வேலை செய்யாத ஸ்பெல் செக்
வேர்ட் செயலியில் நமக்குக் கிடைத்திருக்கும் மிக அருமையான ஒரு வசதி, ஆங்கிலச் சொற்களின் எழுத்துப் பிழை திருத்தம் தான். ஆனால், நாம் தொடர்ந்து டாகுமெண்ட்களை உருவாக்கி வருகையில், சில வேளைகளில், சில வகை சொற்களில் அல்லது டெக்ஸ்ட்டில், இந்த எழுத்துப் பிழை திருத்தம் செயல்படாத நிலையைப் பார்க்கலாம். இதனை எப்படி சீர் செய்வது என இங்கு காணலாம்.
சில வேளைகளில், பெரிய எழுத்துக்களில் (கேபிடல் எழுத்துகள்) அமைந்த சொற்களில் உள்ள பிழைகள் திருத்தப்படாத நிலை ஏற்படும். இந்த வகை சொற்களை, எழுத்துப் பிழை சோதனையிலிருந்து நீக்கும் வகையில், வேர்ட் செயலியில் அமைக்கப்பட்டிருக்கலாம். இதனைச் சரி செய்திட, கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் அழுத்தி, அதன் பின்னர், கீழாக உள்ள Word Options என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் 2010 மற்றும் பின்னர் வந்தவற்றில், File டேப் தேர்ந்தெடுத்து, பின்னர் Options என்பதில் கிளிக் செய்திடவும்)
2. வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸின் இடது பக்கத்தில், உள்ள Proofing என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
3. தொடர்ந்து Ignore Words in UPPERCASE என்பதன் அருகே உள்ள செக் பாக்ஸில், டிக் அடையாளம் இருந்தால், அதில் ஒருமுறை கிளிக் செய்து, அதனை நீக்கவும்.
4. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
சில வேளைகளில், ஒரு பாரா முழுவதும் உள்ள டெக்ஸ்ட், இந்த எழுத்துப் பிழை சோதனைக்கு உட்படாமல் இருக்கும். ஏனென்றால், இந்த பாராவிற்கு மட்டும், Proofing பிரிவில் சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கலாம்.
இதனைச் சரி செய்திட கீழே குறிப்பிட்டுள்ள செயல்பாட்டினை மேற்கொள்ளவும்.
1. பிரச்னையில் உள்ள பாராவினைத் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில் Review டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், Proofing குரூப்பில், Set Language என்னும் டூலில் கிளிக் செய்திடவும். வேர்ட் 2010 மற்றும் பிந்தைய பதிப்புகளில், Language குரூப்பில், Language என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் கீழ் விரி மெனுவில், Set Proofing Language என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் இப்போது Language டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இங்குள்ள Do Not Check Spelling or Grammar என்பதன் அருகே உள்ள செக் பாக்ஸில், டிக் அடையாளத்தை நீக்கவும்.
5. பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக