ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

கனவுகள் பற்றி....

கன­வு­க­ளுக்கு பலன்கள் சொல்­வதைக் கேள்­விப்­பட்­டி­ருப்போம்… கன­வுகள் பற்றி மருத்­துவம் என்ன சொல்­கி­றது என்­பதைத் தெரிந்து கொள்­வ­தற்­காக அலன் ஹொப்சன் என்ற ஆய்­வாளர் பல முயற்­சிகள் செய்­தி­ருக்­கிறார். அவர் கண்­டு­பி­டித்த சில சுவாரஷ்ய­மான உண்­மைகள் இங்கே!


* ஆண்கள், பெண்கள், குழந்­தைகள் கன­வுகள் பொது­வா­னவை. பார்வைக் குறை­பாடு கொண்­ட­வர்கள் எந்தக் காட்­சி­யையும் பார்ப்­ப­தில்லை என்­றாலும், அவர்­க­ளுக்கும் கன­வுகள் வரு­வ­துண்டு.

* கன­வு­களின் ஆயுள் 5 முதல் 20 நிமி­டங்கள் வரைதான். இது­போல ஒருவர் கனவு காண்­பதில் தன் வாழ்­நாளில் சரா­ச­ரி­யாக 6 ஆண்­டு­களைச் செல­வ­ழிக்­கிறார்.

* 95 சத­வீத கன­வுகள் தூங்கி எழுந்­ததும் மறந்­து­வி­டு­கின்­றன. எஞ்­சி­யி­ருக்கும் 5 சத­வீத கன­வு­களே நினைவில் இருக்­கின்ற­ன. செய்­தி­களை நினை­வுத்­தி­ற­னாக மாற்றும் மூளையின் ஃப்ராண்டல் லோப் என்ற பகுதி ஆழ்ந்து உறங்­கும்­போது செயற்­ப­டு­வதில்லை என்­பதே காரணம்.

* கன­வு­களில் 80 சத­வீதம் திரைப் பட பாடல்கள் போல கலர்ஃ­புல்­லா­னவை. சில­ருக்கு மட்­டுமே பாக­வதர் காலம்­போல கறுப்பு வெள்­ளையில் வரு­கி­றதாம்!
இதைத் தெரிந்­து­கொள்­வ­தற்­காக தூங்கி எழுந்­த­வர்­க­ளிடம் ஒரு சார்ட்டில் உள்ள பல்­வேறு வண்­ணங்­களைத் தொடச் சொன்­னார்கள். அவர்கள் தங்கள் கனவில் கண்ட வண்­ணங்கள் தொடர்­பான நிறத்­தையே தொட்­டி­ருக்­கி­றார்கள்.

* வில்­லியம் டாம் ஹொஃப் என்ற ஆய்­வாளர் ஆண்­களின் கன­வு­க­ளுக்கும் பெண்­களின் கன­வு­க­ளுக்கும் நிறைய வித்தி யாசங்கள் உண்டு என்­கிறார். பெண்கள் ஆண்­களை விட சற்று கூடு­த­லான நிமி­டங்கள் கனவு காண்­கி­றார்­களாம். பெண்­களின் கன­வு­களில் நிறைய கேரக்­டர்கள் வரு­கி­றார்­களாம்.

* தூக்­கத்தில் நாய்க்­குட்­டிகள் வாலாட்­டி­னாலோ, கால்­களை அசைத்­தாலோ அவை கனவு காண்­கின்­றன என்­கி­றார்கள் ஆய்­வா­ளர்கள். இதை உறு­தி­யாகச் சொல்ல காரணம், விலங்­கு­க­ளுக்கும் மனி­தர்­களைப் போலவே REM மற்றும் NREM என்­கிற தூக்­கத்தின் நிலை உண்டு என்­ப­துதான்.

* சில கன­வுகள் தெள்­ளத்­தெ­ளி­வாக நினை­வி­லிருந்தால் நீங்கள் ஆழ்ந்து தூங்­க­வில்லை என்றே அர்த்­தமாம். இதன்­மூலம் சுய­நி­னை­வோடு ஒரு கனவை வழி­ந­டத்­து­கி­றீர்கள் அல்­லது கட்­டுப்­ப­டுத்­து­கி­றீர்கள் என்­கி­றார்கள்.

* ஏறக்­கு­றைய 40 ஆண்­டு­க­ளாக, 50 ஆயிரம் கல்­லூரி மாண­வர்­களின் கனவை கால்வின் எஸ் ஹால் என்­பவர் ஆராய்ந்­தி­ருக்­கிறார். இதில் பொசிட்­டி­வான கன­வு­க­ளை­விட பதற்றம், எதிர்­ம­றை­யான எண்­ணங்­கள்தான் பல மாண­வர்­களின் கனவுகளாக இருந்திருக்கின்ற­ன.

* பார்வைத்திறன் குறைபாடு கொண்டவர் களுக்கு காட்சிகளாக கனவுகள் விரியாவிட்டாலும் சப்தங்கள், தொடு உணர்வு, சுவை, கேட்பது, வாசனை போன்ற உணர்வுகளின் வடிவத்தில் கனவுகளை உணர்கிறார்கள் என்கிறார் அலன் ஹொப்சன்.





Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல