திங்கள், 16 ஜனவரி, 2017

விண்டோஸ் 10 சுருக்கு விசைகள்

கம்ப்யூட்டர் பயன்பாட்டில், மவுஸ் சாதனம் நாம் எளிதாக சில செயல்பாடுகளை மேற்கொள்ள உதவியாய் உள்ளது. டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுக்க, காப்பி செய்திட, பேஸ்ட் செய்திட என இதன் உதவிகளைப் பட்டியலிடலாம். இருப்பினும், பலர் இதே செயல்பாடுகளை, கீ போர்டில் உள்ள கீகளை இயக்குவதன் மூலம் மேற்கொள்ளவே விரும்புவார்கள். இவற்றை 'ஷார்ட் கட் கீகள்' என அழைக்கிறோம். கீ போர்டின் மூலம் செயல்பாடுகளை மேற்கொள்வது, விரைவாகப் பணி முடிக்கப் பலருக்கு உதவுகிறது. மவுஸ் பயன்படுத்த விரும்பினால், நம் கரங்களை கீ போர்டில் இருந்து எடுத்து பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே, பலர், கீ போர்ட் விசைகளைப் பயன்படுத்தியே செயல்களை மேற்கொள்கின்றனர். இவர்களுக்கு ஷார்ட் கட் கீகள் பெரிதும் உதவுகின்றன.



விண்டோஸ் 10 புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட இயக்க முறைமை. இதில் வழக்கமான விண்டோஸ் இயக்க முறைகளில் இல்லாத சில ஷார்ட் கட் கீ செயல்பாடுகள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம்.

விண்டோஸ் கீ + ஐ (Windows + I) : இந்த இரு கீகளை ஒரு சேர அழுத்திப் பயன்படுத்தினால், Settings விண்டோ நமக்குக் கிடைக்கிறது. மைக்ரோசாப்ட் இப்போது தன் விண்டோஸ் இயக்கத்தில், இதுவரை கண்ட்ரோல் பேனலில் தந்து வந்த அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து Settings விண்டோவில் தருகிறது. இதனால், Settings விண்டோ திறக்க உதவும் இந்த ஷார்ட் கட் கீ தொகுப்பு நமக்கு அதிகம் பயன் தருவதாய் உள்ளது.

விண்டோஸ் கீ + ஏ (Windows + A) : விண்டோஸ் 10 இயக்கத்தின் மிகச் சிறந்த ஒரு மையம் அதன் universal notification center அல்லது the action center. அனைத்து நோட்டிபிகேஷன்களையும் இங்கு காணலாம். இதற்கு, Windows + A ஆகிய கீகளின் இணைந்த செயல்பாடு உதவுகிறது. இதற்காக, டாஸ்க் பாரில் இதற்கென உள்ள சிறிய ஐகானத் தேடி கிளிக் செய்திட வேண்டியதில்லை.

விண்டோஸ் கீ + எஸ் (Windows + S) : விண்டோஸ் 10 இயக்கத்தில், புதியதாகச் சேர்க்கப்பட்ட ஒரு பயனுள்ள சாதனம் 'கார்டனா'. இதனை ஒரு 'டிஜிட்டல் அசிஸ்டன்ட்' என மைக்ரோசாப்ட் அழைக்கிறது.

இந்த செயலியை விரைவாகப் பெறுவதற்கு Windows + S ஆகிய கீகளைப் பயன்படுத்தலாம். இந்த கீகளைப் பயன்படுத்தியவுடன், கார்டனா, உங்கள் உள்ளீட்டினைப் பெறும் வகையில் தயாராய் திறக்கப்பட்டு கிடைக்கும். நீங்கள் தேட விரும்புவதை, இதன் தேடல் கட்டத்தில் உள்ளீடு செய்தவுடன், அதற்கான பதில்கள் மேலாகப் பட்டியல் இடப்படும். அதில், முதன்மையாக உள்ளதில் கிளிக் செய்தால், நாம் விரும்பியதைப் பெறலாம். மேலும், நமக்குத் தேவையானதை இணையத்திலும் தேடி எடுத்துத் தரும்.

விண்டோஸ் கீ + சி (Windows + C) : இந்த இரண்டு கீகளும் 'கார்டனா' செயலியையே திறக்கின்றன. ஆனால், முந்தையது, டெக்ஸ்ட் உள்ளீடுக்கான விண்டோவுடன் திறக்கப்படும். இந்த கீகள், நாம் சொல்வதைக் கேட்டு செயல்படும் வகையில் கார்டனாவைத் தயாராகக் காட்டும். ஆனால், அதற்கு முன்னர், நீங்கள் உங்கள் குரலைப் பதிவு செய்து, பழக்கம் செய்து, கார்டனாவினைத் தயார்ப்படுத்தி இருக்க வேண்டும்.

விண்டோஸ் கீ + கண்ட்ரோல் + டி (Windows + Ctrl+D) : விண்டோஸ் 10 இயக்க முறைமை நமக்குத் தந்துள்ள இன்னொரு வசதி, விர்ச்சுவல் டெஸ்க்டாப் தளங்களைப் புதியதாகத் திறந்து செயல்படுவதுதான். Windows + Ctrl+D ஆகிய மூன்று கீகளை அழுத்தினால், புதியதாக ஒரு டெஸ்க்டாப் நம் பயன்பாட்டில் இருக்கும். முதல் டெஸ்க்டாப்பில் திறந்து பயன்படுத்திய பைல்கள் இதில் இருக்காது. ஆனால், அதே பைலை மீண்டும் திறக்க முயற்சித்தால், முதலில் அந்த பைல் திறக்கப்பட்ட விண்டோ கிடைக்கும். இது போல புதிய விர்ச்சுவல் விண்டோவினைத் திறந்து செயல்படலாம்.

விண்டோஸ் கீ + கண்ட்ரோல் +இடது / வலது அம்புக் குறிகள் (Win + Ctrl + Left / Right Arrow Keys) : மேலே சொல்லப்பட்ட வகையில், ஒன்றுக்கும் மேற்பட்ட விர்ச்சுவல் டெஸ்க்டாப் தளங்களைத் திறந்து, அதில் வேறு பைல்களைக் கொண்டு வந்து செயல்படுத்தினால், மற்ற டெஸ்க்டாப் தளங்களுக்குச் செல்ல Win + Ctrl + Left / Right Arrow Keys களைப் பயன்படுத்த வேண்டும்.

விண்டோஸ் கீ + கண்ட்ரோல் + எப்4 (Win + Ctrl +F4) : திறக்கப்பட்ட விர்ச்சுவல் டெஸ்க்டாப் தளங்களை, விரைவாக மூடிட Win + Ctrl +F4 கீகளைப் பயன்படுத்த வேண்டும். அதில் திறந்து செயல்படுத்திய பைல்கள் என்னவாகும் என்ற கவலை வேண்டாம். அவை அனைத்தும் முதன்மை டெஸ்க்டாப் தளத்திற்கு மாற்றப்படும்.
விண்டோஸ் கீ +டேப் கீ (Win +TAB) : Win +TAB கீகளை அழுத்துகையில், நமக்கு Task View கிடைக்கிறது. இதில் நாம் பணியாற்றும் அனைத்தும் காட்டப்படும். நாம் திறந்து வைத்துச் செயல்படுத்தும் கோப்புகள் மற்றும் திறந்திருக்கும் பிற விர்ச்சுவல் டெஸ்க்டாப் தளங்களும் சுருக்கமாகக் காட்டப்படும்.

கண்ட்ரோல் + ஆல்ட் + டேப் (Ctrl + Alt + Tab): உங்கள் டெஸ்க்டாப் தளத்தில் நீங்கள் திறந்து வைத்துப் பயன்படுத்தும் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களையும், அவற்றின் பைல்களுடன் காட்டும். இது “Alt + Tab,” கீகளை அழுத்தி காட்டப்படும் வகை என்றாலும், உங்களுக்குத் தேவையான புரோகிராமினைத் தேர்ந்தெடுக்க, நீங்கள் மவுஸ் அல்லது ஆரோ கீகளைப் பயன்படுத்த வேண்டும். இதில் அப்படி இல்லை. நேராகத் தேவைப்படும் புரோகிராமினை இயக்கலாம்.

விண்டோஸ் கீ + அம்புக் குறி கீகள் (Win+Arrow keys) : நாம் பல புரோகிராம்களை இயக்கும்போது, நாம் செயல்படுத்தும் விண்டோ முதலாவதாக நமக்குக் கிடைக்கும். மற்றவை பின்னால் இருக்கும். செயல்படும் விண்டோவினையும், இன்னொன்றையும், மானிட்டர் திரையில் பாதி பாதியாகக் காட்டும் வகையில் அமைத்துச் செயல்பட வேண்டும் என்றால், ஒரு புரோகிராம் விண்டோவின் ஓரம் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று இழுக்க வேண்டும். அல்லது வலது மேல் மூலையில் உள்ள 'மினிமைஸ் / மேக்சிமைஸ்' கீயை அழுத்த வேண்டும். அதற்குப் பதிலாக, நாம் செயல்படும் விண்டோவினை மானிட்டர் திரையின் எந்த ஓரத்திற்கும் இழுத்துச் சென்று அமைக்கலாம். இதற்கு விண்டோஸ் கீயுடன், நாம் விரும்பும் திசைக்கான அம்புக் குறி கீயினை ஒரு சேர அழுத்த வேண்டும். விண்டோ அந்தப் பக்கமாகச் சிறிய அளவில் அமர்ந்து கொள்ளும். பின்னால் இயங்கும் அப்ளிகேஷன் விண்டோ இன்னொரு பாதியில் கிடைக்கும்.

விண்டோஸ் கீ +ஜி (Windows + G): நம்மில் பலருக்குத் தெரியாத, அல்லது மிகக் குறைவாகப் பயன்படுத்தப்படும் ஷார்ட் கட் கீ தொகுப்பு. Game DVR என்ற டூல் பலரும் அறியாத ஒன்று. ஆனால், விடியோ திரைக் காட்சியைப் படம் பிடித்து வைக்க, இதனைச் சிறப்பாகப் பயன்படுத்தலாம். இந்த கீகளை அழுத்தியவுடன் Game DVR டூலினைத் திறக்கவா? என்ற கேள்வியுடன் ஒரு பாப் அப் கட்டம் கிடைக்கும். அதில் கிளிக் செய்தால், இந்த டூல் கிடைக்கும். இது கேம்ஸ் விளையாடுபவர்களை இலக்காகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும், மற்ற புரோகிராம்களைப் பதிவு செய்திடவும் பயன்படுத்தலாம். முழுத் திரையையும் பதிவு செய்திட முடியாது. ஒரே ஒரு புரோகிராம் விண்டோவினை மட்டும் பதியலாம்.

விண்டோஸ் கீ +ஆல்ட்+ஜி (Windows +Alt+ G): நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராம் அல்லது கேம் விண்டோவினை, உடனடியாக பதிவு செய்திட வேண்டும் எனில், இந்த ஷார்ட் கட் கீகளைப் (Windows +Alt+ G) பயன் படுத்தலாம். Game DVR செயலி இயக்கப்பட்டு, அப்போது செயல்பாட்டில் இருக்கும் விண்டோவில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பதியப்படும்.

விண்டோஸ் கீ +ஆல்ட்+ஆர் (Windows +Alt+ R): மேலே சொல்லப்பட்ட Game DVR செயல்பாட்டினை உடனடியாக நிறுத்த இந்த ஷார்ட்கட் கீகளைப் (Windows +Alt+ R) பயன்படுத்த வேண்டும்.

விண்டோஸ் இயக்கத்தில், அதற்கு முந்தைய DOS ஆப்பரேட்டிங் சிஸ்டம் கட்டளைகளைச் செயல்படுத்த Command Prompt விண்டோ தரப்பட்டது. Cmd எனக் கட்டளை கொடுத்தால், இந்த விண்டோ கிடைக்கும். பின், நாம் அதில் கட்டளைகளைக் கொடுத்து செயல்படலாம். விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், இந்த விண்டோ செயல்பாட்டில் பல புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், தினந்தோறும் செயல்படுத்தக் கூடிய கட்டளைகள் சிலவற்றை இங்கு காண்போம்.

கண்ட்ரோல் + ஏ (Ctrl+A): இந்த கட்டளை கொடுத்தால் என்ன நடக்கும் என்று நம் அனைவருக்கும் தெரியும். டெக்ஸ்ட் டாகுமெண்ட் மற்றும் பிற விண்டோக்களில் உள்ள அனைத்தையும் தேர்ந்தெடுக்க இந்த ஷார்ட் கட் கீயினைப் பயன்படுத்துகிறோம். இதே கட்டளை, கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவிலும் பயன்படுத்தலாம். அதில் உள்ள அனைத்து வரிகளும் தேர்ந்தெடுக்கப்படும்.
கண்ட்ரோல் + சி (Ctrl+C): இங்கு ஒரு சிறிய வேறுபாட்டுடன் இந்த ஷார்ட் கட் கீ தொகுப்பு பயன்படுத்தப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் முழுமையும் காப்பி செய்திடலாம். அல்லது, நாம் எந்த கட்டளை கொடுக்கிறோமோ, அதற்கான செயல்பாட்டினை மட்டும் காப்பி செய்திட இந்த கட்டளையைப் பயன்படுத்தலாம். மேலும், இந்த ஷார்ட் கட் கீ தொகுப்பிற்கு பதிலாக, அதே இடத்தில் “Ctrl + Insert” என்ற கீ தொகுப்பினையும் பயன்படுத்தலாம்.
கண்ட்ரோல் + வி (Ctrl+V): மேலே சொல்லப்பட்ட ஷார்ட் கட் கீ தொகுப்பினைப் போலவே, இந்த கீ களைப் (Ctrl+V) பயன்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டினை ஒட்டிடப் பயன்படுத்தலாம். மேலும், கட்டளைகளைக் காப்பி செய்து, கமாண்ட் ப்ராம்ப்டில் ஒட்டிடவும் பயன்படுத்தலாம். இந்த ஷார்ட் கட் கீகளின் இடத்தில், “Shift + Insert” கீகளைப் பயன்படுத்தலாம்.

கண்ட்ரோல் + எம் (Ctrl+M) : இந்த கீகளைப் பயன்படுத்தி, Marker mode என்னும் நிலைக்குச் செல்லலாம். இந்த நிலையில் Shift + Arrow கீகளைப் பயன்படுத்தி, கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவில் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கலாம்.

மேலே தரப்பட்டுள்ளவை அனைவரும் பயன்படுத்தக் கூடிய, சில முக்கியமான ஷார்ட் கட் கீ தொகுப்புகளே. குறிப்பாக, இதுவரை வெளியான விண்டோஸ் இயக்கங்களில் இல்லாமல், விண்டோஸ் 10 இயக்க முறைமையில் தரப்பட்டுள்ளவை. இது போல இன்னும் பல ஷார்ட் கட் கீ தொகுப்புகள் உள்ளன. அவற்றை பின்னர் காண்போம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல