செவ்வாய், 13 டிசம்பர், 2016

சவூதி அரேபியாவில் நடந்த கொடுமை!! ‘கணவன் இறந்த செய்தியைக் கூட அறிவிக்கவில்லை’ : வெறுங்கையுடன் நாடு திரும்பிய பெண் உருக்கம்

சவூதி அரேபியாவில் இருவருடங்களாக தொழில் புரிந்த எனக்கு ஊதியம் கிடைக்கவில்லை. இதேவேளை எனது கணவர் இறந்த செய்தியை கூட வீட்டு உரிமையாளர் எனக்கு அறிவிக்கவில்லை என மஸ்கெலியா கிலன்டில் தோட்டத்தைச் சேர்ந்த கணேஷன் புஸ்பலீலா உருக்கமாக தெரிவித்தார்.

தனக்கு நிகழ்ந்த கொடுமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,


 நமது நாட்டில் சகல வளங்களும் இருந்தாலும், வாழ்வாதாரத்தை கொண்டுச் செல்ல வருமானம் இல்லை. இதனால் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி வீட்டு பணிப்பெண்களாக வேலைத்தேடி செல்கின்றோம்.

2014.08.20ஆம் திகதி தனது வீட்டிலிருந்து சவூதி ரியாத் மாநிலத்திற்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற இவர் அவ் வீட்டின் முதலாளி ஏமாற்றியதன் காரணமாக 2 வருடங்களின் பின் உழைத்தமைக்கு ஊதியம் கிடையாது வெறுங்கையுடன் கடந்த 8.12.2016 அன்று நாட்டுக்கு திரும்பியுள்ளார்.

இவர் முதல்முறையாக வெளிநாட்டு வேலைக்கென மஸ்கெலியா கிலன்டில் தோட்டத்தில் தரகர் ஊடாக 2 இலட்சம் ரூபா தருவதாக கூறி வெறும் 35,000 ரூபாய் பணத்தை மாத்திரம் வழங்கிவிட்டு இவரை கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் ஊடாக பணிப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டதாக அப்பெண் தெரிவித்தார்.

குறித்த பெண் வெளிநாட்டுக்கு சென்றதன் பின்னர் ஒரு நாள் மாத்திரமே தனது வீட்டாருடன் தொலைபேசியில் கதைத்துள்ளார்.

அதன்பின் 2 வருடங்களும் 3 மாதங்களும் கடந்த பின்பும் வீட்டாருடன் தொலைபேசியில் கதைக்க தொழில் செய்த வீட்டில் இடம் கொடுக்கவில்லை.

தனக்கு வழங்க வேண்டிய மிகுதி தொகையை கேட்டுச் சென்ற இப்பெண்ணின் கணவரை கொழும்பில் தாக்கி இரண்டு நாட்கள் பொலிஸ் நிலையத்திலும் வைத்துள்ளனர்.

இதற்கான காரணம் இவரை தாக்கும் பொழுது முகவர் நிலையத்தின் சேவையாளர் ஒருவரை தான் திரும்பி தாக்கியதால் ஏற்பட்ட நட்டத்திற்கு எனது உழைப்பின் பணத்தை பெற்றுக்கொண்டதாகவும், இவரை ஏமாற்றியுள்ளனர்.

இதனால் வருத்தமடைந்த பெண்ணின் கணவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன் நெஞ்சு வலியினால் உயிரிழந்துள்ளார்.

இவ்விடயத்தை கூட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்தின் மூலம் அந்நாட்டுக்கு அறிவித்தும் வேலை செய்த வீட்டு உரிமையாளர் தனக்கு தெரிவிக்கவில்லை என கவலையுடன் தெரிவித்தார்.

இலங்கையில் கடந்த 08.12.2016 அன்று விமான நிலையத்தில் இறங்கி வெளியே வந்த போது தான் உறவினர்களால் எனது கணவர் இறந்த செய்தியை கேள்வியுற்றேன் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை மூன்று பெண் பிள்ளைகளை பெற்ற தான் அவர்களை விட்டு 2 வருடங்கள் பிரிந்து இருந்த நிலையில் கணவரும் எங்களை விட்டு பிரிந்துள்ளார்.

இந்த நிலையில் பெண்ணின் தாயின் அரைவணைப்பில் பிள்ளைகள் வளர்ந்ததாகவும் அவர்களின் உணவு மற்றும் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் தாயார் வீட்டாரும் மாமன் வீட்டாரும் ஏனைய சகபாடிகளும் உதவி செய்ததாக இவர் தெரிவித்தார்.

பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை சுபீட்சமடைய செய்யவும் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவும் வெளிநாடு சென்ற எனக்கு இரண்டு வருடங்களும் மூன்று மாதங்களுமாக கொடுக்க வேண்டிய அந்நாட்டு நாணயத்தின் படி 24,300 ரூபாய் வழங்கப்பட வேண்டும்.

அதாவது ஒரு மாதத்திற்கு அந்நாட்டு நாணயத்தின் படி 900 ரியால் வழங்கப்பட வேண்டும்.

இத்தொகையை அந்நாட்டு உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் செலுத்துவதாக வீட்டுக்காரர் தெரிவித்துள்ளார். ஆனால் இன்னும் எனது பணம் வந்து சேரவில்லை என புஸ்பலீலா கவலை தெரிவித்தார்.

இலங்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் ஒன்றரை வருட காலமாக எனது தகவல் தொடர்பாக கோரிக்கைகளும் கடிதங்களும் வழங்கப்பட்ட போதிலும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் தான் உழைத்த பணத்தை உரிய அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இது தொடர்பிலான அமைச்சு பெற்றுக்கொடுக்கும் பட்சத்தில் கணவரை இழந்த நான் மூன்று பிள்ளைகளின் கல்வியை முன்னெடுத்து செல்லவும் குடும்ப வறுமை சுமையில் இருந்து மேலோங்கவும் வாய்ப்பாக அமையும் என தெரிவித்தார்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல