செவ்வாய், 13 டிசம்பர், 2016

காலிமுகத்திடலில் மீண்டும் நத்தார் மரம்

உல­கி­லேயே உய­ர­மான நத்தார் மரத்தை அமைக்கும் பணிகள் மீண்டும் காலி முகத்­தி­டலில் ஆரம்பிக்கப் படவுள்ளதாக துறை­முகங் கள் மற்றும் கப்­பல்­துறை அமைச்சு அறி­வித்துள்ளது.



எதிர்­வரும் 20 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை நத்தார் மரம் மக்கள் பார்­வைக்­காக திறந்து வைக்­கப்­ப­டு­மென்றும் அமைச்சு கூறியுள்ளது.

இது தொடர்­பாக துறை­மு­கங்கள் மற்றும் கப்­பற்­துறை அமைச்சின் உய­ர­தி­கா­ரி­யொ­ருவர் மேலும் தெரி­விக்­கையில்;

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவும் கர்­தினால் பேராயர் வண. மல்கம் ரஞ்­சித் ஆண்டகையை கடந்த சனிக்­கி­ழமை சந்­தித்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­னார்கள்.

இப் பேச்­சுக்­களின் போது கொழும்பு காலி முகத்­தி­டலில் துறை­மு­கங்கள் மற்றும் கப்­பல் துறை அமைச்சும் சுற்­று­லாத்­துறை அமைச்சும் இணைந்து அமைப்பதற்கு தீர்­மா­னித்த உல­கி­லேயே உய­ர­மான நத்தார் மரம் கர்­தி­னாலின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க நிறுத்­தப்­பட்­டமை தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

இதன்­போது நத்தார் மரம் அமைப்­ப­தற்­கான தனது எதிர்ப்பை கர்­தினால் மீளப் பெற்றுக் கொண்டு மரம் அமைப்­ப­தற்கு தனது ஆத­ரவை வெளி­யிட்­டுள்ளார்.

இதனை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உட­ன­டி­யாக அமைச்சர் அர்­ஜுன ரண­துங்­க­விற்கு அறி­வித்­துள்ளார்.

இதற்­க­மைய காலி முகத்­தி­டலில் உய­ர­மான நத்தார் மரம் அமைக்கும் பணிகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாவும் எதிர்­வரும் 20 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று பணிகள் அனைத்தும் நிறை­வு­பெற்று மக்கள் பார்­வைக்­காக நத்தார் மரம் வைபவ ரீதி­யாக திறந்து வைக்­கப்­ப­ட­வுள்ள அதே­வேளை இந்த நத்தார் மரம் பரோ­ப­கா­ரி­களின் உத­வி­க­ளு­ட­னேயே அமைக்­கப்­ப­டு­கின்றது. இதற்­காக பணம் செல­வி­டப்­ப­ட­வில்லை என்றார்.

இதே­வேளை, கின்னஸ் சாதனை புத்­த­கத்தில் பதி­வ­தற்­காக காலி முகத்­தி­டலில் அமைக்­கப்­படும் உல­கி­லேயே உய­ர­மான நத்தார் மரம் அமைப்­பதை நிறுத்­து­மாறும், அதற்கு செலவாகும் பணத்தை இல்லாதவர்களுக்கு வழங்குமாறும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கடந்த 6 ஆம் திகதி கேட்டுக் கொண்டதற்கு இணங்க இப்பணிகள் நிறுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல