1989 நவம்பர் 27ல்தான் தமிழீழ விடுதலைப் புலிகள்(எல்.ரீ.ரீ.ஈ) அதன் வருடாந்த மாவீரர் நாள் நிகழ்வை முதன்முதலில் அனுஷ்டித்தார்கள். அப்போதிருந்து 27 வருடங்கள் கடந்து நவம்பர் 27, 2016ல் அதன் 27வது நினைவுதினம் அனுஷ்டிக்கப் படுகிறது.
மே 2009ல் எல்.ரீ.ரீ.ஈ இராணுவத் தோல்வியை சந்தித்தபோதிலும் அதற்கு மாறாக இந்த நிகழ்வு உலகத் தமிழ் புலம்பெயர்ந்தவர்களில் ஒரு பிரிவினரால் பெரிய அளவில் தொடர்ந்து அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைவுக்குப் பின்னர் இந்த வைபவம் அதன் பளபளப்பின் பெரும்பகுதியை இழந்துவிட்டது. எல்.ரீ.ரீ.ஈ யின் ஆட்சி ஓங்கியிருந்த காலத்தில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்ட விதத்துடன் ஒப்பிடும்போது இன்றைய நாட்களில் அதன் கம்பீரம் குறைந்து காணப்படுகிறது. இருந்தபோதும் இறந்த புலிகளை மாவீரர்களாக நினைவு கூருவது, ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ இராணுவ ரீதியாக அழிக்கப் பட்டாலும் அதையும் மீறி நிலைத்திருக்கும் புலிகளின் ஒரு மரபாக இருந்து வருகிறது.
மாவீரர் நாளைப்பற்றிய ஒரு மாயத்தோற்றம் ஸ்ரீலங்கா தமிழ் புலம்பெயர்ந்தவர்களில் ஒரு பெரும் பகுதியினரின் கற்பனையை ஆக்கிரமித்துள்ளது. முள்ளிவாய்க்கால் தோல்வி ஏற்பட்டபோதிலும் ஏன் மாவீரர் நாள் முக்கியத்துவம் பெறுகிறது?
மாவீரர் நாள் நிகழ்வின் பரிணாம வளர்ச்சியின் பின்னணியைப் பற்றி ஒரு சுவராஸ்யமான ஆய்வு உள்ளது.இந்த எழுத்தாளர் கடந்த காலங்களில் இந்த தலைப்பு பற்றி அநேக கட்டுரைகள் எழுதியுள்ளார்.ஆகவே இந்த கட்டுரை அவரின் முந்தைய எழுத்துக்களின் கவனத்தை தாராளமாகக் ஈர்த்துள்ளது. இந்த நிகழ்வின் வரலாற்றை சுருக்கமாக தேடுவதின் மூலம் நான் எனது கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.
கம்பர்மலை சத்தியநாதன் என்கிற சங்கர்
போராட்டத்தில் சாவைத் தழுவிய முதல் தமிழீழ விடுதலைப் புலி வீரர், எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த இடமான வல்வெட்டித்துறையை அடுத்துள்ள வடபகுதி கிராமமான கம்பர்மலையை சேர்ந்த சத்தியநாதன் ஆவார். சத்தியநாதன் அல்லது சங்கர் என்பவர் சுரேஷ் என்றும் அழைக்கப்படுவார், இவர் 1982 நவமshankar்பர் 27ல் மரணமானார்.
கடற்புலிகளின் சிறப்பு தளபதி தில்லையம்பலம் சிவனேசன் என்கிற சூசை, சங்கரின் சகோதரியை மணந்துள்ளார், சூசை, வடமராட்சி பகுதியின் கரையோரக் கிராமமான பொலிகண்டியை சேர்ந்தவர். இப்போது சூசை இல்லாவிட்டாலும் அவரது மனைவியும் மற்றும் பிள்ளைகளும், போரின் இறுதிநாட்களில் வன்னியில் இருந்து படகு மூலம் தப்பிச் செல்லும்போது, ஸ்ரீலங்கா கடற்படையினரிடம் பிடிபட்டார்கள். ஒரு கட்டுப்பாடான விடுதலை உத்தரவின் கீழ் அந்தக் குடும்பம் இப்போது திருகோணமலையில் வசித்து வருகிறது.
கம்பர்மலையை சேர்ந்த பண்டிதர் என்கிற ரவீந்திரனைப் போலவே சங்கரும் பிரபாகரனின் பாலிய நண்பர் என்பதுடன் அவர் ஆரம்பத்தில் ஆட்சேர்ப்பு செய்தவர்களில் ஒருவராவார். எல்.ரீ.ரீ.ஈ அனுதாபிகள் என சந்தேகிக்கப்படும் தமிழ் புத்திஜீவிகள் மற்றும் தொழில்நிபுணர்களை இராணுவம் தேடுதல் நடத்தப்போகிறது என்பதை எச்சரிக்கை செய்வதற்காக யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் வசித்துவந்த நித்தியானந்தனின் வீட்டுக்கு சங்கர் போயிருந்தார்.
சங்கர், யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் முத்தையா நித்தியான்தன் மற்றும் அவரது மனைவியான முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளரும் பின்னர் ஒரு முன்னணி பெண்கள் பாடசலையில் ஆசிரியையாக பணியாற்றிவரும் நிர்மலாவுடனும் பேசிக்கொண்டிருந்த போதே, ஒரு தொகுதி இராணுவ வீரர்கள் அந்த வீட்டை சுற்றிவளைத்து விட்டனர். சங்கர் வழிநெடுக சூடு நடத்தியபடியே இராணுவ பாதுகாப்பு வளையத்தை விட்டு ஒருவாறு வெளியேறினாலும், அந்த நடவடிக்கையில் தீவிர காயங்களுக்கு உள்ளானார். நித்தியானந்தன் தம்பதியினர் கைது செய்யப்பட்டார்கள்.
தளையசிங்கம் சிவகுமார் என்கிற அன்ரன் மாஸ்ரர்
பின்னர் சங்கரின் நிலமை மோசமானதால் மற்றொரு மூத்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவரும் பின்நாட்களில் திம்பு பேச்சு வார்த்தைகளில் பிரதிநிதித்துவம் வகித்தவருமான அன்ரன் மாஸ்ரர் என்கிற தளையசிங்கம் சிவகுமார் காமடைந்த சங்கரையும் கொண்டு அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வதற்காக தமிழ் நாட்டுக்கு படகுமூலம் ஒரு அபாயகரமான இரகசிய கடற்பயணத்தை மேற்கொண்டார். இது 1983க்கு முந்தைய காலப்பகுதியில் நடந்தது, அப்போது எல்.ரீ.ரீ.ஈ சுமார் 25 முதல் 30 வரையான முழுநேர செயற்பாட்டாளர்களை மாத்திரம் கொண்டிருந்த காலம், அத்துடன் வயர்லஸ் கருவிகள் உட்பட மிகக் குறைந்த வளங்களையே அது கொண்டிருந்தது.
ஆபத்தான காயங்களுக்கு உள்ளாகியிருந்த சங்கரை, தமிழ்நாட்டின் கரையோரக் கிராமமான கோடியக்கரையில் ஒரு இரகசியமான இடத்தில் தங்க வைத்துவிட்டு, எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரன் மற்றும் சிலர் தங்கியிருந்த இடமான மதுரைக்கு அன்ரன் சென்றார். இது பிரபாகரன் நீதிமன்ற உத்தரவுப்படி மதுரையிலேயே தங்கவேண்டியிருந்த காலம் ஏனென்றால் அவர் பட்டப்பகலில் தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தின் (புளொட்) தலைவர் உமாமகேஸ்வரனுடன் சென்னை பாண்டிபஸாரில் நடந்த ஒரு துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்பு பட்டிருந்தார். அப்போது, தமிழ்நாட்டின், மதுரை மேற்கு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த பழனியப்பன் நெடுமாறன் வழங்கிய உதவியினால் அவருக்குச் சொந்தமான ஒரு பண்ணை வீட்டுக்கு மருத்துவ சிகிச்சைக்கு சங்கர் கொண்டுவரப்பட்டார்.
கரையோர மறைவிடத்தில் சங்கரைக் கவனித்து வந்தவர்கள் அறியாத்தனமாக அவரது தாகத்தை தணிப்பதற்கு ஏராளமான நீரை பருகக் கொடுத்துவிட்டார்கள். இது அவரது நிலமையை சுகப்படுத்த முடியாத ஒரு பருவத்துக்கு ஆளாக்கிவிட்டது. மதுரையில் சங்கர் பிரபாகரனின் மடியில் படுத்தபடி “தம்பி, தம்பி” என்று முணுமுணுத்த படியே உயிர் விட்டார்(தம்பி என்பது பழைய நாட்களில்; பிரபாகரனுக்கு வழங்கப்பட்ட செல்லப்பெயர்), அதேவேளை வெளிப்படையாக குலுங்கி குலுங்கி அழுத எல்.ரீ.ரீ.ஈ தலைவர் தனது தலைமுடியை பிய்த்துக் கொண்டார். எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பகிரங்கமாக அழுத வெகு சில சம்பவங்களில் இதுவும் ஒன்று. மோதலில் ஒரு உறுப்பினர் உடனடியாகவோ அல்லது அதைத்தொடர்ந்தோ மரணமடைவதோ அந்த நாட்களில் எல்.ரீ.ரீ.ஈக்கு ஒரு புதிய நிகழ்வு ஆகும்.
ஏழு வருடங்களுக்குப் பிறகு 1989 நவம்பர் 27ல் முல்லைத்தீவு மாவட்ட காடான நித்திகாய்குளத்தில் இடம்பெற்ற ஒரு இரகசிய நிகழ்வில் கிட்டத்தட்ட 600 எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் ஒன்றுகூடினார்கள். அந்த நிகழ்வு புதிதாகப் பிரகடனப் படுத்தப்பட்ட மாவீரர் நாள் ஆகும். இது இந்திய இராணுவம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சார்பாக எல்.ரீ.ரீ.ஈ உடன் போரிட்டு வந்த காலம். அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாஸவுக்கும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ க்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டதின் காரணமாக அந்த வருடம் செப்ரம்பர் 21ல் ஒரு யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
கொள்கையளவில் துருப்புக்களை திருப்பியழைப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்திய பாராளுமன்ற தோதல்கள் டிசம்பர் 1989ல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது, அது ராஜீவ் காந்தி திரும்பவும் தோந்தெடுக்கப்படுவாரா அல்லது இல்லையா என்பதை தீர்மானிப்பதாக இருந்தது. அந்த தீர்ப்பின் படியே ஸ்ரீலங்காவில் உள்ள இந்திய இராணுவத்தின் தலைவிதி நிர்ணயிக்கப் படுவதாக இருந்தது. இதற்கிடையில் எல்.ரீ.ரீ.ஈ தலைவர், இறந்த தனது உறுப்பினர்களை கௌரவிக்கும் விதமாக மாவீரர் நாள் என்கிற தனியான ஒரு விழாவினை அனுசரிக்க நினைத்தார்.
அப்போது இந்திய இராணுவத்தின் 132,000 துருப்புக்களுக்கு எதிராக நின்று தாக்குப்பிடித்த தனது இயக்கத்தின் செயல்பாட்டை எண்ணி எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பெருமிதம் கொண்டார். இந்திய – லங்கா ஒப்பந்தம் கையெழுத்கதாகி போர் நிறுத்தம் ஏற்பட்டது வரையான காலத்தில் யுத்தத்தில் எல்.ரீ.ரீ.ஈ 632 போராளிகளை இழந்திருந்தது. இந்திய இராணுவத்துடன் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோது அது மேலும் 711 போராளிகளை இழந்திருந்தது. பிரபாகரன் அவர்களது பங்களிப்பை அங்கீகரிக்க, அவர்களின் தியாகத்தை மதிக்க மற்றும் அவர்களின் நினைவாக கூட்டாக ஒரு அஞ்சலி செலுத்த விரும்பினார். அதற்காக ஒரு விசேட தினத்தை பிரகடனப் படுத்துவதிலும் சிறந்த வழி வேறு என்ன? முதல் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் தனது வாழ்வை முடித்துக் கொண்ட தினத்தை விட அதற்கான வேறு நாள் இருக்க முடியுமா? ஆகவே அதற்கான நாளாக நவம்பர் 27 தெரிவானது.
வரலாற்றுப் பிரகடனம்
முதலாவது மாவீரர் நாள் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட விவகாரமாக இருந்தது, அதன் சிறப்பம்சமாக எதுவித முன் ஆயத்தமுமின்றி பிரபாகரன் தனது பின்தொடர்பாளர்களுக்கு உணர்ச்சியுட்டும் விதமாக உணர்ச்சி பொங்க உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில்தான் பிரபாகரன் தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரகடனத்தை உச்சரித்தார், “ தமிழ் ஈழப் பிரச்சினையை எப்போதாவது பிரபாகரன் காட்டிக்கொடுக்க முன்வந்தால் நீங்கள் எல்லோரும் என்னைக் கொல்ல வேண்டும்”.
இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்ட காணொளிக் காட்சி அடங்கிய கசெட்டை இந்த எழுத்தாளர் பார்த்துள்ளார். பிரபாகரன் எல்.ரீ.ரீ.ஈயின் வரலாற்றை பதிவு செய்யும்போது உணர்ச்சி மிக்கவர்களாய் தொண்டர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் எல்.ரீ.ரீ.ஈயினால் கொலை செய்யப்பட்டதாக கூறுகிறார். “ஒரு கட்டத்தில் தமிழ் ஈழத்துக்கு அமிர்தலிங்கம் ஆதரவளித்தார் பின்னர் அவர் அதைக் காட்டிக் கொடுத்துவிட்டார். அதனால்தான் நாங்கள் அவரைக் கொன்றோம். நாளைக்கு பிரபாகரன் தமிழ் ஈழ விடயத்தை காட்டிக்கொடுத்தால் நீங்கள் எல்லோரும் என்னைக் கொல்ல வேண்டும். தமிழ் ஈழத்தை காட்டிக் கொடுப்பவர்கள் எவராயிருந்தாலும் கொல்லப்பட வேண்டியவரே” என்று புலிகளின் தலைவர் அப்போது சொன்னார். இதைத்தொடர்ந்து புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்ட இந்த காணொளிஅடங்கிய கசெட்டில் குறிப்பிட்ட இந்தக் காட்சி வெட்டப்பட்டு பரவலாக விநியோகம் செய்யப்பட்டிருந்தது.
கடந்த நூற்றாண்டின் தொண்ணூறுகளில், வட மாகாணத்தின் பெரும் பகுதியையும் மற்றும் கிழக்கு மாகாணத்தின் கணிசமான பகுதிகளையும் எல்.ரீ.ரீ.ஈ தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததை காண முடிந்தது. இந்த காலப்பகுதியில் எல்.ரீ.ரீ.ஈ தனது இறந்த வீரர்களுக்கு நினைவாஞ்சலி செலுத்தும் விழா சம்பிரதாயத்தை பெரிய அளவுக்கு முன்னேற்றியிருந்தது.
தமிழர்களின் வீரமிக்க பாரம்பரியத்தில் நடுகல் வழிபாடு என்கிற ஒரு வழக்கம் இருந்தது, அதன் கருத்து நடப்பட்ட கல்லை வழிபடுவது ஆகும். யுத்தத்தில் மரணமடைந்த வீரர்களின் கல்லறைகளுக்கு முன்னால் அவர்களின் விபரங்கள் பதித்த அடையாளக்கற்கள் நாட்டப்பட்டன. இவற்றுக்கு ஒரு விசேட பாராட்டு சடங்குகளுடன் ஒழுங்காக மரியாதை செலுத்தப்பட்டன. சங்க காலத்து தமிழ் இலக்கியங்கள் இந்த நடுகல் வழிபாடு நடைபெற்றது தொடர்பான கருத்துக்களை குறிப்புகளுடன் வெளிப்படுத்துகின்றன.
மொகலாயர் மற்றும் நாயக்கர் ஆட்சியின் எழுச்சியும் அதைத் தொடர்ந்து ஐரோப்பிய காலனித்துவ வருகையும் தமிழ் பேரரசுகளின் வீழ்ச்சிக்கு வித்திட்டதால் தமிழர்கள் மத்தியில் இருந்த வீர வழிபாடு பலவீனமடைந்து போய்விட்டது. பல தலைமுறைகளுக்கு யுத்தம் என்பது கிட்டத்தட்ட அறியாத ஒன்றாகவே போய்விட்ட ஒரு சூழ்நிலையில் யுத்தத்தில் மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வழக்கம் அருகிவிட்டது. இப்போது எல்.ரீ.ரீ.ஈ தமிழர்களின் வீரக் கலாச்சாரத்தின் வேர்களுக்கு திரும்பிச் சென்றதுடன் அதன் மிகவும் சாத்தியமான அடையாளம் மற்றும் சடங்குகளை புனரமைத்துள்ளது. 1991 முதல் நவம்பர் 21 மதல் 27 வரையான முழு வாரமும் மாவீரர் வாரமாக பிரகடனப் படுத்தப்பட்டது. சுவராஸ்யமாக எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் நவம்பர் 26 ஆக உள்ளது. இந்த நாள் மாவீரர் வாரத்துடன் வருவதால் அதனுடன் அதிக முக்கியத்துவம் சேர்ந்துள்ளது.
உண்மையானதும் அதேபோல மற்றவர்களை திருப்தி செய்யும் போலியானதுமான உணர்ச்சிகளின் பிரவாகம் அங்கு பொங்கி வழியும். படிப்படியாக அனைவரது கவனமும் மாவீரர் நாளில் இருந்து தலைவரின் பிறந்த நாளுக்கு மாற்றம் பெற்றது. மாவீரர் நாள் என்பது தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் என்றுகூட சிலர் நினைத்தார்கள் விரைவிலேயே பிரபாகரன் தனது பிறந்த நாளுடன் தொடர்புடைய அனைத்து உற்சவ நிகழ்ச்சிகளையும் தடுப்பதில் உறுதியாகச் செயற்பட்டார். அந்த வாரம் முழுவதும் மறைந்த வீரர்களுக்கானது, அதன் முக்கியமான தினம் நவம்பர் 27 மட்டுமே மாவீரர் நாள் என்று அவர் அறிவித்தார். இருந்தபோதும் பல்வேறு மத அனுட்டானங்கள் தொண்டர்களாலும் மற்றும் நலன் விரும்பிகளாலும் நவம்பர் 26ல், சிங்கள ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தமிழர்களின் எதிர்ப்பை உருவகப்படுத்திய மனிதனுக்கு தெய்வத்தின் ஆசிர்வாதத்தையும் மற்றும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி மேற்கொள்ளப்பட்டன.
மாவீரர் வாரம்
1990 – 1995ல் வடக்கின் அதிக பட்ச இடங்களையும் மற்றும் கிழக்கின் பல பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் பயன்படுத்தி வந்த எல்.ரீ.ரீ.ஈ மாவீரர் நாள் மற்றும் மாவீரர் வாரம் போன்றவற்றை அனுட்டிப்பதில் ஒரு பகுதியாக விரிவான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை நடத்தியது. அந்த வார நிகழ்வின் உச்சக்கட்டமாக 27ந் திகதி, ஒரு விசேட இடத்தில் பிரபாகரன் தானே நேரில் கலந்துகொள்ளும் ஒரு பெரிய விழா இடம்பெறும். காலப் போக்கில் மாவீரர் நாள் கொண்டாட்டங்கள் பரவலாக்கப்பட்டன. அநேக அனுட்டானங்கள் சம காலத்தில் நடத்தப்பட்டன ஆனால் அந்த இடத்துக்கான பெருமை எப்படியாயினும் இயல்பாகவே பிரபாகரன் பங்குபற்றும் இடத்துக்கே கிடைத்தது.
எல்.ரீ.ரீ.ஈ மாவீரர் துயிலும் இல்லம் என்று அழைக்கப்படும் அநேக மயானங்களை நிறுவியது. மறைந்த ஒவ்வொரு போராளிக்கும் தனியாக ஒவ்வொரு நடுகல் அமைக்கப்பட்டது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இறந்த போராளியின் உண்மையான உடல் அந்த இடத்தில் புதைக்கப் பட்டிருக்காது. பெரும்பாலான போராளிகளின் உடல்கள் எப்போதாவது கிடைக்கப் பெற்றால் அது உரிய மரியாதையுடன் போர் நடைபெற்ற அந்த பகுதியிலேயே மறைவு செய்யப்பட்டுவிடும். அதேவேளை இந்த நடுகற்கள் யாவும் ஒழங்கான வரிசையில் நடப்பட்டு இருப்பதுடன் அவர்களை கூட்டாக நினைவு கூரும்வகையில் அவர்களின் பெயர்கள் மற்றும் தொடர்புடைய திகதிகள் பொறிக்கப்பட்ட ஒரு அரங்கும் அங்கு அமைக்கப் பட்டிருந்தது.
மாவீரர் தின அனுசரிப்புகளில் இதயத்தை தொடும் விந்தையான காட்சி இந்த மயானம் மற்றும் இந்த அரங்குகளுக்கு பெருந்திரளாக பங்குபற்ற வருகைதரும் மாவீரர்களின் குடும்ப அங்கத்தினர்கள்தான்.பின்னாட்களில் மாவீரர் நாள் வைபவங்கள், கணிசமானளவு தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் செறிந்து maveerar-1வாழும் வெளிநாட்டு நகரங்களிலும் அனுசரிக்கப்படும் வழக்கம் உருவானது.
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றிய பிறகு அநேகமான இந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டன. பாதுகாப்பு படையினரின் இத்தகைய செயல்கள், எதிரிப்படை வீரர்களாக இருந்தாலும்கூட இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பலராலும் கண்டனத்துக்கு உள்ளாயின. மேலும் இறந்த அங்கத்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் இதனால் புண்படுத்தப் பட்டிருப்பதுடன் கோபமும் அடைந்ததாக உணரப்பட்டது.
இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால்,எல்.ரீ.ரீ.ஈ தவிர்ந்த வேறு தமிழ் போராளி இயக்கங்களைச் சேர்ந்த தமிழர்களின் மறைவுக்காக எல்.ரீ.ரீ.ஈ ஒருபோதும் துக்கம் அனுசரித்ததோ அல்லது அஞ்சலி செலுத்தியதோ கிடையாது என்பதை.
குறுகிய பிரிவினைவாத எல்.ரீ.ரீ.ஈயினர் ஏனைய இயக்க வீரர்களை வீரச்சாவடைந்த நாயகர்களாக மதிப்பதில்லை. எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களுக்கு மட்டும் அந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. மற்றைய இயக்கங்களைச் சேர்ந்த இறந்த போராளிகளின் குடும்பத்தினர்கள் அவர்களின் பிரியப்பட்டவர்களுக்காக பகிரங்கமாக துக்கம் அனுட்டிக்க அனுமதிக்கப் படுவதில்லை. அவர்கள் தங்கள் பிரியப்பட்டவர்களுக்காக மறைவாக துக்கம் அனுசரிக்க வேண்டிய நிலை இருந்தது.
இன மோதல் தொடர்ந்து கொண்டிருந்ததால் மரணங்களின் விகிதமும்கூட தொடர்ந்து கொண்டிருந்தது. அதன் கருத்து மேலும் மேலும் தமிழ் குடும்பங்கள் தங்கள் பிரியப்பட்டவர்களை இழந்து பாதிப்புக்கு உள்ளாகியதுடன் துக்கத்தில் மூழ்கியும் வந்தன. படிப்படியாக அந்த மாவீரர்நாள் நிகழ்வு பெரிய அளவு விரிவடைந்ததுடன் பெருந்திரளான பொதுமக்களும் அதில் பங்குபற்றத் தொடங்கினார்கள்.
இந்தப் பத்தி, வெளிநாடுகளில் நடைபெற்ற மாவீரர்நாள் உற்சவங்கள்,அதேபோல ஸ்ரீலங்காவின் தமிழ் பகுதிகளில் நடைபெற்ற விழாக்களின் செயற்பாடுகள் பற்றிய படங்களையும் கண்டுள்ளது. தங்கள் பிரியப்பட்டவர்களை நினைத்து உணர்ச்சிப் பெருக்குடன் துக்கத்தில் வாடும் குடும்ப அங்கத்தினர்களது காட்சி ஆழ்ந்த இரங்கலுக்கு உரியது என்பதில் சந்தேகமில்லை. இறந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களது குடும்பங்கள் மாவீரர் குடும்பங்கள் என அழைக்கப் பட்டன, மற்றும் எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டு ஒழுக்கில் வரும் உதவிகளுக்கு அந்த குடும்பங்களுக்கு அடிக்கடி முன்னுரிமைகள் வழங்கப்பட்டன.
ஞாபகார்த்தம் மற்றம் உயிர்த்தியாகம்
இந்த உயிர்த்தியாக கலாச்சாரத்தை வளர்ப்பதின் மூலம் எல்.ரீ.ரீ.ஈ பல விஷயங்களை அடைந்து வந்தது. தற்போது உயிருடன் உள்ள அங்கத்தவர்கள் தங்களை விட்டு பிரிந்த தோழர்களுடன் ஒரு அன்பு பிணைப்பை ஏற்படுத்த அது வழி வகுத்தது. அங்கத்தவர்களுக்கு அவனோ அல்லது அவளோ உயிர்நீத்தால் தங்களுக்கும் இதே பாணியில் மரியாதை செலுத்தப்படும் என்கிற உறுதி ஏற்படுவதால் அது அவர்களுக்கு ஆறுதலளிக்கிறது. வருங்கால சந்ததி தங்கள் உயிர்த்தியாகத்தையும் மற்றும் ஞாபகார்த்தத்தையும் நினைவில் கொண்டு மதிப்பளிக்கும் என்கிற நம்பிக்கையில் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் போராடி உயிர் நீத்தனர்.
மாவீரர் தின அனுஷ்டானங்கள், தங்கள் உயிர்களை தியாகம் செய்வதின் மூலம் தாங்கள் நித்திய நினைவை அடைவதுடன் அழியாத் தன்மையை உறுதி செய்வதாகவும் ஒருவித உணர்வை அவர்களுக்கு வழங்கியது. அதேபோல உயிhநீத்தவர்களின் சொந்த பந்தங்களும் கூட அவர்களின் பிரியப்பட்டவர்களின் இழப்பு வீணாகிப் போய்விடவில்லை என களிப்படைய முடிந்தது. மாவீரர்நாள் அனுசரிப்பின் உணர்வுபூர்வமான உள்ளடக்கம்கூட மற்றைய இளைஞர்களை எல்.ரீ.ரீ.ஈ யில் இணைய வைக்கும் உந்துதலைக் கொண்டிருந்தது. அந்த அதிசயமான காட்சிகூட பொது மக்களை தொடர்ந்து எல்.ரீ.ரீ.ஈயின் தியாகங்களை பாராட்டவும் மற்றும் அதற்கு ஆதரவு வழங்கவும் ஈர்;ப்பை ஏற்படுத்தியது.
எல்.ரீ.ரீ.ஈ தலைவரின் வருடாந்த மாவீரர் தின உரை பல வருடங்களாக தனிச் சிறப்பையும் மற்றும் பெரும் முக்கியத்தவத்தையும் பெற்று வந்தது. பிரபாகரன் ஒதுங்கி வாழும் போக்கினையும் மற்றும் நேரடி ஊடக வெளிப்பாட்டை தவிர்த்தும் வந்ததால், மாவீரர்நாள் தோற்றம் அவர் பொதுமக்களுடன் பழகும் ஒரு அபூர்வ நிகழ்வுகளில் ஒன்றாக மாறியது. அவரது வருடாந்த பேச்சுக்கூட எல்.ரீ.ரீ.ஈயின் கொள்கை அறிவிப்புக்களை ஒத்த ஒன்றாகவும் கருதப்பட்டது. எல்.ரீ.ரீ.ஈ தலைவர், உடனடி எதிர்காலத்துக்கு என்ன சிந்துத்துள்ளார் என்பதை உறுதி செய்வதற்காக ஆய்வாளர்கள் அதனை அலசி ஆராய்ந்தனர். பிந்தைய வருடங்களில் பிரபாகரன் ஆயத்தமின்றி பேச்சை நடத்தாமல், முன்கூட்டியே கவனமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு உரையை வாசிக்கலானார், வழக்கமாக எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் ஆலோசகரான பாலா அண்ணை என்கிற அன்ரன் ஸ்ரனிஸ்லாஸ் பாலசிங்கம் அவர்களால் எழுதப்பட்ட உரையாக அது இருந்தது.
எல்.ரீ.ரீ.ஈயின் சொந்த வானொலி நிலையமான “புலிகளின் குரல்” வானொலி நிலையத்தை அமைத்தது அந்தப் பேச்சை ஒலிப்பரப்புச் செய்வதற்கு வசதியாக அமைந்தது. தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியினால் பின்னர் அது ஒரே சமயத்தில் இணையத்தளத்திலும் வெளியானது. எல்.ரீ.ரீ.ஈ, “நிதர்சனம்” என்கிற அதன் சொந்த தொலைக்காட்சி நிலையத்தைக் கொண்டிருந்ததால் மாவீரர்நாள் நிகழ்வுகள் யாவும் வன்னியில் இருந்து உலகத்துக்கு பெருமளவில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது. மேற்குலகில் தோன்றியுள்ள அநேக தமிழ் ஒலிபரப்பு நிலையங்கள் அந்தப் பேச்சை ஐரோப்பா, அவுஸ்திரேலியா, மற்றும் வட அமெரிக்கா எங்கும் உள்ள தமிழ் வீடுகளில் ஒலிக்கும் ஒரு நிலையை உருவாக்கின. அதேபோல புலிகள் சார்பான தமிழர்கள் கையகப்படுத்திய பல தொலைக்காட்சி நிலையங்களால் அதற்கு பரவலான தொலைக்காட்சி ஒளிபரப்பை வழங்கவும் முடிந்தது.
மாவீரர்நாள் அனுட்டிப்புகள் பன்முகத் தன்மையானதாகவும் பல்வேறு விதமாகவும் இருந்தன. விழாக்களின் சிறப்பு அம்சமாக மெழுகுவர்த்திகள் மற்றும் விளக்குகள் ஏற்றும் நிகழ்ச்சி இருந்தது. மக்கள் இந்த ஒளிரும் தீபங்களை ஏந்தியவண்ணம் வரிசையாக நின்று ஒரு ஒளியேற்றப் பட்ட நடைபாதையை உருவாக்கும்போது, ஒலிம்பிக் போட்டிகளில் ஒலிம்பிக் சுடர் கொண்டு ஓடிவரும் பாணியில் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களால் தொடர் ஓட்டம் மூலம் ஒளிரும் சுடர் ஒன்று கொண்டுவரப்படும்.
தியாகச்சுடர்
ஒளிரும் தீபச்சுடர் பின்னர் பிரதம விருந்தினரிடம் கையளிக்கப்படும் அவர் அதைக்கொண்டு அங்கு தயார்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஞ}பகார்த்த சின்னமான ‘ஈகைச்சுடர்’ என அழைக்கப்படும் ஒரு பெரிய நித்திய சுடரை ஏற்றுவார். அதைத் தொடர்ந்து ஏராளமான விளக்குகளும் பந்தங்களும் ஏற்றப்பட்டு அந்த வைபவம் ஒரு ஒளி விழாவாக மாற்றப்படும். வெவ்வேறு இடங்களில் நடத்தப்படும் விழாக்களுக்கு அநேக மூத்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் பிரதம விருந்தினர்களாக செல்வார்கள். மூத்த புலிப் பிரபலங்களால் வெவ்வேறு நினைவுச் சின்னங்களில் சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன. எல்லா விழாக்களிலும் மாவீரர் குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொள்வார்கள்,வெவ்வெறு இடங்களில் இருந்து அவர்களை ஊர்வலமாக பல்வேறு நினைவிடங்களுக்கும் கூட்டிச் செல்வார்கள். வெவ்வேற எல்.ரீ.ரீ.ஈ அமைப்புகளின் இருந்து இசைக்குழுக்களினால் இசை ஒலிக்கப்படும். வெவ்வேறு நிகழ்வுகள் நடக்கும் இடங்கள் யாவும் பந்தல்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள் பரவலாக பறக்க விடப்பட்டிருக்கும்.
எனினும் முதன்மை விழா பிரபாகரன் தானே பங்குபற்றும் இடத்தில்தான் நடைபெறும். புதிதாக அமைக்கப்பட்ட ஒரு நினைவிடம் வழக்கமான விழா நிகழ்விடமாக இருக்கும். எல்.ரீ.ரீ.ஈ கொடி ஏற்றப்பட்டதின் பின்னர் எல்.ரீ.ரீ.ஈயின் பல்வேறு பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட படைப் பிரிவுகளால் ஒரு செய்முறைக் காட்சி நடத்தப்படும். அதன்பின் நடத்தப்படும் விழாக்கால வணக்கமான ஒரு அணிவகுப்பு மரியாதையை பிரபாகரன் ஏற்றுக்கொள்வார். அதன் பின்னர் சங்கர் தனது கடைசி மூச்சை விட்ட நேரமான பி.ப 6.05 மணிக்கு பிரபாகரன் தனது மாவீரர் தின உரையை ஆரம்பிப்பார். அந்தப் பேச்சு வழக்கமாக 30 முதல் 40 நிமிடங்கள் வரை நீடிக்கும்.
அதன்பின் தொடர் ஓட்ட முறையில் கொண்டுவரப்பட்ட சுடரை பெற்றுக்கொண்டு முதலாவது தியாகச் சுடரை ஏற்றுவார். அங்கு சமூகமளித்திருக்கும் பெருந்திரளான சனக்கூட்டத்துடன் சோந்து இரண்டு நிமிடம் மௌனம் அனுசரித்த பின்னர் எல்.ரீ.ரீ.ஈ தலைவர், முதலாவது மாவீரரான சங்கர் என்கிற சத்தியநாதனின் படத்துக்கு மலர்மாலை அணிவிப்பார். அதன்பின் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் ஏனைய புலி அங்கத்தவர்களுடன் இணைந்து சிறிய விளக்குகளை ஏற்றவும் மற்றும் உயிர் தியாகம் செய்தவர்களின் படங்களுக்கு முன்னால் மலர்களும் வைப்பதற்கு செல்வார்.
இதுதான் மாவீரர்நாள்pன் முக்கியத்துவத்துக்கு பின்னாலுள்ள வரலாறு. இந்த நாளுடன் இணைந்துள்ள முக்கியத்துடன் மிகவும் சிறப்பானது என்னவென்றால், இந்த நிகழ்வுக்கான பொறுப்புக்களையும் மற்றும் அதேபோல இறந்துபோன எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் குடும்பங்களின் விவகாரம் தொடர்பானவற்றை கையாள்வதற்கும் ஒரு சிறப்பு அலுவலகத்தை கிளிநொச்சியில் ஆரம்பித்ததுதான் ஒரு ஓய்வுபெற்ற கல்விமானான பொன்.தியாகம் இந்த அலுவலகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அவர் இப்போது ஸ்ரீலங்காவுக்கு வெளியே வாழ்கிறார்.
தற்பொழுது நிகழும் மாவீரர்நாள் விந்தைகளை எல்லாம் இந்தப் பின்னணியில்தான் பார்க்க வேண்டும். புலம்பெயர்ந்தவர்களிடையே உள்ள எல்.ரீ.ரீ.ஈ மற்றும் எல்.ரீ.ரீ.ஈ சார்பானவர்கள் நவம்பர் 27ல் இந்த நிகழ்வை நினைவுகூருவது அவர்களின் வரலாற்றுக் கடமை என நினைக்கிறார்கள். யுத்தம் முடிவடைந்து ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ இல்லாமல் போய்விட்ட போதும் உலகளாவிய தமிழ் புலம் பெயர்ந்தவர்களில் உள்ள புலி மற்றும் புலி சார்பான பிரிவினர்கள் இந்த நிகழ்வை தொடர்ந்து உலகளாவிய ரீதியில் நினைவுகூர்ந்து வருகிறார்கள். தீவில் பிரபாகரனின் மறைவும் மற்றும் புலிகளின் தோல்வியும் ஏற்பட்டுள்ள நிலையில் வரும் வருடங்களில் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ இந்த மாவீரர்நாள் நிகழ்வை இதே வீரியத்துடனும் ஆர்வத்துடனும் தொடர முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
வெளிநாட்டு புலிகள்
எனினும் தற்சமயம் மாவீரர்நாள் கருத்து புலம் பெயர்ந்தவர்களிடையே வலிமையானதாகவும்; மற்றும் பெறுமதியானதாகவும் உள்ளது. வெளிநாட்டு புலிகள் மற்றும் அவர்களது சக பயணிகள், ஆழமாக பிளவு பட்டிருந்த போதிலும் இந்த நிகழ்வை கைப்பற்றியிருப்பது அவர்களுக்குள்ள மக்களின் ஆதரவை பரீட்சிக்கவும் மற்றும் நிரூபிக்கவும்தான்;, அதேபோல மக்களை உணர்வுபூர்வமாக தூண்டிவிட்டு அதன்மூலம் அதிக நிதி தேடும் எண்ணத்துடனும் இதை நடத்தி வருகிறார்கள். கடந்த காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ யிற்கு மாவீரர்நாள் முக்கியத்துவம், தொடர்பு மற்றும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது, ஆனால் தற்சமயம் ஸ்ரீலங்காவில் அதன் சாத்தியமான புத்துயிர்ப்புக்கான நடவடிக்கைகள் பற்றிய எந்தவொரு சந்தேகமும் பாதுகாப்பு வட்டாரங்களுக்கு எச்சரிக்கை மணியை ஒலிக்க வைக்கும்.
ஒருவேளை பாதுகாப்பு தொடர்பான அச்சங்களை ஓரளவு தவிர்க்கும் வகையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரும் மற்றும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், வடக்கிலுள்ள தமிழர்கள் மாவீரர்நாளினை எல்.ரீ.ரீ.ஈயின் பெயரைக் கூறாமல் அனுசரிக்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளார். எனினும் அது செய்வதற்கு கடினமான ஒன்று, ஏனென்றால் மாவீரர்நாள் ஒரு புலிகளின் நிகழ்வு மற்றும் அது பிரிக்க முடியாதபடி எல்.ரீ.ரீ.ஈ உடன் பின்னிப் பிணைந்துள்ளது. விடுதலைப் புலிகளைக் குறிப்பிடாமல் மாவீரர்நாள் அனுசரிக்க முயற்சிப்பது, இராமாயணக் கதையை ராமரின் பெயரைக் கூறாமல் சொல்வதை ஒத்ததாக இருக்கும்.
என்றாலும் நவம்பர் 27ந் திகதி வரும் மாவீரர் நாளினை தமிழர்களின் ஒரு பொதுவான துக்க தினமாக சித்தரிப்பதற்கு திமிர்த்தனமான முயற்சிகளை சொந்த நலன்பேணும் சிலர் மேற்கொள்கிறார்கள், மாவீரர் நாள் என்று அழைக்கப்படுவது ஒருபோதும் தமிழர்கள் துக்கம் அனுஷ்டிப்பதற்கான ஒரு தேசிய தினமாக இருக்க முடியாது என்பதை வலியுறுத்தப்பட வேண்டும். மாவீரர்நாள் புலிகள் சார்ந்த ஒரு நிகழ்வாக தீவிரமாக புலிகளுக்காக புலிகளினால் கொண்டாடப்பட்ட ஒன்று. இல்லையென்றால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரபலங்கள் உட்பட ஒரு சிலர் அப்படிச் சித்தரித்திருப்பது, சுத்த அரசியல் பாசாங்குத்தனம் ஆகம்.
மாவீரர் கருத்தை ஊக்குவிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பகுதியினர் ஆற்றிவரும் பங்கு தற்போதைய நிலையில் கவனத்தில் கொள்ள வேண்டியது. 2013ல் வட மாகாண சபை தேர்தல்கள் பிரச்சாரத்தின்போது, ரி.என்.ஏ, மாவீராகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இரண்டு நிமிடம் மௌனம் அனுசரித்தது. ஒரு சில ரி.என்.ஏ வேட்பாளர்கள் தாங்கள் கலந்துகொண்ட கூட்டங்களில் எப்போதும் எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களைப் புகழ்ந்ததுடன் அவர்களை மாவீரர்கள் என விளக்கியுள்ளார்கள். இவர்கள் மத்தியில் முதன்மையாய் விளங்கியவர் ரி.என்.ஏயின் முதலமைச்சர் வேட்பாளர் ஆவார். ரி.என்.ஏ யின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் கரைச்சி மற்றும் சாவகச்சேரி பிரதேச சபைகள் எல்.ரீ.ரீ.ஈ மயானங்களை புனரமைக்க வேண்டும் என்று தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளன. வடக்கு மாகாணசபை பதவியேற்றபோது, ஒரு மர நடுகை பிரச்சாரத்தை நவம்பர் 27ல் நடத்தியது. அதனைத் தொடர்ந்து வந்த வருடங்களில் முள்ளிவாய்க்காலில் கடந்த காலங்களில் பிரபாகரன் செய்ததைப்போல விக்னேஸ்வரன் சுடர்களை ஏற்றி வைத்து விழாக்கள் நடத்தியதை கண்டோம். சில ரி.என்.ஏ மாகாணசபை உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் விளக்குகளை ஏற்றிவிட்டு புலம் பெயர்ந்தவர்களை ஏமாற்றுவதற்காக அதை பகிரங்க நிகழ்வாக இணையத்தளம் மூலம் பிரச்சாரம் செய்துள்ளார்கள். இந்த வருட மாவீரர்நாளில் ரி.என்.ஏ யின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவான், வட மாகாணசபை அமைச்சர் ஐங்கரநேசன், வட மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு மாவீரர்நாள் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.
துக்கம் அனுஷ்டிக்கும் அரசியல்
மாவீரர் நாள் தொடர்பான அரசாங்கத்தின் அச்சுறுத்தும் கருத்துக்கு, மிதவாத அரசியல் அமைப்பு என்கிற பாராட்டை பெற்ற ரி.என்.ஏ யின் நடத்தை வலு சேர்க்கிறது. இதில் கேவலமானது என்னவென்றால் துக்கம் அனுட்டிக்கும் அரசியலை ரி.என்.ஏ பின்பற்றியது, அரசியல் பாசாங்குத்தன அளவில் இருப்பதுதான். இப்போது மாவீரர்கள் எனப் போற்றப்படும் எல்.ரீ.ரீ.ஈ, தற்போது ரி.என்.ஏ அமைப்பில்; பங்காளிகளாக இருக்கும் அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தமிழர்களை கடந்த காலத்தில் கொன்றொழித்தது. எல்.ரீ.ரீ.ஈ யினால் கொல்லப்பட்ட அதன் தோழர்களுக்காகவும் மற்றும் சகபாடிகளுக்காகவும் பகிரங்கமாக துக்கம் அனுட்டிக்காத ஒரு ஒற்றை அரசியல் அமைப்பு ரி.என்.ஏ மட்டும்தான். இருப்பினும் சில ரி.என்.ஏ தலைவர்கள் இறந்த புலிகளை மாவீரர்களாக போற்றிக் கொண்டாடி கொஞ்சமும் மனச்சாட்சி அற்றவர்களாக இருக்கிறார்கள்.
இதில் இன்னமும் மோசமானது என்னவென்றால், தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகங்களில் ஒரு பிரிவினர் கபடமான முறையில், நவம்பர் 27 ஒட்டு மொத்த தமிழர்களின் சோக தினம் என்றும் மாவீரர்நாள் தமிழர்களின் தேசிய துக்கநாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்கிற கட்டுக்கதையை ஊக்குவித்து வருவதுதான்.
இதன் கருத்து தமிழர்கள் தங்கள் பிரியப்பட்டவர்களின் இழப்புக்காக துக்கம் அனுசரிக்க கூடாது என்பதல்ல. அவர்கள் அதைச் செய்துதான் வருகிறார்கள்.
தமிழர்கள் தங்கள் அன்பர்களையும் அயலவர்களையும் 1956,1958,1977,1981 மற்றும் 1983 களில் நடந்த இன வன்முறைகளில் இழந்துள்ளார்கள். நீண்ட காலமாக நடைபெற்ற யுத்தத்தில் பல வடிவங்களில் எண்ணமுடியாத துயரங்களை அனுபவித்துள்ளார்கள். வன்முறைகளும் மற்றும் யுத்தமும் நடைபெற்ற காலங்களில் தனது பிரியப்பட்ட ஒருவரைக்கூட இழந்து பாதிப்புக்கு உள்ளாகாமல் வாழும் ஒரு ஒற்றைத் தமிழன்கூட இருக்க முடியாது. எனினும் இதில் ஏற்றுக் கொள்ள முடியாதது என்னவென்றால், மாவீரர்நாள் உலகளாவிய தமிழர்களின் ஒரு துக்கதினம் என்று கபடமான முறையில் சித்தரிப்பதுதான்.
ஆகவே நவம்பர் 27, அரசியலில் துக்கம் அனுசரிப்பதற்கு ஒரு முக்கியமான நாளாக இருந்து வருகிறது, அதில் புலிகள் மற்றும் புலிகள் சார்பான சக்திகள் ஈடுபட்டு வருகிறார்கள். எனினும் எல்.ரீ.ரீ.ஈயின் மாவீரர்நாள் ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு ஒரு தேசிய துக்க தினமாக இருக்கவேண்டும் என்று கருதுவது ஒரு மிகப்பெரிய முட்டாள்தனம்.
டி.பி.எஸ்.ஜெயராஜ்
மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக