செவ்வாய், 31 ஜனவரி, 2017

பிரவுசர்கள் தரும் அறிவிப்புகளைத் தடுக்க

இப்போது நாம் பயன்படுத்தும் பிரவுசர்கள் அனைத்துமே, அவற்றில் இயங்கும் இணைய தளங்கள், அவை குறித்த அறிவிப்புகளை (notifications) நமக்குக் காட்டிட அனுமதி அளிக்கின்றன. அதற்கேற்ற வகையில், பிரவுசர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஏதேனும், செய்தி மற்றும் வர்த்தக ரீதியிலான இணைய தளங்களைப் பார்க்கையில், உடனே ஒரு பாப் அப் விண்டோ காட்டப்படும். “இந்த தளத்திலிருந்து எந்த தகவலையும் நீங்கள் காணத் தவறாமல் இருக்க வேண்டுமென்றால், நாங்கள் எங்கள் அறிவிப்புகளை உங்களுக்குத் தருகிறோம். தரட்டுமா?” என்று அதில் கேள்வி இருக்கும்.


பதிலாக “பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என ஒரு பதிலுக்கான பட்டனும், “சரி” என்று ஒரு பட்டனும் இருக்கும். “சரி” என நீங்கள் தேர்ந்தெடுத்தால், நாள் ஒன்றுக்கு அடிக்கடி சில புதிய தகவல்கள் குறித்த நோட்டிபிகேஷன்கள் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். இது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், பிரவுசர்கள் காட்டும் பாப் அப் தகவல்களையே தடுத்துவிடலாம். அதனை எப்படி தடுப்பது என இங்கு பார்க்கலாம்.

கூகுள் குரோம்: இந்த பாப் அப் கட்டச் செய்தியினை கூகுள் குரோம் பிரவுசரில் தடை செய்திட, கீழ்க்காணும் செயல்முறைகளைப் பின்பற்றவும்.

குரோம் பிரவுசரை இயக்கி, மேலாக, வலது மூலையில் கிடைக்கும் மெனு பட்டனில் கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் கீழ் விரி மெனுவில், 'Settings' தேர்ந்தெடுக்கவும்.

இங்கு கிடைக்கும் பட்டியலில் கீழாக உள்ள, “Show Advanced Settings” என்பதில் கிளிக் செய்திடவும்.

அதன் பின்னர், Privacy என்ற பிரிவில், “Content Settings” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இங்கு காட்டப்படும், Notifications என்ற பிரிவில், கீழாகச் சென்று, “Do not allow any site to show notifications” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இதனைத் தேர்ந்தெடுத்து அமைத்த பின்னர், ஏற்கனவே நீங்கள் அனுமதி கொடுத்த இணைய தளங்களிலிருந்து அறிவிப்புகள் வந்து கொண்டு தான் இருக்கும்.

இதற்கு “Manage Exceptions” என்பதில் கிளிக் செய்து, அதில் நீங்கள் அனுமதி அளித்துள்ள இணைய தளங்களின் பெயர்ப் பட்டியலைக் காணலாம்.

அதில் தரப்பட்டுள்ள அனுமதியை, நீங்கள் விரும்பினால் ரத்து செய்திடலாம்.

ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இணைய தளத்திற்கு மட்டும் இத்தகைய அறிவிப்புகள் தருவதற்கு நீங்கள் அனுமதி தர வேண்டும் என எண்ணினால், இந்த “Manage Exceptions” என்ற பிரிவிற்குச் சென்று, அதற்கான அனுமதியைத் தரலாம்.

பயர்பாக்ஸ்: பயர்பாக்ஸ் பிரவுசர், அனைத்து நோட்டிபிகேஷன் வசதியையும் தடுக்க, வழக்கமான தன் Options விண்டோவில் வசதி ஏற்படுத்தவில்லை.

இதனை ஏற்படுத்த, நீங்கள் the hidden about:config page. என்னும் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

பயர்பாக்ஸ் பிரவுசரை இயக்கி, அதில் உள்ள முகவரி கட்டத்தில், about:config என டைப் செய்து என்டர் தட்டவும்.

உடன் உங்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தி கிடைக்கும்.

இந்த அமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால், அது பயர்பாக்ஸ் பிரவுசர் இயக்கத்தினையே பாதிக்கும் என்று செய்தி வரும்.

அங்கு காட்டப்பட்டுள்ள “I accept the risk” என்பதில் கிளிக் செய்து தொடரவும்.

இங்கு கிடைக்கும் தேடல் கட்டத்தில், “notifications” என டைப் செய்திடவும்.

பின்னர், dom.webnotifications.enabled என்ற ஆப்ஷன் கட்டத்தில் டபுள் கிளிக் செய்திடவும்.

இது, அந்த செட்டிங் அமைப்பினை “false” என மாற்றும். அதாவது, வெப் நோட்டிபிகேஷன்ஸ், இனி பயர்பாக்ஸ் பிரவுசரில், உங்கள் பயன்பாட்டில் இருக்காது என்று பொருள்.

இந்த மாற்றம், அனைத்து இணைய தளங்களிலிருந்தும் நோட்டிபிகேஷன்கள் வருவதைத் தடை செய்துவிடும். எனவே, ஒன்றிரண்டு இணைய தளங்களிலிருந்து மட்டும் நோட்டிபிகேஷன் கிடைக்கட்டும் என விரும்பினால், அது இங்கே நடக்காது.

எட்ஜ் பிரவுசர்: மைக்ரோசாப்ட் வழங்கும் எட்ஜ் பிரவுசரில், இணைய தளங்கள் நோட்டிபிகேஷன் அளிக்க, விண்டோஸ் 10 ஆண்டுவிழா மேம்படுத்தலில் வசதிகள் அளிக்கப்பட்டன. இருப்பினும், நோட்டிபிகேஷன்களை மொத்தமாக நிறுத்துவதற்கு நமக்கு எந்த வழியையும், மைக்ரோசாப்ட் தன் எட்ஜ் பிரவுசரில் தரவில்லை. எனவே, இணைய தளங்கள் நம்மை நோட்டிபிகேஷன் அனுப்பவா என்று கேட்பதைத் தடுக்க முடியாது. கேட்கும்போது, நமக்கு நோட்டிபிகேஷன் வேண்டாம் என்ற நிலையை, “No” கிளிக் செய்வதன் மூலம் அமைத்துக் கொள்ளலாம். இப்படி ஒவ்வொரு இணைய தளத்திற்கும் நாம் தான் “No” கொடுத்து தடுக்க வேண்டும்.

ஆப்பிள் சபாரி: ஆப்பிள் நிறுவனத்தின் சபாரி பிரவுசரில், இணைய தளங்கள் நோட்டிபிகேஷன் குறித்து பாப் அப் செய்திகளை வழங்க தடைகளை விதிக்க வழி தருகிறது. இந்த விருப்பத்தேர்வை அமைக்க,

Safari > Preferences என்று செல்லவும்.

கிடைக்கும் விண்டோவின் கீழாக “Notifications” என்னும் டேப் இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்கவும்.

இங்கு உள்ள “Allow websites to ask for permission to send push notifications” என்பதன் அருகே உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் இருப்பதனை எடுத்துவிடவும்.

நீங்கள் ஏற்கனவே சில இணைய தளங்களுக்கு அனுமதி அளித்திருந்தால், அந்த தளங்கள், தங்கள் அறிவிப்புகளை உங்களுக்கு அளித்து வரும். அவற்றை நிறுத்த, இந்த விண்டோவிலேயே வசதி தரப்பட்டுள்ளது.

தடை செய்த இணைய தளத்திலிருந்து, அறிவிப்புகளைப் பெற விருப்பப்பட்டால், வெப் பிரவுசர் செட்டிங் சென்று, நோட்டிபிகேஷன் ஆப்ஷனை மாற்றலாம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல