அதிகம் மரணங்களை ஏற்படுத்து கின்ற தொற்றா நோயான வாய்ப்புற்றுநோய் எமது நாட்டில் பரவலாக காணப்படுகின்றது.ஆண்களைப் பொறுத்தவரையில் வாய்ப்புற்றுநோயும் பெண்களை பொறுத்தவரையில் மார்பக புற்றுநோயும் முன்னிலை வகிக்கின்றன.
கட்டுப்பாடற்ற முறையில் பெருகி விரிவடைந்து வளரும் கலங்களே புற்றுநோய்க் கட்டிகளாகின்றன. வழக்கமாக ஒரு சீரான முறையில் விரிவடைந்து வளரும் கலங்கள் கட்டுப்பாட்டை இழக்கும்போது அவை சாதாரணமற்ற இரத்த கலங்களையும் உள்ளடக்கி கட்டிகளாக வளர்கின்றன.
இவ்வாறான கட்டிகளை Tumour என்று அழைப்பர். இவ்வாறான கட்டிகள் உடலில் பல்வேறு உறுப்புகளிலும் ஏற்படலாம்.இவ்வாறு வளரும் புற்றுநோய்க் கட்டிகள் நோய்நிலையை ஏற்படுத்துவதுடன் மரணத்திற்கும் இட்டுச் செல்லக்கூடியவை.
ஒரு உறுப்பில் தோன்றும் கட்டியானது வளர்ந்து அருகிலிருக்கும் உறுப்புகளுக்கும் பரவக்கூடியவை.
மேலும் இவ்வாறான கட்டிகளிலுள்ள புற்றுக்கலங்கள் இரத்தச்சுற்றுடனோ நிணநீர்ச் சுற்றுடனோ பயணித்து வேறு உறுப்புகளிலும் புற்றுநோயை ஏற்படுத்தலாம்.இவ்வாறு தூர உறுப்பொன்றில் ஏற்படுகின்ற இரண்டாம்நிலை புற்றுநோய்க்கட்டிகளை Metastasis என்று அழைப்பர்.
வாயில் ஏற்படுகின்ற புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடிய ஒன்றாகும். இப்புற்றுநோய் ஏற்படுவதற்கு மனிதரின் தவறான பழக்க வழக்கங்களே முக்கிய காரணங்களாக அமைகின்றன.
இன்றைய உலகில் கணிசமானோர் வாயில் வெற்றிலை, பாக்கு, புகையிலை, பான்பராக், நவீன துரித உணவுகள் என உடலுக்கு கெடுதி விளைவிக்கும் பொருட்களைப் பாவிக்கின்றனர். காரமான சுண்ணாம்பு கடுமையான உறைப்புகள் கூட வாயுள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியன.
மேற்குறிப்பிட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி தொடர்ந்து இவற்றை மெல்லும் போது வாய்ச் சுகாதாரம் பாதிக்கப்படுகின்றது.பற்களை சரியாக பராமரிக்காமையினால் அவை உடைந்து கூர்மையடைவதனாலும் அவை நாக்கு மற்றும் வாயின் உட்பகுதிகளை தொடர்ந்து பாதிக்கின்றன. இவையாவும் நாளடைவில் வாய்ப்புற்றுநோயை ஏற்படுத்துகின்றன.
மலையகத்தில் ஆண்கள் மாத்திரமின்றி கணிசமான பெண்களும் வாய்ப்புற்றுக்கு ஆளாவதற்கு அவர்களது வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு பாவனையே காரணமாகின்றன.
வாய்ச்சுகாதாரமின்மையும் ஆரோக்கியமற்ற சமபோஷாக்கற்ற உணவுகள் கூட புற்றுநோய் ஏற்படுகின்ற சாத்தியத்தை அதிகரிக்கின்றன.
வாய்ப்புற்று நோய் ஏற்பட்டவர்களுக்கு உண்பது சிரமமாகின்றது. பேச்சு, குரல் என்பனவும் பாதிக்கப்படுகின்றன. வாய்ப்புற்று நோய் குறிப்பிட்ட ஓரிடத்தில் ஆரம்பித்தாலும் சொக்கு, நாக்கு, முரசு, தாடை, தொண்டை என அருகிலிருக்கும் உறுப்புகளுக்கும் பரவக்கூடியது.
அண்மைய கணக்கெடுப்பின்படி வாய்ப்புற்று நோயால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.
புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் இருந்தும் பல நோயாளர்கள் நோய் முற்றிய நிலையில் தாமதமாக சிகிச்சைக்கு வருகின்றனர்.
இதனால் சிகிச்சை மூலம் குணப்படுத்துவது கடினமாவதுடன் மரணங்களும் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்க வேண்டிய கட்டாய நிலையில் சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
நாம் கடைப்பிடிக்கும் சில எளிய வழிமுறைகள் மூலம் நோயை ஆரம்ப நிலையில் இனம்கண்டு, பூரணமாகக் குணமடைய முடியும்.
வாயில் ஏற்படும் புண்கள், அழற்சிகள், கொப்பளங்கள், வெண்படிவுகள், தடிப்புகள் என்பன சாதாரண சிகிச்சையில் ஆறாமல் இருந்தால் மேற்கொண்டு வைத்திய ஆலோசனை பெற்று பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.
வாயிலிருந்து இரத்தக்கசிவு ஏற்பட்டாலோ வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் சிறுபுள்ளிகள் காணப்பட்டாலோ, சொக்கின் உட்புறம் தடிப்பாக இருந்தாலோ, நாக்கின் அடிப்புறத்தில் சிறுகட்டிகளோ நாக்கின் மேற்புறத்தில் சிறு புண்களோ இருப்பின் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டும்.
சிலரில் ஈறுகள் பலவீனமாகவும் கன்னங்கள் வீங்கியும் காணப்படும். புற்றுக்கட்டிகள் பலவும் ஆரம்பத்தில் வலி வேதனையை ஏற்படுத்துவதில்லை. வாயுள் ஏற்படும் அழற்சிகள் உங்கள் குடும்ப வைத்தியர் வழங்கும் தொற்றுக்களுக்கு எதிரான சிகிச்சைக்கு குணமாகாவிட்டால் அவர் உங்களை பல் வைத்தியரிடமோ தொண்டை காது, மூக்கு, வைத்திய நிபுணரிடமோ (ENT Surgeon) காண்பித்து அதை (Blopsy) செய்து உறுதிப்படுத்துவார்.
புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை அறுவைச் சிகிச்சை, மருத்துவச் சிகிச்சை என்பன உண்டு. தேவையைப் பொறுத்து இவற்றில் ஒன்றையோ அல்லது கூட்டு சிகிச்சையாகவோ புற்றுநோய் வைத்திய நிபுணர் மேற்கொள்வார்.
ஆரம்பநிலையில் சிகிச்சை பெற வருபவர்களை குணமாக்க முடியும்.நோய் முற்றிய நிலையில் சிகிச்சை கடினமாகின்றது.
மருத்துவ சிகிச்சையின் போது பக்கவிளைவுகள் அதிகம் தாங்குவதும் கடினம். எனினும் சிகிச்சை முடிந்ததும் பக்கவிளைவுகள் இல்லாது போய்விடும்.நோயாளி பழைய நிலைக்கு திரும்புவார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக