செவ்வாய், 29 நவம்பர், 2016

விண்டோஸ் 10 டாஸ்க் பார்

விண்டோஸ் 10 சிஸ்டத்தின் டாஸ்க் பார், இதற்கு முன் வந்த விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் தரப்பட்டவை போல் தான் அமைக்கப்பட்டு இயங்குகிறது. கம்ப்யூட்டரில் செயல்படும் அனைத்து அப்ளிகேஷன்களுக்கும், குறுக்கு வழிகளையும், ஐகான்களையும் கொண்டு நமக்கு உதவுகிறது. ஆனால், விண்டோஸ் 10 சிஸ்டம், இந்த டாஸ்க் பாரினை நம் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துக் கொள்ள பல வழிகளைக் கொண்டுள்ளது. அவற்றை இங்கு சற்று விரிவாகக் காணலாம்.



டாஸ்க் பாரில் அப்ளிகேஷன்களை 'பின்' செய்திட

நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களையும், அவற்றிற்கான சுருக்கு வழிகளையும், டாஸ்க் பாரில் 'பின்' செய்து பயன்படுத்துவது எளிதான ஒரு செயல். இதனை இரு வழிகளில் மேற்கொள்ளலாம். முதலாவது வழி, அதனை ஸ்டார்ட் மெனுவிலிருந்து அல்லது ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சுருக்கு வழியில் கிளிக் செய்து இயக்குவது. புரோகிராம் இயங்கத் தொடங்கியவுடன், அது இயங்குவது டாஸ்க்பாரில் அதன் ஐகான் மூலமாகக் காட்டப்படும். இந்த ஐகான் மீது ரைட் கிளிக் செய்து, பின்னர் கிடைக்கும் மெனுவில் “Pin to taskbar” என்பதில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.

இரண்டாவது வழியில், குறிப்பிட்ட அப்ளிகேஷன் இயங்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை. ஸ்டார்ட் மெனுவில், அந்த அப்ளிகேஷன் உள்ள இடத்தை அறியவும். அதில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு “More” என்று உள்ள இடம் செல்லவும். அங்கு “Pin to taskbar” என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். அல்லது, அந்த அப்ளிகேஷனின் ஐகானை மவுஸால் இழுத்து வந்து டாஸ்க் பாரில் விட்டுவிடவும். இதன் மூலம் உடனடியாக, டாஸ்க் பாரில் அப்ளிகேஷனுக்கான ஷார்ட் கட் அமைக்கப்படும். இந்த அப்ளிகேஷனை டாஸ்க் பாரில் இருந்து நீக்குவதற்கு, மீண்டும் அந்த ஐகான் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் “Unpin from taskbar” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

டாஸ்க் பார் ஜம்ப் லிஸ்ட்டில் பைல் மற்றும் போல்டர்

விண்டோஸ் 10, பைல்களையும் போல்டர்களையும் நாம் எளிதில் அணுகிப் பெற்று பயன்படுத்த “ஜம்ப் லிஸ்ட்” (Jump List) என்ற ஒன்றை வழங்குகிறது. இதனை 'கான்டெக்ஸ்ட் மெனு' (Context Menu) என்றும் அழைக்கலாம். டாஸ்க் பாரில் அமைக்கப்பட்ட ஒவ்வொரு அப்ளிகேஷனுக்கும் ஒரு ஜம்ப் லிஸ்ட் கிடைக்கும். அந்த ஐகானில் ரைட் கிளிக் செய்தால், அந்த ஜம்ப் லிஸ்ட் மேலாக எழுந்து வரும்.

எடுத்துக் காட்டாக, “பைல் எக்ஸ்புளோரர்” ஐகான் 'பின்' செய்து வைக்கப்பட்டு, அதன் ஜம்ப் லிஸ்ட்டை இயக்கினால், நீங்கள் அண்மையில் பார்த்த அனைத்து போல்டர்களும் காட்டப்படும். இதில் எதனைப் பார்க்க விரும்புகிறோமோ, அதில் கர்சரைக் கொண்டு கிளிக் செய்தால் போதும். இந்தப் பட்டியலிலும், நாம் போல்டர்களை 'பின்' செய்து வைக்கலாம். மேலாக 'பின்' செய்த போல்டர்களும், கீழாக அண்மையில் பார்த்த போல்டர்களும் இருக்கும். 'பின்' செய்துவிட்டால், நாமாக அதனை நீக்கும் வரை இந்த பட்டியலில் இருக்கும். அடுத்த பிரிவில், நாம் அண்மையில் பார்த்த போல்டர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கும். இது மாறா நிலையில் 12 போல்டர்களாகும். எனவே 13ஆவதாக, ஒரு போல்டர் திறக்கப்பட்டால், பழைய போல்டர்களில் முதலாவதாக வந்தது நீக்கப்படும். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றால், விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

விண்டோஸ் இயக்கத்தின் முந்தைய பதிப்புகளில் கான்டெக்ஸ்ட் மெனு வேறு மாதிரியாகக் கிடைத்து வந்தது. தற்போது கறுப்பு பட்டியலில் பெயர்கள் மட்டும் காட்டப்படுகின்றன. பழையபடி கான்டெக்ஸ்ட் மெனு வேண்டும் என்றால், ஐகானில் ரைட் கிளிக் செய்திடுகையில், ஷிப்ட் பட்டனை அழுத்திக் கொண்டு கிளிக் செய்திடவும். பழைய கான்டெக்ஸ்ட் மெனு கிடைக்கும். இதில் ஷார்ட் கட் உருவாக்குவதற்கான ஆப்ஷன் கிடைப்பதால், போல்டர் ஒன்றுக்கு ஷார்ட் கட் உருவாக்க விரும்பினால், பழைய கான்டெக்ஸ்ட் மெனுவினைப் பெறலாம்.

கார்டனா கட்டத்தினை மறைக்க

கார்டனா தேடல் கட்டம் டாஸ்க் பாரில் அதிக இடத்தை எடுத்துக் கொள்கிறது. இது எப்போதும் நமக்குத் தேவை இல்லை. எதனையாவது தேடும் போது கூட, விண்டோஸ் கீயை அழுத்திவிட்டு, அப்படியே தேடலுக்கான அடிப்படை சொற்களை டைப் செய்தால் தேடல் இடத்தில் சொற்கள் அமைக்கப்படும். குரல் வழி தேடலை மேற்கொள்ள கார்டனா தேடல் கட்டத்தில் உள்ள மைக்ரோபோன் ஐகான் மீது கிளிக் செய்து பேசலாம். இதற்குப் பதிலாக, விண்டோஸ் கீ + 'சி' கீ அழுத்தினால், நமக்கு மைக்ரோபோன் இயங்கத் தொடங்கும்.

எனவே, கார்டனா தேடல் கட்டத்தினை, டாஸ்க் பாரிலிருந்து நீக்கிவிடலாம். தேடல் கட்டத்தினை நீக்கிவிட்டு ஐகானை மட்டும் வைத்துக் கொள்ளலாம். அல்லது, இரண்டையும் நீக்கிவிடலாம். இதற்கு டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், “Cortana > Show Cortana icon” எனச் செல்லவும். இங்கு “Hidden” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இரண்டும் மறையும். “Show Cortana icon” என்பதைத் தேர்ந்தெடுத்தால், தேடல் கட்டம் மறைந்து போய், ஐகான் மட்டும் டாஸ்க் பாரில் காட்டப்படும்.

டாஸ்க் வியூ பட்டனை நீக்க

டாஸ்க் பாரில் அமைந்துள்ள “Task View” பட்டனை அழுத்துவதன் மூலம் நாம் திறந்து வைத்துச் செயல்படுத்தும் அனைத்து அப்ளிகேஷன்களையும் விண்டோக்களையும் காணலாம். இதன் மூலம் விர்ச்சுவல் டெஸ்க்டாப்பில் செயல்படவும் வழி தரப்படுகிறது.

ஆனால், இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள “Task View” பட்டன் தேவை இல்லை. விண்டோஸ் கீயையும், டேப் கீயையும் ஒரு சேர அழுத்தினால், இதே காட்சி கிடைக்கும். எனவே, டாஸ்க் பாரில் இடம் வேண்டும் என விரும்பினால், இதனை நீக்கலாம். டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் “Show Task View button” என்பதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும்.


சிஸ்டம் ஐகான்களை மறைக்க

சிஸ்டம் ட்ரே என முன்பு அழைக்கப்பட்ட “Notification Area” வில், சிஸ்டம் ஐகான்கள் மற்றும் பின்னணியில் இயங்கும் செயலிகளின் ஐகான்கள் காட்டப்படுகின்றன. கடிகாரம், நெட்வொர்க், லொகேஷன், ஆக் ஷன் சென்டர் போன்றவை இதில் அடக்கம். இந்த இடத்தில் காட்டப்படும் அனைத்தும் நமக்குத் தேவை இல்லாமல் இருக்கலாம். இவற்றில் எவை தேவை என்று பார்த்து, மற்றவற்றை மறைத்து வைக்கலாம். இதற்கு டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Settings” என்பதில் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் டாஸ்க் பார் செட்டிங்ஸ் பக்கத்தில், கீழாகச் சென்று, “Turn system icons on or off” என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் விண்டோவில், எந்த செயலிகளின் ஐகான்கள் உள்ளன என்று காட்டப்படும். அவற்றை காட்டவும் மறைக்கவும் ஒவ்வொன்றின் எதிரேயும் ஸ்லைடர் பட்டன் காட்டப்படும். இதனைப் பயன்படுத்தி, ஐகானை காட்டலாம் மற்றும் மறைக்கலாம்.

டாஸ்க் பார் திரையின் இன்னொரு ஓரத்தில்

விண்டோஸ் இயக்கத்தில், மாறா நிலையில், டாஸ்க் பார் கீழாகக் காட்டப்படுகிறது. இதனை திரையின் எந்தப் பகுதியிலும் அமைக்கலாம். மிகப் பெரிய திரையாக இருந்தால், டாஸ்க் பாரை வேறு ஒரு இடத்தில், இடது, வலது அல்லது மேலாக என வைக்கலாம். இதற்கு இரு வழிகள் உள்ளன. முதலில், டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்து, “Lock the taskbar” என்பதில் டிக் அடையாளத்தினை எடுக்கவும். பின்னர், டாஸ்க் பாரினை மவுஸ் மூலம் பிடித்து இழுத்து, நாம் விரும்பும் ஓரத்தில் வைத்துவிடலாம்.

இன்னொரு வழி “Settings” பிரிவு சென்று அமைப்பது. இந்த விண்டோவில், கீழாகச் சென்று “Taskbar location on screen” என்ற இடத்தைக் காணவும். இதில் வலது ஓரம் தரப்பட்டுள்ள, கீழ் நோக்கிய அம்புக் குறியினைக் கிளிக் செய்தால், இடது, வலது, கீழ் மற்றும் மேல் என நான்கு புறங்களும் தரப்பட்டிருக்கும். இதில் நாம் விருப்பப்படுவதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

டாஸ்க் பாரின் வண்ணம், ஒளி மாற்ற

விண்டோஸ் 10 இயக்க முறைமையில், டாஸ்க் பார் கருப்பு வண்ணத்தில் தான் உள்ளது. இதனை மாற்றி வண்ணத்திலும், வண்ண அடர்த்தியை மாற்றியும் அமைக்கலாம். இதற்கு Windows+I கீகளை அழுத்தி, செட்டிங்ஸ் இடைமுகத்தினைப் பெறவும். செட்டிங்ஸ் விண்டோவில், “Personalization” என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் விண்டோவில் “Colors” என்னும் டேபில் கிளிக் செய்திடவும். இங்கு டாஸ்க் பாரை நீங்கள் விரும்பியபடி அமைக்க, இரு வழிகள் கிடைக்கும். இதில், “Make Start, taskbar, and action center transparent” என்பதைக் கிளிக் செய்து, டாஸ்க் பார் வண்ணம் அடர்த்தி எப்படி இருக்க வேண்டும் என்பதனை அமைக்கலாம். இங்குள்ள “Show color on Start, taskbar, and action center” என்பதனை முடக்கி (OFF) வைத்தால், டாஸ்க் பார் கருப்பு வண்ணத்தில் அமையும். இதை இயக்கி வைத்தால், நாம் தேர்ந்தெடுக்கும் வண்ணத்தில் டாஸ்க் பார் அமையும். ஆனால், வண்ண அடர்த்தியை, ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்தே அமைக்க முடியும்.
மேலே காட்டப்பட்டுள்ள வழிகளைப் பயன்படுத்தி, டாஸ்க் பாரினை நீங்கள் விரும்பியபடி, விரும்பிய ஐகான்களுடன் அமைக்கலாம். இன்னும் சில நகாசு வேலைகளை இதில் அமைக்கலாம். அவற்றை இன்னொரு கட்டுரையில் பார்க்கலாம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல