மாறாநிலை எழுத்தினை மாற்ற
எக்ஸெல் செயலியில் மாறா நிலையில் தரப்பட்டுள்ள எழுத்து வகைக்குப் பதிலாக, அதனைப் பயன்படுத்துபவர்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்கின்றனர். ஆனால், இதனை ஒவ்வொரு முறையும், ஒர்க் புக் வடிவமைக்கும்போது, மாற்ற வேண்டியுள்ளது. ஒரு சிலர் தமிழிலேயே ஒர்க் புக்கினை அமைக்க திட்டமிடுகின்றனர். இவர்கள், தாங்கள் விரும்பும் எழுத்து வகையினை, மாறா நிலை எழுத்தாக எப்படி மாற்றுவது எனத் தெரியாமல் உள்ளனர். இந்த மாற்றத்தினை எளிதாக மேற்கொள்ளலாம். கீழே தந்துள்ளபடி செயல்படவும்.
1. எக்ஸெல் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். ( எக்ஸெல் 2007ல், ஆபீஸ் பட்டனை அழுத்தி பின்னர் கிடைக்கும் விண்டோவில் Excel Options என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2010 மற்றும் எக்ஸெல் 2013 பயன்படுத்துபவர்கள், ரிப்பனில், File டேப் கிளிக் செய்து, அதன் பின்னர் Options என்பதில் கிளிக் செய்திடவும்.)
2. அடுத்து, இடது புறம் Popular (எக்ஸெல் 2007ல்) அல்லது General (எக்ஸெல் 2010 மற்றும் எக்ஸெல் 2013ல்) தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும்.
3. அடுத்து Excel default font change / When creating new work books என்ற பிரிவில், நீங்கள் விரும்பும் எழுத்து வகை மற்றும் அளவினை அமைத்து, ஓகே அழுத்தி வெளியேறவும்.
4. இனி, நீங்கள் அமைத்துள்ள எழுத்து வகையே மாறாநிலை எழுத்தாக, அனைத்து ஒர்க் புக்கிலும் அமையும்.
வரிசைகளை மாற்றலாம்
எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை உருவாக்கியிருப்பீர்கள். தொடர்ந்து வரும் டேட்டாவை கணக்கிட்ட பின்னர் நெட்டு வரிசையில் உள்ளதைப் படுக்கை வரிசையிலும், படுக்கை வரிசையில் உள்ளதை நெட்டு வரிசையிலும் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நீங்கள் திட்டமிடலாம். அல்லது ஏதேனும் ஒரு வகையில் உள்ளதை மட்டும் மாற்றி அமைக்க இன்னொரு ஒர்க் ஷீட்டில் எண்ணலாம்.
இதனை எப்படி மாற்றுவது? நான்கு அல்லது பத்து செல்கள் என்றால் ஒவ்வொன்றாக டைப் செய்துவிடலாம் என்று நீங்கள் முயற்சிக்கலாம். இதுவே அதிகமான எண்ணிக்கையில் செல்கள் உள்ள ஒர்க் ஷீட்டாக இருந்தால் என்ன செய்வது?
எக்ஸெல் இதற்கு அருமையான ஒரு வழி தந்துள்ளது.
எந்த செல்களில் உள்ளதை மாற்ற வேண்டும் என திட்டமிடுகிறீர்களோ அந்த செல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுங்கள்.
பின் கண்ட்ரோல்+சி அழுத்தி காப்பி செய்திடுங்கள்.
அடுத்து எங்கு மாற்றத்துடன் வரிசையை அமைக்க வேண்டுமோ அந்த இடத்தில் முதல் செல்லுக்குச் செல்லுங்கள்.
பின் ALT + E + S அழுத்துங்கள்.அல்லது எடிட் மெனு சென்று பேஸ்ட் ஸ்பெஷல் என்னும் பிரிவில் கிளிக் செய்திடுங்கள்.
இப்போது பேஸ்ட் ஸ்பெஷல் என்னும் சிறிய விண்டோ கிடைக்கும்.
இதில் பல ஆப்ஷன்ஸ் தரப்பட்டிருக்கும். எல்லாவற்றிற்கும் கீழாக ட்ரான்ஸ்போஸ் (Transpose) என்று ஒரு ஆப்ஷன் கிடைக்கும்.
அதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் நீங்கள் எதிர்பார்த்தபடி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக