ஞாயிறு, 1 ஜனவரி, 2017

உங்களுக்கு-தெரியுமா????

குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் 23

வரிக்குதிரையின் ஆயுட்காலம் 22 வருடங்கள்

அணிலின் ஆயுற்காலம் 82 வருடங்கள்

செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் 16 வருடங்கள்



சிம்பன்சியின் ஆயுட்காலம் 41 வருடங்கள்

பெருங்கரடியின் ஆயுட்காலம் 20 வருடங்கள்

தீக்கோழியின் ஆயுட்காலம் 50 வருடங்கள்

பென்குயினின் ஆயுட்காலம் 22 வருடங்கள்

திமிங்கிலத்தின் ஆயுட்காலம் 30 --40 வருடங்கள்

கடலாமையின் ஆயுட்காலம் 200 வருடங்கள்

சிரிக்கத் தெரிந்த விலங்கு மனிதன்

மூக்கில் பல் உள்ள விலங்கு முதலை

பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு ஒட்டகம்

ஈருடகவாழிகள் ஆமை, தவளை, சலமந்தா, முதளை

பறக்க முடியாத பறவைகள் கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் குயின்

பௌத்தரின் புனித நூல் திரிபீடதி

களுகங்கையின் நீளம் 120 கி.மீற்றர்

தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு தேரை

மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடும்.

200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்கள்.

உலக அளவில் தாம்பத்ய உறவிற்கு ஆணும் பெண்ணும் எடுத்துக் கொள்ளும் சராசரி நேரம் இரண்டு நிமிடங்கள்.

நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியது.

ராக்கூன் என்ற விலங்கு உணவை நீரில் கழுவிய பிறகே உண்ணும் வழக்கமுடையது.

மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.

நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டும்.

நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.

ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம்.

வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன.

மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.

கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.

ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும். wow.

பெண் சிலந்திப் பூச்சிகள் ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன. :rolleyes:

பூனைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குகின்றன.

நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.

ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடும்.

ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்கும்.

ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.

புழுவை இரண்டாகத் துண்டித்துப் போட்டாலும் அது சாகாது.

காண்டாமிருகத்தின் காலில் மூன்று பாதங்கள் இருக்கின்றன.

பூச்சி இனங்களில் அறிவாற்றல் அதிகமுடையது எறும்பு.

உலகில் அதிகமாக முட்டையிடும் உயிரினம் கரையான்.

கடல் பிராணியான ஆக்டோபஸின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

கொசுவுக்கு 47 பற்கள் இருக்கின்றன.

கணித மேதை ராமனுஜம் வீட்டில் இருக்கும்போது தன தாயுடன் ஆடு-புலி விளையாட்டு ஆடுவார்.

முதலைக்கு வாழ்நாளில் எத்தனை பற்கள் விழுந்தாலும் முளைத்துவிடும்.

சர்க்கஸ் நடத்தும் வழக்கம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்களிடம் இருந்தது.

உலகில் மூன்றாவது கண் உள்ள ஒரே பிராணி "ஸ்பினோடயூன்". நியூஜிலாந்து தீவின் கரையில் உள்ளது.

1690-ஆம் ஆண்டில் இங்கிலந்துக்காரர்களால் கண்டறியப்பட்ட நகரம் இன்றைய "கொல்கொத்தா".

இதுநாள் வரை ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் வராத ஒரே மாநிலம் - மேகாலாயா.

வீரமாமுனிவர் ஒரு நாளைக்கு ஒருமுறைதான் உணவு உட்கொள்வார்.

பூரானுக்கு நாற்பது கால்கள்.

கீரியும் - பாம்பும் போல தேளும் - எட்டுக்கால் பூச்சியும் இயற்கையிலே பரம எதிரிகள்.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு குதிரைகள் காட்டுப்பூனைகள் அளவிற்கே இருந்தனவாம்.

பாம்பு நுனி நாக்கினால் வாசனையை நுகர்கிறது.

நட்சத்திர மீனை எத்தனை சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டாலும், ஒவ்வொரு சிறிய துண்டும் ஒரு முழு நட்சத்திர மீனாக வளரும் சக்தி உடையதாம்.

புலிகள் கடுமையான சூரிய ஒளியை விரும்பாது.

புலிக்கு வெள்ளையாக எதைப் பார்த்தாலும் பயம் வரும்.

சிறுத்தை நீரைக் கண்டால் கூச்சப்பட்டது போல ஒதுங்கிவிடும்.

யானைக்கு துதிக்கையில் காயம் ஏற்பட்டுவிட்டால் உடனடியாக ஆறவே ஆறாது.

Tsetse fly - இந்தப் பூச்சி கடித்தால் ஏற்படும் நோய் என்ன தெரியுமா? தூக்கம்தான். தூங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

ப்ரொடெஸ்டென்ட்" இயக்கத்தை நிறுவியவர் 'மார்டின் லூதர்'

பைபிளில் குறிப்பிடப்படும் மிக வயதான மனிதனின் பெயர் மெதுசீலா. வயது 969 ஆண்டுகள்.

நியூசிலாந்தில் உள்ள இராட்சதப் பல்லிகளின் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவர ஓர் ஆண்டு காலம் ஆகிறது.

"அமைதிக் கடல்" சந்திரனில் உள்ளது.

கங்காருவினால் தனது வாலை தரையில் படாமல் உயர்த்திக் கொண்டு தாவ முடியாது.

"கேரா" என்பதிலிருந்து 'கேரளம்' வந்தது. 'கேரா' என்றால் தேங்காய் என்று அர்த்தம்.

"சகாரா பாலைவனம்" ஆண்டுதோறும் தெற்கே 50 கி. மீ. தொலைவு வளர்வதாக கூறப்படுகிறது.

தாயின் வயிற்றில் குழந்தையொன்று கருத்தரித்த 18வது நாளிலேயே அதன் மூளை வளரத்தொடங்கி விடுகிறதாம்.

"பாம்பாய் கக்கூஸ்" என்றழைக்கப்படும் நவீன கழிவறை 11ம் நூற்றாண்டில் மேற்கத்திய நாடுகளில் காணப்பட்டு வந்தது.

பல்துலக்க பயன்படும் பிரஷ் 1780-ம் ஆண்டில் "வில்லியம் அட்டீஸ்" எனும் தோல் வியாபாரி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

உலகின் மீது ஒரு மணி நேரம் விழும் சூரிய சக்தி 2,10,000 டன் நிலக்கரி தரும் சக்திக்கு சமம்.

"கிளாஸ் ஸ்நேக்" என்பது கண்ணாடியோ, பாம்போ அல்ல. அது ஒரு வகைப் பல்லி.

"பிரெய்ரி டாக்" என்பது நாய் இனத்தைச் சேர்ந்தது அல்ல. அது கொறிக்கும் விலங்கினம்.

"லேடி பர்டு" என்பது பறவை அல்ல. அது ஒரு வண்டு.

"பிளையிங் பாக்ஸ்" என்பது நரி அல்ல. அது ஒருவகை வெளவால்.

விமானத்தைக் கண்டுபிடித்த "ரைட் சகோதரர்கள்" இறுதிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை.

தைவானில் சைலன்சர் பொருத்திய துப்பாக்கியால் பின் மண்டையில் சுடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் இரண்டரை சென்டிமீட்டர் மழை பெய்ய மேகத்திலுள்ள நீரின் அளவு 25,000 டன்களாகும்.

உலகளவில் மருத்துவக் கல்லூரியில் "சாரணர் இயக்கம்" உள்ளது ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மட்டுமே.

உலகிலுள்ள 181 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

கி.பி. 400-ம் ஆண்டு வரை சீனாவில் 'இஸ்சா' என்ற பெயரில் தேயிலையை மருந்தாகவே பயன்படுத்தி வந்தனர்.

சீனப் பெருஞ்சுவரைக் கட்டிய 'சீன்-ஹி-கிராம்பி' அச்சுவர் உறுதியுடன் விளங்க பத்து லட்சம் தொழிலாளர்களின் இரத்தத்தால் சுவரை மெழுகச் செய்தானாம்.

மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ஒளியைக் கூட தேனியால் பார்க்க முடியும்.

வண்ணத்துப் பூச்சிகள் தன பின்னங்கால்களால் தான் சுவையை அறிகின்றன.

வளிமண்டலம் என்பது பூமியிலிருந்து 9௦௦ கி.மீ. உயரத்திலுள்ள பகுதியாகும்.

பகலைவிட இரவில் கப்பலின் எடை அதிகமாக இருக்கும். நிலவொளியில் ஆகர்ஷண சக்தி அதிகரிப்பதால் ஏற்படும் மாற்றம் இது.

சென்னை மெரீனா கடற்கரையின் நீளம் 13 கி.மீ.

மான்களின் வயதை அவற்றின் கொம்புகளில் உள்ள கிளைகளை வைத்து கணக்கிடுகிறார்கள்.

உலகில் லண்டனில் மட்டும் தான் மனித எலும்புகளின் வங்கியுள்ளது.

தாய்லாந்து 'வெள்ளை யானைகளின் நிலம்' என அழைக்கப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டிலுள்ள வெளன்சியா சர்ச்சிலுள்ள ஒரு பாத்திரத்தில் தான் இயேசு கடைசியாக உணவருந்தியதாகக் கூறப்படுகிறது.

மருத்துவ ஆய்விற்காக 'ரீசஸ்' என்ற குரங்குதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியப் பெருங்கடலில் காணப்படும் அதிசய மலர் 'காக்டஸ்'. இது ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மலர்கிறது.

அரபி மொழி உலகில் 25 நாடுகளில் அரசு அதிகாரபூர்வ மொழியாக விளங்குகிறது.

பிரெஞ்சு மொழி 32 நாடுகளிலும், ஆங்கிலம் 58 நாடுகளிலும் அரசு அதிகார மொழிகளாய் இருக்கின்றன.

திருமணமாகாத ஸ்பானிஷ் பெண்ணிற்கு பெயர் 'ஸெனோரிட்டா' என்பது.

சர்.சி.வி. ராமன் விஞ்ஞானத்தில் ஆர்வம் மிகுதியால் அதிக வருவாயுள்ள அரசாங்கப் பதவியை விட்டு விலகி குறைந்த வருவாயுள்ள பல்கலைக் கழகப் பேராசிரியராக வேலை ஏற்றுக் கொண்டார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பேசும் எல்லா மொழிகளும் அந்நாட்டு தேசிய மொழிகள்தான்.

உலகில் தாவரங்கள் தோன்றி 43 கோடி ஆண்டுகள் ஆகின்றன.

புதுவருடப் பிறப்பன்று வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வதால் அதிர்ஷ்டம் வெளியேறிவிடும் என்ற நம்பிக்கை சீனாவில் உள்ளது.

உலகில் உள்ள விஷ மரங்களில் இந்தோனேசியாவில் உள்ள 'உபர்ஸ்' மரம்தான் அதிக விஷமானது.

ஒவ்வொரு முழு நிலவுக்கும் இடைப்பட்ட காலம் 291/2 நாட்கள்

புகழ்பெற்ற ஈஃபில் டவரின் பிளானை வரைய ஆறாயிரம் சதுர கஜம் காகிதம் தேவைப்பட்டதாம்.

உலகில் மிக அகலமான பாலம் சிட்னி ஹார்பர் பாலம்.

உலகில் அடிக்கடி பூகம்பம் ஏற்படும் நாடு ஜப்பான் அல்ல; மெக்சிகோ

நண்டுக்கு ஐந்து ஜோடி கால்கள் உண்டு. செவுல்களால்தான் அது மூச்சுவிடும்.

வைக்கோலால் ஆன தொப்பிகளை ஈக்வடாரில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்

இந்தியாவில் அதிகம் பயிராகும் மிளகாய் ரகம் - ஹங்கேரியன் 'பாப்ரிகா'

இந்தியாவில் மலை ஏறுவதற்கான கிளப்புகள் அதிக அளவில் மேற்கு வங்க மாநிலத்தில்தான் உள்ளன.

சுறா மீனை ஜப்பானியர்கள் 'கடல் தங்கம்' என்று அழைக்கிறார்கள்

'சிரிப்' என்ற பறவை நீர்ப்பரப்பின் மேல் தன் கூட்டைக் கட்டுகிறது.

முதல் உலகப் போர் 1914 முதல் 1918 வரை.

இரண்டாம் உலகப் போர் 1939 முதல் 1945 வரை.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் 1945-ம் ஆண்டு 'உலக ஐக்கிய நாடுகள் சபை' அமைக்கப்பட்டது.

பழந்தமிழர் காலம் சுமார் கி.மு.10,000 ஆண்டில் தொடங்குவதாக கூறப்படுகிறது.

லட்சத்தீவில் மொத்தமுள்ள 36 தீவுகளில் 11 மட்டும் மக்கள் வசிக்கிறார்கள்.

இறந்து போனவர்களின் உடலை பதம் செய்து காப்பாற்றுவதற்கு பெயர் 'எம்பாம்'.

'இம்பாலா' என்ற மான் ஒரே தாவலில் 8 அடி உயரம் துள்ளி 25 அடி தூரம் பாயும்.

அமெரிக்காவில் ஹெலிகாப்டர்களை டாக்சிகளாக பயன்படுத்துகிறார்கள். இதை 'சாப்பர்ஸ்' என்று அழைக்கிறார்கள்.

தலைவலிகளில் 47 விதங்கள் இருக்கின்றன.

மனித சிந்தனையின் வேகம் மணிக்கு 150 மைல் செயல்படுகிறதாம்.

'செரியம்' எனப்படும் பொருளை நகத்தால் கீறினாலே தீப்பற்றிக் கொள்ளும்.

கழுகு பறக்கும்போது அதன் கால்களும், தலையும் கீழ் நோக்கியே இருக்கும்.

உலகில் மிகுதியான மக்களால் பயன்படுத்தப்படுவது ரோமன் எழுத்துக்கள்தான்.

வெயில் 150 டிகிரிக்கும் மேலாக அடித்தால்தான் ஒட்டகத்திற்கு வியர்க்கும்.

நேபாள வீரர் "ஆக்ரிட்டா ஷெர்பா" என்பவர் பத்து முறை எவரெஸ்ட்டை அடைந்ததால், அவருக்கு "பனிச் சிறுத்தை மனிதன்" என்ற சிறப்பு பட்டம் உண்டு.

தேசியக் கொடியில் "ஆலமரம்" இடம்பெற்றுள்ள நாடு லெபனான்.

மாட்டுச்சாண எரிபொருளில் உள்ள முக்கியமான வாயு "மீத்தேன்".

முயலின் உடலில் அபாய அறிவிப்புக் கொடுக்கும் பகுதி வால்.

முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கும் ஆண் இன மீன் "கடல் குதிரை".

பாங்க ஆஃப் இங்கிலாந்து 1804-ம் ஆண்டு முதல் 1806-ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் டாலர்களான வெள்ளி டாலர் நாணயங்களை கொள்ளுப் பட்டறையால் அடித்து வெளியிட்டது.

விண்வெளியில் ஆறுமுறை பயணித்த பெருமை "கேப்டன் ஜான் வாட்ஸ் எங்" என்ற அமெரிக்கருக்கு உண்டு.

சயாமிய மொழியில் "நான்" என்ற சொல்லை ஒன்பது விதமான சொற்களால் வெளிப்படுத்தலாம். உலகில் வேறு எந்த மொழிக்கும் இந்தச் சிறப்பு இல்லை.

13 நாட்டு எல்லைகளைக் கொண்டுள்ள ஒரே நாடு சீனா.*&* உலகின் மிகப்பெரிய வளைகுடா - மெக்ஸிகோ வளைகுடா.

நீர் பனிக்கட்டியாக உறையும்போது அதன் பரிமாணம் அதிகமாகும்.

அமெரிக்காவின் கொடி "ஓல்டு குளோரி" எனப்படுகிறது.

"அமாரிக்" எத்தியோப்பியாவில் பேசப்படும் மொழி.

மூங்கிலில் சுமார் 500 வகைகள் உள்ளன.*&* குரங்குகளுக்குப் பல வகையான நிறங்களைப் பிரித்தறியும் ஆற்றல் உண்டு.

முப்பதாம் வருட விழாவை ஆங்கிலத்தில் "பெர்ல் ஜூப்ளி" என்று அழைப்பார்கள்.

பிச்சைக்காரர்களுக்கு பென்ஷன் வழங்கிய நாடு - இலங்கை.*&* சீக்கியர்களின் கடைசி குரு - "குரு கோவிந்த் சிங்

"சகாரா" 35 லட்சம் சதுர மைல் பரப்பில் உள்ளது.*&* சந்திரனைப் போன்று வீனஸ் கோளுக்கும் பிறைகள் உண்டு.

பாலில் இல்லாத சத்து "இரும்புச்சத்து"

நாட்டில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கும் மையம் "டோராடூன்" என்ற இடத்தில் உள்ளது.

இந்திய நேரம் "அலகாபாத்" என்ற இடத்தின் நேரத்தை வைத்து கணக்கிடப்படுகிறது.

சூரியனுடைய ஒளியில் முப்பதினாயிரத்தில் ஒரு பகுதிதான் சந்திரனின் ஒளி.

நம் நாட்டில் மட்டுமல்ல, சீனாவிலும் விதவைகளுக்கு வெள்ளை உடை தான்.

ஒவ்வொரு வகை சிலந்தியும் ஒவ்வொரு வகை வலை பின்னும்.

வித்தைகாட்ட பயன்படும் குரங்குக்கு 'பரட்டைத் தலை குரங்கு' என்று பெயர்.

ஒரு யுகம் என்பது 43, 20, 000 ஆண்டுகளாகும்.

வளர்பிறை கோடுகள் மேல்நோக்கியும், தேய்பிறை கோடுகள் கீழ்நோக்கியும் இருக்கும்.

கண்ணீர்புகை குண்டு, குதிரைக்கு எவ்வித விளைவையும் ஏற்படுத்தாது.

கிறிஸ்தவர்களின் "போப் ஆண்டவர்" மூன்று மகுடங்களை அணிந்திருப்பார்.

எலிக்கும், முயலுக்கும் பற்கள் வளர்ந்துகொண்டே இருக்கும்.

"O" குரூப் ரத்தம் உடையவர்களை 'யுனிவர்சல் டோனர்' என்பர்.

பாகிஸ்தான் - சீனா நாடுகளுக்கு இடையே உள்ள மலைத்தொடர் 'காரகோரம்'.

'பிட்யூட்டரி' கிளாண்ட்ஸ்க்குத்தான் 'மாஸ்டர் கிளாண்ட்ஸ்' என்று பெயர்.

அதி உயர விமானப் போர்ப் பயிற்சிப் பள்ளி காஷ்மீர் மாநிலம் 'குல்மார்க்'-ல் உள்ளது.

நெப்போலியன் - 'Man of Destiney" என்று அழைக்கப்படுவார்.

VOTE - Voice Of Taxpayers Everywhere.

ஆப்பிரிக்காவில் "ஜெர்பா" என்னும் ஒருவகை எலிகள் தலையைத் திருப்பாமலே பின்னால் உள்ள பொருளைப் பார்க்கும். இது 10 அடி தூரம் தாவும் திறன் கொண்டது.

ஒரு டேபிள் ஸ்பூன் என்பது 120 துளிகள் கொண்டது.

பறக்கும்போது ஒரு வினாடிக்கு 120 முறை சிறகுகளை அசைக்கும் ஈயைப் போன்ற ஒரு பூச்சியின் பெயர் "கிகாடாஸ்".

ஓர் ஆப்பிள் துண்டிலுள்ள சக்தி சராசரியாக ஓர் ஆண் 35 நிமிடம் ஓடவும் அல்லது ஒரு பெண் 50 நிமிடம் ஓடவும் தேவையான சக்திக்கு நிகரானது.

அசாமில் உள்ள காண்டாமிருகம் சரணாலயம் - "காசிரங்கா".

இங்கிலாந்தில் உள்ள 'மான்கல்' என்ற பூனை இனத்திற்கு வாலே கிடையாது.

மாறுகுரல் உடைய ஒரே பறவை குயில் மட்டுமே.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஜனாதிபதியாக இருந்து பிறகு அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர் "வில்லியம் டாஃபட்".

மனிதர்களுக்கு வாசனை அறியும் மொட்டுக்கள் 50 லட்சம் உள்ளன.

உலகிலேயே மிகப்பெரிய பவளப்படிவுகள் ஆஸ்திரேலியாவில் உள்ள "தி கிரேட் பேரியர் ரீஃப்" ஆகும்.

ஏ, பி, சி, ஆகிய மூன்று வைட்டமின்களும் உள்ள ஒரே பழம் வாழைப்பழம்.

புல்லாங்குழலில் 7 துவாரங்கள் உள்ளன.

வெளிநாட்டில் இறந்த இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி.

பென்சில் தயாரிக்க காரியம், களிமண், மரக்கூழ் ஆகிய பொருட்கள் தேவைப்படுகின்றன.

கோல்ஃப் பணக்காரர்களின் விளையாட்டு என அழைக்கப்படுகிறது.

குரங்கில் 600 வகைகள் உள்ளன.

பெண் குயில் பாடாது.

குளவியின் ஆயுட்காலம் 365 நாட்கள்.

தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உண்டு.

பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் தாதாபாய் நௌரோஜி.

"ஜெய் ஜவான் ஜெய் கிஸôன்' என்ற முழக்கத்தைத் தந்தவர் லால் பகதூர் சாஸ்திரி.

இங்கிலீஷ் கால்வாய் என்பது கால்வாய் அல்ல கடல்.

உலகிலுள்ள 17 பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன்.

ரபீந்தரநாத் தாகூரின் சுயசரிதை நூலின் பெயர் "எனது நினைவுக் குறிப்புகள்'.

டாக்டர் அப்துல்கலாமின் சுயசரிதை நூலின் பெயர் "அக்கினிச் சிறகுகள்'.

திரு.வி.க.வின் சுயசரிதை நூலின் பெயர் "என் வாழ்க்கைக் குறிப்புகள்'.

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் சுயசரிதை நூலின் பெயர் "என் சரிதம்'.

நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளையின் சுயசரிதை நூலின் பெயர் "என் கதை'.

கவிஞர் கண்ணதாசனின் சுயசரிதை நூலின் பெயர் "வனவாசம்'.

நீருக்கடியில் பறக்கும் ஆற்றல் படைத்தது கிவி.

வயிற்றில் பற்கள் உள்ள பறவை கிவி.

கிவிப் பறவை பூனைப் போல் கத்தும்; நாயைப் போல் உறுமும்.

கிவி பூமியைக் குடைந்து முட்டையிடும்.

ஆண் கிவிப் பறவைதான் முட்டைகளை அடைகாக்கும்.

கிவிப் பறவைக்கு பகலில் கண் தெரியாது. எனவே இரவில் மட்டுமே நடமாடும்.

அமெரிக்க செவ்விந்திய பூர்வ குடிமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது பாப்கார்ன்.

பாப்கார்னால் ஆன தலைப்பாகை, தொப்பி போன்றவற்றை சிவப்பிந்தியர்கள் அணிந்தனர்.

ஆயிரம் ஆண்டுகளாக பாப்கார்ன் உலகில் இருந்து வருகிறது.

பாப்கார்ன் இயந்திரத்தை சார்லஸ் கிரீட்டஸ் என்பவர் 19-ம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார்.

வடஅமெரிக்காவில் பாப்கார்னைக் கொண்டு கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்படுகிறது.

பிரேசில் நாட்டின் காடுகளிலிருந்து பெறப்படும் தேன் கசக்கும் தன்மையுடையது.

இந்திய வானொலியின் பழைய பெயர் "இந்தியன் பிராட்காஸ்டிங் சர்வீஸ்'. இது 1930-ல் தேசிய மயமாக்கப்பட்டது.

லண்டன் மிருகக்காட்சி சாலையில் ஒரு பாம்புக்கு கண்ணாடிக் கண் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள மண்புழுவில் ஒரு வகை 10 அடி நீளம் வரை வளர்கிறது.

கடற்படையை முதன்முதலில் கி.மு.2,300-ல் எகிப்து நாடுதான் உருவாக்கியது.

அதிதி கோவத்திரிகர் திருமணமான பெண்களுக்கான மிசஸ் வோர்ல்ட் அழகிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.

ஒரு பெண் இயக்குனரால் இயக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் மிஸ் கமலா; இயக்கியவர் டி. பி. ராஜலட்சுமி.

இந்தியாவிலேயே மிகப்பெரிய துடுப்பாட்ட அரங்கம் ஈடன் கார்டன்ஸ்.

புகழ் பெற்ற பெண் வானூர்தி ஆர்வலர் அமேலியா ஏர்ஃகாட் காணாமல் போன மர்மம் இன்று வரை விளக்கப்படவில்லை.

இந்தியக் கடலோரக் காவல்படை 1978ல் உருவாக்கப்பட்டது.

முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் கோல்டா மேயர் அந்நாட்டு அரசியலின் “இரும்புப் பெண்மணி” என்று அழைக்கப்பட்டார்.

மாலைதீவுகளின் நாட்டுப்பண்ணுக்கு இசையமைத்துக் கொடுத்தவர் இலங்கையின் சிங்கள இசையமைப்பாளர் பத்மசிறீ டபிள்யூ. டி. அமரதேவ.

தீவிரவாத எதிர்ப்பில் ஈடுபடும் ஐக்கிய இராச்சியத்தின் அதிரடிப் படை சிறப்பு வான்சேவை என்று அழைக்கப்படுகிறது.

கர்ப்பமான பெண்களின் கருப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தும், பாதுகாப்பும் வழங்கும் திரவம் பனிக்குட நீர்.

சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் அனல் தெறிக்கும் வசனங்களை எழுதியவர் சக்தி கிருஷ்ணசாமி.

கடம்பினி கங்கூலி பிரித்தானியப் பேரரசின் முதல் இரு பெண் பட்டதாரிகளில் ஒருவர். தெற்காசியாவிலேயே ஐரோப்பிய மருத்துவத்தில்மருத்துவர்களிலும் ஒருவர் இவராவார். பயிற்சிபெற்ற முதல் பெண்

கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் மின்னஞ்சல் சேவையை ஏப்ரல் 1, 2004ல்அறிமுகப்படுத்திய போது, அதனை கூகுளின் வழக்கமான ஏப்ரல் முட்டாள்கள் நாள் குறும்புச் செயலாகவே பலரும் அதை நினைத்தனர்.

கிணறுகளில் இருந்து ஏற்றமுறை மூலம் நீர் இறைக்கும் போது விவசாயத் தொழிலாளர்கள் பாடும் பாடல் ஏற்றப்பாட்டு எனப்படுகிறது.

சீன அரசு எதிர்ப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான லியூ சியாபோவுக்கு 2010க்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சீன அரசு
கன்பூசியசு அமைதிப் பரிசு என்ற புதிய பரிசை ஏற்படுத்தியுள்ளது.

தன்னியக்க வங்கி இயந்திரம் எனப்படும் தானியங்கிப் பணப் பட்டுவாடா எந்திரத்தைக் கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பேரோன் தன்னுடைய மனைவியால் ஆறு இலக்க இரகசிய குறியீட்டு எண்ணை நினைவில் வைக்க முடியாததால் அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார்.

சின்த்தோ (அல்லது ஷிண்டோ) என்பது ஜப்பானில் பின்பற்றப்படும் ஒரு மதம். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் வரை இதுவே ஜப்பானின் முதன்மையான மதமாக விளங்கியது.

சபையில் அல்லது மற்றவர் முன் கூறத்தகாத சொல்லை அல்லது சொற்றொடரை வேறொரு சொல் அல்லது சொற்றொடர் கொண்டு வெளிப்படுத்துதல் இடக்கரடக்கல் எனப்படும்.

இலங்கையில் 1972 இல் தயாரிக்கப்பட்ட குத்துவிளக்கு திரைப்படத்தில் இடம்பெறும் "ஈழத்திரு நாடே" என்ற பாடல் அதில் வரும் 'ஈழம்' என்ற சொல்லுக்காக இலங்கை வானொலியில் ஒலிபரப்பத் தடை செய்யப்பட்டது.

வெள்ளை ரோசா என்பது நாசி ஜேர்மனியில் வன்முறையற்ற முறையில் போராடிய ஒரு மாணவர் குழு. இவர்கள் 1943 இல் தூக்கிலிடப்பட்டார்கள். இன்று இவ்வியக்க உறுப்பினர்கள் ஜேர்மனி அரசினரால் மாவீரர்களாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் எழுப்பப்பட்டுள்ளன.

எகிப்தில் உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

இலங்கை வரலாற்றில் அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் கலவரம் கருதப்படுகிறது.

திருவிதாங்கூர் சமத்தானத்தால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டம் தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது.

ஆலோவீன் பண்டிகை நாளில் மற்றவர்களை பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது போன்ற நிகழ்வுகள் இடம்பெறும் .

கம்பர் வழிவந்தோர் ஒருவர் பாடிக்கொடுத்த மங்கல வாழ்த்து கொங்குநாட்டுத் திருமணங்களில் பாடப்பெறுகிறது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்கு வேளாளர் வள்ளல் சடையப்ப கவுண்டரை பெருமிதப்படுத்தும் விதமாக கொங்கு மங்கல வாழ்த்தை பாடிக்கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இரகுவம்சத்தைத் தமிழில் முதன் முதலில் பாடியவர் கிபி 16 - 17 ஆம் நூற்றாண்டுகளில் ஈழத்தில் வாழ்ந்த அரசகேசரி என்னும் அரச குடும்பத்துப் புலவர். இது 1887 இல் யாழ்ப்பாணத்தில் பதிப்பிக்கப்பட்டது.

கற்காலம் என்பது, கருவிகளைச் செய்வதற்காகக் கற்கள் பயன்படுத்தப்பட்ட பரந்த வரலாற்றுக்கு முந்திய காலப் பகுதியைக் குறிக்கிறது.

இந்தியாவில் முதல் தொடருந்துப் போக்குவரத்து 22 டிசம்பர் 1851-ல் ரூர்க்கிக்கு கட்டுமானப்பொருட்களைக் கொண்டு செல்ல துவங்கப்பட்டது.

தமிழீழத்தில் அராலியில் 1649 ஆம் ஆண்டில் பிறந்த இராமலிங்க முனிவர் என்பவரே முதன் முதலில் வாக்கியப் பஞ்சாங்கத்தை கணித்து வெளியிட்டவராவர். 16.05.1667 - இல் தமது பதினெட்டாவது அகவையில் இதனை வெளியிட்டார்.

யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் அச்சடித்து வெளியான நூல் ' முத்தி வழி ' என்பதாகும். சேர்ச் மிஷனைச் சேர்ந்த யோசேப்பு நைற்று என்ற பாதிரியார் 1820 ஆம் ஆண்டையடுத்து இந்நூலை வெளியிட்டார்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்க் கரணியங்களை ( காரணங்களை ) விளக்கமாக எழுதியவர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள். அவ் ஊர்ப்பெயர் அகராதி யாழ்ப்பாண வைபவ கௌமுதி ஆகும். அந் நூல் 1918 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு உள்ளது

தமிழில் சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த சாகிப் எம். சீனிவாசராவ்.

பெண்கள் மாத இதழாக வெளிவந்த முதல் இதழ் ' தமிழ் மகள்' ஆகும். இது 1937 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதன் ஆசிரியராக திருவாட்டி மங்களம்மாள் மாசிலாமணி அவர்கள் இருந்தார்.

அப்புக்காத்து ஐசாக் தம்பையாவின் மனைவியான மங்கள நாயகி என்பவரே முதன் முதல் தமிழ் நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளராவார். 1914 இல் ' நொறுக்குண்ட உதயம்' என்றும் 1926 இல் ' அரியமலர்' என்றும் இரு நாவல்களை எழுதியிருந்தார்.

தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ' கீதகவசம்'. 1913ஆம் ஆண்டு.

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல