“Dark Web” “இருண்ட இணையம்” என்று ஓர் இணையம் உண்டு.
இரண்டு வகையான இணையங்கள் உள்ளன. ஒன்று நாம் அனைவரும் தகவல் தேடும் இணையம். கூகுள் சர்ச் போன்ற தேடல் சாதனங்களால் இதனைத் தேடி நாம் தகவல்களைப் பெறுகிறோம்.
இன்னொரு இணையத்தின் பெயர் “deep web”. இதன் ஒரு பகுதியே Dark Web.
கூகுள் அல்லது பிங் போன்ற தேடல் சாதனம் மூலம் தேடுகையில் இந்த இணையத்தில் உள்ளவை கிடைக்காது. அதற்கென தனியாக சாப்ட்வேர் அப்ளிகேஷன் மற்றும் அனுமதி வேண்டும்.
Tor என்ற இலவச சாப்ட்வேர் மூலம் இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டுள்ள இணைய தளங்கள் குறித்து தகவல் பெறலாம் என்று சொல்லப்படுகிறது.
இதனைப் பயன்படுத்தினால், வழக்கமான நம்முடைய இணையத் தேடலை மற்றவர்கள் அறிந்து கொள்ள இயலாமல் மறைக்கலாம். இந்த இருண்ட இணையம் மூலம், சில நாடுகளில், அரசியல் கட்சிகளை எதிர்த்து குழப்பம் செய்பவர்கள் தனியே ரகசியமாகத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.
தடை செய்யப்பட்ட போதை மருந்து விற்பனை, Silk Road என்னும் இணைய தளம் மூலம் இந்த இருண்ட இணையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இது கள்ளச் சந்தைக்கென உருவாக்கப்பட்ட இணைய தளம். ஆனால், யாரும் எளிதில் அணுக முடியாது.
இதனால் நன்மை என ஏதாவது உண்டா?
ஒரு நாட்டில் வாழும் மக்கள், அதன் அரசால் ஒடுக்கப்பட்டால், அவர்கள் இந்த இருண்ட இணையத்தை அணுகி தங்களின் இயலாமையை எடுத்துரைக்க முடியும். அரசால் தடை செய்யப்பட்ட இணைய தளங்களைப் பார்க்க இயலும். ஆனால், இதனை அணுகாமல் இருப்பதே நலம். இல்லையேல் பலவகை சிக்கல்களுக்கு ஆளாவீர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக