl + C: முந்தைய விண்டோஸ் பதிப்புகளில் செயல்பட்டதற்கு மாறாக, இந்த கட்டளையப் பயன்படுத்தி, கமாண்ட் ப்ராம்ப்ட் கட்டத்தில் கிடைக்கும் டெக்ஸ்ட் அல்லது முடிவுகளை காப்பி செய்திடலாம். இதற்குப் பதிலாக, "Ctrl + Insert" என்ற சுருக்கு விசையையும் பயன்படுத்தலாம்.
Ctrl + V: காப்பி செய்வதற்கான முந்தைய கட்டளையைப் போல, இந்த சுருக்கு விசையினைப் பயன்படுத்தி, கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவில், டெக்ஸ்ட்டை ஒட்டலாம். இதே செயல்பாட்டினை, Shift+Insert பயன்படுத்தியும் மேற்கொள்ளலாம்.
Ctrl+M: இந்த சுருக்கு விசையினைப் பயன்படுத்தி, கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவில், Marker mode என்னும் நிலைக்கு மாறிக் கொள்ளலாம். இதன் மூலம், Shift + Arrow கீகளைப் பயன்படுத்தி, டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுக்கலாம்.
விண்டோஸ் + டேப் கீ: (Windows + Tab): இந்த இரு விசைகளையும் அழுத்தினால், நமக்குக் கிடைப்பது, செயல்பாட்டில் இருக்கும் அனைத்து விண்டோக்களும். முந்தைய இயக்க முறைமைகளில், ஆல்ட்+டேப் அழுத்தினால், திறந்திருக்கும் விண்டோக்கள் ஒவ்வொன்றாகக் காட்டப்படும். தற்போது அனைத்து விண்டோக்களும் சிறிய கட்டங்களாகக் காட்டப்படும். நமக்கு தேவைப்படும் விண்டோவில் கிளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
விண்டோஸ் + கண்ட்ரோல் + டி (Windows+Ctrl+D): உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்கள் இல்லையா? இருந்தால், அவற்றை விண்டோஸ் 10 இயக்கத்தில் இணைத்துப் பயன்படுத்தலாம். அந்தக் குறையை விர்ச்சுவல் டெஸ்க்டாப் உருவாக்குவதன் மூலம் நாம் நிறைவு செய்திடலாம். இந்த மூன்று விசைகளையும் அழுத்தினால், ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப் திரைகளை உருவாக்கலாம். ஒவ்வொன்றிலும், ஒரே நேரத்தில் மாறுபட்ட கம்ப்யூட்டர் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, ஒரு விண்டோவில் கம்ப்யூட்டர் கேம் ஒன்றை விளையாடலாம். இன்னொன்றில், நம் அலுவலகக் கணக்கு வழக்குகளைப் பார்க்கலாம். Windows + Tab அழுத்தி, ஒவ்வொரு டெஸ்க்டாப் விர்ச்சுவல் விண்டோவிற்கு மாறிக் கொள்ளலாம். அல்லது, Windows + Ctrl + left/right என நாம் விரும்பும் விண்டோ இருக்கும் இடத்திற்கேற்ப, வலது அல்லது இடது அம்புக்குறிக்கான கீகளை அழுத்திச் செயல்படலாம். விர்ச்சுவல் டெஸ்க்டாப் விண்டோ ஒன்றை மூட வேண்டும் என்றால், Windows + Ctrl + F4 கீகளைப் பயன்படுத்தலாம்.
விளையாட்டினைப் பதிந்திட (Windows + G): நாம் கம்ப்யூட்டரில் கேம் விளையாடுகையில், நாம் விளையாடுவதைப் பதிந்திட விரும்புவோம். பொதுவாக இதற்கு ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் அதிகத் திறனுடன் தேவைப்படும். குறுகிய காலச் செயல்பாட்டினைப் பதிவு செய்திட விண்டோஸ் 10 இயக்கத்தில் வசதி தரப்பட்டுள்ளது. இதற்கு Windows + G கீகளை அழுத்த வேண்டும். இதன் மூலம் மெனு ஒன்று திறக்கப்படும். அல்லது Windows + Alt + G கீகளை அழுத்தி, கேம் இயக்கத்தில் இறுதி 30 விநாடி செயல்பாட்டினைப் பதியலாம். இந்த கால அவகாசத்தினை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு தரப்படுகிறது.
விண்டோஸ் + ஆல்ட் + பிரிண்ட் ஸ்கிரீன்: ஸ்கிரீன் ஷாட் ஒன்றை அமைத்துப் பெற வேண்டுமா? Windows + Alt + Print Screen கீகளை அழுத்துங்கள். அப்போதைய காட்சி மட்டும் உங்களுக்கு படமாகப் பதிந்து கிடைக்கும்.
விண்டோஸ் + எஸ் : (Windows + S) கார்டனா அல்லது தேடல்: விண்டோஸ் 10 இயக்கத்தில், கார்டனா எனப்படும் டிஜிட்டல் பெர்சனல் அசிஸ்டண்ட் டூல், சில நாடுகளில் மட்டுமே இயங்கும் வகையில் தரப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களில் இருந்தால், அல்லது அந்த இடங்களுக்குச் சென்றால், விண்டோஸ் + எஸ் கீகளை அழுத்தினால், கார்டனா செயல்படத் துவங்கும். இல்லை எனில், வேறு இடங்களில் இந்த கீகள், தேடல் கட்டத்தினை உங்களுக்கு வழங்கும்.
விண்டோஸ் + எண் (Windows + Number): நமக்கு அடிக்கடி தேவைப்படும் புரோகிராம்களை, நம் டாஸ்க் பாரில் 'குத்தி' (Pin) வைப்பது நம் வழக்கம். இவற்றில் நமக்குத் தேவையானதைத் திறக்கவும் சுருக்கு விசை உண்டு என்பது எத்தனை பேருக்குத் தெரியும். இது விண்டோஸ் 7 சிஸ்டத்திலேயே நமக்குத் தரப்பட்டது. விண்டோஸ் கீயுடன், நமக்குத் தேவைப்படும் புரோகிராம், டாஸ்க் பாரில் புரோகிராம் வரிசையில் எந்த இடத்தில் உள்ளது என்பதற்கேற்ப, அதற்கான எண் கீயைச் சேர்த்து அழுத்தினால், அந்த புரோகிராம் இயக்கப்படும். எடுத்துக் காட்டாக, வேர்ட் புரோகிராம் மூன்றாவதாக இடம் பெற்றிருந்தால், விண்டோஸ் கீ + 3, வேர்ட் புரோகிராமினை இயக்கும்.
விண்டோஸ் + ஏ (Windows + A) அறிவிப்புகளை அறிய: நம் கம்ப்யூட்டர் இயக்கத்திற்குத் தேவையான அறிவிப்புகள் சில நமக்குத் தரப்பட்டிருக்கும். அவற்றை அறிய, சிஸ்டம் ட்ரே சென்று, நோட்டிபிகேஷன் மெனுவினைப் பெற்றுப் பார்க்கலாம். அங்கு நிறைய ஐகான்கள் இருந்தால், இதனைக் கண்டு கிளிக் செய்வது சற்று சிரமமாக இருக்கலாம். இதற்குப் பதிலாக விண்டோஸ் + A கீகளை அழுத்தினால் போதும்.
விண்டோஸ் + ஐ (Windows + I) செட்டிங்ஸ் மெனு பெற: செட்டிங்ஸ் மெனுவினைப் பெறும் வழிகள் பல இடங்களில் தரப்பட்டுள்ளன. நோட்டிபிகேஷன் மெனு மற்றும் ஆக் ஷன் சென்டர் ஆகிய இடங்களில் காணலாம். ஆனால், உடனே உங்கள் பார்வைக்கு இது வேண்டும் என எண்ணினால், Windows + I கீகளை அழுத்தவும். உடனே செட்டிங்ஸ் மெனு கிடைக்கும். திரையின் ஒளியின் தன்மை, வை பி, புளுடூத் போன்றவற்றில் மாறுதல்களை மேற்கொள்ள இது தேவையாயிருக்கும்.
விண்டோஸ் 10 இயக்கம் முற்றிலும் புதுமையான முறையில் வடிவமைக்கப்பட வேண்டும் என்ற இலக்குடன் தயாரானது. புதுமைகளில் ஓர் அம்சத்தின் சில வசதிகளை மட்டுமே மேலே தந்திருக்கிறோம். இன்னும் பல வசதிகளை அடுத்தடுத்த இதழ்களில் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக