வேர்ட் புரோகிராமில், ஆவணங்களைத் தயார் செய்து, பின் அவற்றைத் திருத்தி, புதிய பார்மட் வசதிகளை அமைக்கையில், ஹோம் மெனுவிற்குச் செல்லாமல், டாகுமெண்ட் உள்ளாகவே, சிறிய மெனு ஒன்று கிடைக்கும். இந்த வசதிக்கு 'மினி டூல் பார்' என்று பெயர். 'மினி டூல் பார்' வசதி, வேர்ட் 2007 முதல் நமக்குக் கிடைத்து வருகிறது. நம் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்தவுடன் இது நமக்குக் காட்டப்படும்.
வேறு ஒரு எழுத்துருவுக்கு மாற்ற அல்லது சொல்லை அழுத்தமாக, சாய்வாக, அடிக்கோடுடன் என அமைக்க மற்றும் பல பார்மட் மாறுதல்களை மேற்கொள்ள, இந்த மினி டூல் பாரைப் பயன்படுத்தலாம்.
அது இல்லாது இருந்தால் அல்லது மறைந்தால் அதனை பெற / மீண்டும் பெற கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
1. Office பட்டன் கிளிக் செய்திடவும்.
2. Word Optionsகிளிக் செய்க.
3. இடது பக்கம் உள்ள பிரிவில் Popular என்பதில் கிளிக் செய்திடுக.
4. இங்கு கிடைக்கும் பிரிவில் Show Mini Toolbar என்று உள்ள இடத்தில் டிக் அடையாளத்தை அமைக்கவும்.
5. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
நீங்கள் பயன்படுத்துவது ஆபீஸ் 2010 தொகுப்பாக இருந்தால், கீழே கொடுத்துள்ளபடி செயல்படவும்.
1. File டேப்பில் கிளிக் செய்திடவும்.
2. இடது பக்கம் உள்ள பிரிவில் Help என்பதன் கீழாக உள்ள Options என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு General என்பதில் கிளிக் செய்திடுக.
4. இங்கு User Interface Options என்ற பிரிவில், Selection என்ற தலைப்பில், Mini Tool Bar என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக