யாழ். கோப்பாயில் கொட்டும் மழையைப் பயன்படுத்தி இன்று அதிகாலை கத்தி முனையில் இளம் தம்பதிகளை அச்சுறுத்தி 25 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.
ஏழு பவுண் தாலிக் கொடி உட்பட சங்கிலி, காப்பு, மோதிரம் என்பனவும் கொள்ளையிடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
இன்று அதிகாலை யாழ்.கோப்பாய் மத்தி அண்ணமார் கோவிலடியிலுள்ள வீடொன்றின் முன்னாள் வெளிச்சம் வருவதைக் கண்ட வீட்டிலிருந்தவர்கள் கள்ளன்…. எனக் கத்தியவாறு வீட்டின் முன்னாலுள்ள மின்குமிழை எரிய விட்டுள்ளார்கள்.
வீட்டின் பின்பக்கத்திலிருந்து முன்னரே எடுத்து வைத்திருந்த ஆயுத்தைக் கொண்டு முன்கதவையுடைத்து உள்ளே நுழைந்த கள்ளர்கள் வாள் மற்றும் கொட்டன்களுடன் வீட்டிலிருந்தவர்களைக் கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர்.
வீட்டிலிருந்தவர்களை சமையலறைக்குள் இழுத்துச் சென்ற கொள்ளையர்கள் கணவரின் தாயைத் தாக்கியதுடன், கணவரின் கழுத்தில் வாளை வைத்து அச்சுறுத்தியுள்ளனர்.
இதன் போது வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நகைகள் அனைத்தையும் கொள்ளையிட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஐந்து பேர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருட்டுக் கும்பலில் ஒருவருக்குச் சுமார் 65 வயதிருக்கும் எனவும், ஏனைய நான்கு பேரும் இளைஞர்கள் எனவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்களில் மூவர் முகமூடி அணிந்திருந்ததாகவும், இருவர் முகமூடி அணியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக