பைலை விரும்பும்போது பார்க்க: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை மிகக் கவனத்துடன் ரகசியமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் நண்பர் அருகே வருகிறார். அவரிடமிருந்து அதனை மறைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்திடலாம்? உடனே விண்டோ மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் ஹைட் (Hide) என்று இருப்பதைக் கிளிக் செய்திடுங்கள். அல்லது ஆல்ட் + டபிள்யூ + எச் ஆகிய மூன்று கீகளை அழுத்தினாலும் இந்த விளைவு ஏற்படும். நீங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பைல் மறைக்கப்பட்டுவிடும். விண்டோ மெனு சென்று தற்போது திறந்திருக்கும் பைல்களின் பட்டியலைப் பார்த்தாலும் அதில் இந்த பைல் இருக்காது.
சரி. இப்போது அந்த பைலை மீண்டும் திறந்து பணியாற்ற விரும்புகிறீர்களா? மீண்டும் விண்டோ மெனு சென்று அன்ஹைட் (Unhide) என்பதனைக் கிளிக் செய்யலாம். அல்லது ஆல்ட் + டபிள்யூ + யு ஆகிய கீகளை அழுத்தலாம். அப்போது ஒரு விண்டோ திறக்கப்பட்டு அதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பைல்கள் அனைத்தும் காட்டப்படும். நீங்கள் எந்த பைலை மறைத்து வைத்ததிலிருந்து மீட்க விரும்புகிறீர்களோ அந்த பைலின் பெயர் மீது கிளிக் செய்து அதனைத் திறந்து பணியாற்றலாம்.
இப்போது ஒரு சந்தேகம் உங்களுக்கு வரலாம்? மறைக்கப்பட்ட பைலை மீண்டும் கொண்டு வராமல் எக்ஸெல் புரோகிராமை மூடிவிட்டால் என்ன நடக்கும்? அடிப்படையில் பார்க்கையில் எக்ஸெல் புரோகிராமை மூடும்போது, அப்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பைலை பதியவா என்று கேட்கும். மற்ற பைல்களை மூடும்போது சேவ் செய்ய அல்லது வேண்டாம் என நினைத்தால் அதற்கேற்றார்போல் யெஸ் / நோ கொடுத்து வெளியேறலாம்.
இங்கே வேறுபாடு என்னவென்றால் நீங்கள் மறைத்து பின் மீண்டும் திறக்காமல் விட்ட பைலைத் திறக்க பின்னொருமுறை கட்டளை கொடுத்தால், பைல் திறந்து உடனே மறைக்கப்பட்டுவிடும். மீண்டும் விண்டோ மெனு சென்று அன்ஹைட் பட்டனை அழுத்த பைல் மீண்டும் பயன்படுத்தக் கிடைக்கும். எனவே அய்யோ போய்விட்டதே! என்ற கவலை வேண்டாம்.
எக்ஸெல் தேதி உள்ளீடு: எக்ஸெல் புரோகிராமினைப் பொறுத்த வரை, தேதிகளை உள்ளீடு செய்வது என்பது, அதற்கெனத் தனியே சில வரையறைகளைக் கொண்டுள்ளதாக உள்ளது. நாம் தேதிகளாக மாற்றப்படக் கூடிய டேட்டா எதையேனும் உள்ளீடு செய்தால், எக்ஸெல் அதனை தேதியாக எடுத்துக் கொண்டு மாற்றிக் கொள்ளும். நீங்கள் தரும் டேட்டாவினை, எண்கள் அடங்கிய தொகுதியை, ஒரு வரிசை எண்ணாக மாற்றி அமைத்துக் கொள்கிறது. உள்ளாக அதனை தேதி மற்றும் நேரத்தைக் குறிக்க அமைத்துக் கொள்கிறது. எடுத்துக் காட்டாக, கீழே தந்துள்ள அனைத்து டேட்டாக்களும், எக்ஸெல் தேதியாக மாற்றிக் கொள்ளும்.
12/15
12-15/12
15 DEC
December 15, 2015
மேலே தரப்பட்டவற்றுள், நீங்கள் முதல் எடுத்துக் காட்டினை எண்டர் செய்தால், எக்ஸெல் அதனை தேதியாக மாற்றிக் காட்டும். நீங்கள் ஆண்டினை உள்ளிடாமல் விட்டால், எக்ஸெல், நடப்பு ஆண்டினையே நீங்கள் அமைத்துள்ளதாக எடுத்துக் கொள்ளும். இந்த டேட்டாவினை உள்ளீடு செய்கையில், சாய்வு கோடுக்குப் பதிலாக, 'டேஷ்' கூடப் பயன்படுத்தலாம். இரண்டில் எதனைப் பயன்படுத்தினாலும், எக்ஸெல் நீங்கள் தேதியை அமைப்பதாகவே எடுத்துக் கொள்ளும்.
எக்ஸெல் புரோகிராமைனைப் பொறுத்தவரை, இவை ஓர் எண்ணாகவே பதியப்பட்டு வைத்துக் கொள்ளப்படுகின்றன. நீங்கள் திரையில் பார்க்கும் வடிவம், நீங்கள் அந்த செல்லினை எப்படி பார்மட் செய்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும். பலவகை பார்மட்களில் இவை தோன்றும்படி செய்திடலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக