சில வைரஸ் அல்லது மால்வேர்கள் நம் கம்ப்யூட்டரைக் கைப்பற்றியவுடன், நம்மால் கம்ப்யூட்டரை இயக்க முடியாதபடி செய்து, தகவல்களைத் திருடும். சில நாம் செயல்படுகையில், கொஞ்சம் கொஞ்சமாக நம் தகவல் பரிமாற்றத்தைக் கண்காணித்துப் பின் திருடும். இவற்றின் செயல்பாடுகளில் ஒரே சீரான நிலையைக் காண இயலாது. இருப்பினும், கீழே தரப்பட்டுள்ள செயல்பாடுகள், நீங்கள் கம்ப்யூட்டரை இயக்கும்போது தென்பட்டால், உங்கள் கம்ப்யூட்டர் மால்வேர் புரோகிராம்களால் தாக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டுவிடும் நிலையில் உள்ளதாகக் கொள்ளலாம்.
1. நீங்கள் பயன்படுத்தும் பிரவுசர், நீங்கள் விரும்பாமலேயே, நீங்கள் அமைக்காத முகவரி உள்ள தளம் ஒன்றுக்குச் செல்கிறது.
2. மாறா நிலையில் நீங்கள் அமைத்த தேடல் சாதனம் மாற்றப்பட்டுள்ளது. புதிய சர்ச் இஞ்சினில், நீங்கள் எதனைத் தேடினாலும், அது புதியதாக, உருவாக்கப்பட்ட இஞ்சின் உள்ள இணைய தளத்திற்குச் செல்கிறது.
3. ஆண்ட்டி வைரஸ், ஆண்டி ஸ்பைவேர் அல்லது ஆண்ட்டி மால்வேர் தளங்களுக்கு நீங்கள் செல்கையில், நீங்கள் தடுக்கப்படுகிறீர்கள்.
4. வெப் பிரவுசரைப் பயன்படுத்துகையில், பல்வேறு பாப் அப் விண்டோக்கள் கிடைக்கின்றன. அவற்றை உங்களால், மூட இயலவில்லை.
5. புதியதாக, நீங்கள் அமைக்காத பேவரிட் தள முகவரிகள் அல்லது புக்மார்க் அமைக்கப்படுகின்றன.
6. வெப் பிரவுசர் மிகவும் மெதுவாக இயங்குகிறது.
மேலே காட்டப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால், சரியான ஆண்ட்டி வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராமினை நீக்கும் செயலிகளை இயக்கி, அவற்றை நீக்கவும்.
வங்கிக் கணக்கு, மின் அஞ்சல் மற்றும் பிற பாஸ்வேர்டுகளை மாற்றவும்.
அடிக்கடி வங்கிக் கணக்கினைக் கண்காணிக்கவும். வங்கியுடன் தொடர்பு கொண்டு, நெட்பேங்க் வசதியினை முடக்கி வைக்கவும். முக்கிய பைல்களுக்கு பேக் அப் எடுத்து வைக்கவும்.
விண்டோஸ் இயக்கத்திற்கான அப்டேட் பைல்களை தரவிறக்கம் செய்து அப்டேட் செய்திடவும்.
ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை அப்டேட் செய்திடவும்.
இந்த சந்தேகம் ஏற்பட்ட காலத்திலிருந்து, புதியதாக இன்ஸ்டால் செய்த புரோகிராம்களை, அவற்றின் அனைத்து பைல்களுடன் நீக்கவும்.
ப்ளக் இன் மற்றும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களில், மிக மிக தேவையானவை தவிர மற்றவற்றை நீக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக