எண்களும் சொற்களும் அமையும் இடைவெளி: வேர்டில் அமைக்கும் டாகுமெண்ட்களில், வரிகளில் வரிசையாக எண்களை அமைப்போம். ஒவ்வொரு வரியிலும், எண்களுக்கும், அடுத்து வரும் டெக்ஸ்ட்டுக்கும் இடையேயான தூரம் நாம் டைப் செய்வதைப் பொறுத்து அமையும். அது போல இல்லாமல், ஒரே மாதிரியாக, இந்த இடைவெளியை அமைக்கலாம். அதற்கான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.
1. ரிப்பனில் Page Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
2. Page Setup குரூப்பில் உள்ள Line Numbers என்னும் டூலில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Line Number Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Page Setup டயலாக் பாக்ஸில் உள்ள Layout டேப்பினைக் காட்டும்.
3. Line Numbers பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது Line Numbers டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
4. அடுத்து From Text என்னும் பாக்ஸில் உள்ள அளவை, நீங்கள் வரிகளில் எந்த அளவிற்கு முன்னதாக எண்கள் இருக்க வேண்டுமோ, அதற்கேற்றார்போல் அதில் தரப்பட்டுள்ள அளவினை அமைக்கவும்.
5. அடுத்து ஓகே கிளிக் செய்து Line Numbers டயலாக் பாக்ஸை மூடவும்.
6. பின்னர், ஓகே கிளிக் செய்து Page Setup டயலாக் பாக்ஸை மூடி வெளியேறவும். இனி நீங்கள் விரும்பியபடி எண்களை அமைக்கலாம். உங்கள் நன்றிக்கு நன்றி.
வேர்ட் டேபிளில் சில செயல்பாடுகள்:
TAB: ஒரு வரிசையில் அடுத்த செல்லுக்குச் செல்ல
SHIFT+TAB: ஒரு வரிசையில் முந்தைய செல்லுக்குச் செல்ல
ALT+HOME: படுக்கை வரிசையில் உள்ள முதல் செல்லுக்குச் செல்ல
ALT+END: படுக்கை வரிசையில் உள்ள கடைசி செல்லுக்குச் செல்ல
ALT+PAGE UP : நெட்டு வரிசையில் உள்ள முதல் செல் செல்ல
ALT+PAGE DOWN: நெட்டு வரிசையில் உள்ள கடைசி செல்லுக்குச் செல்ல
UP ARROW : முந்தைய படுக்கை வரிசை செல்ல
DOWN ARROW: அடுத்த படுக்கை வரிசை செல்ல
வேர்டில் எப்2 கீ: டெக்ஸ்ட் ஒன்றை செலக்ட் செய்கிறீர்கள். பின் அதனை இன்னொரு இடத்தில் கொண்டு அமைக்க விரும்புகிறீர்கள். எப்படி இந்த செயலை மேற்கொள்கிறீர்கள்? டெக்ஸ்ட்டை செலக்ட் செய்த பின்னர் மவுஸின் கர்சரை அதில் கொண்டு சென்று பின் மவுஸால் இழுத்து குறிப்பிட்ட இடம் வந்தவுடன் கர்சரை விடுவித்து அமைக்கிறீர்கள். வேறு வழியாக கட் அல்லது காப்பி செய்து தேவையான இடத்தில் பேஸ்ட் செய்கிறீர்கள். எப்படிப் பார்த்தாலும் இது பல நிலைகளில் மேற்கொள்கிற சமாச்சாரமாக இருக்கிறது.
இதற்கு ஓர் எளிய வழியை எப்2 கீ தருகிறது. இங்கும் முதலில் நகர்த்த வேண்டிய டெக்ஸ்ட்டை செலக்ட் செய்து கொள்ளுங்கள். இங்கும் மவுஸ் வேண்டாம் என்றால் ஷிப்ட் கீயுடன் ஆரோ கீயைச் சேர்த்து இயக்கி டெக்ஸ்ட்டை செலக்ட் செய்திடலாம். செலக்ட் ஆனவுடன் எப்2 கீயை அழுத்துங்கள். அதன் பின் ஆரோ கீ அல்லது பேஜ் அப் அல்லது டவுண் அழுத்தி தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை எங்கு அமைக்க வேண்டுமோ அங்கு செல்லுங்கள். (இப்படிச் செல்லும்போது டெக்ஸ்ட் நகர்த்தும் வேலை வேண்டாம் என்று நினைத்தால் எஸ்கேப் கீயை அழுத்துங்கள்; எல்லாம் ரத்தாகிவிடும்.) இனி எந்த இடத்தில் டெக்ஸ்ட் அமைக்க வேண்டுமோ அந்த இடம் வந்தவுடன் ஜஸ்ட் என்டர் கீயைத் தட்டுங்கள். டெக்ஸ்ட் அந்த இடத்தில் வந்தமர்ந்துவிடும். இது கட் அண்ட் பேஸ்ட் வழிக்கு இன்னொரு செயல்வழியாகும். காப்பி அல்ல.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக