வேர்ட் புரோகிராமில், ஆவணங்களைத் தயாரிக்கையில், சொற்களில் பிழைகள் இருந்தால், அதன் கீழே சிகப்பு கோடு காட்டப்படுகிறது. அதில் ரைட் கிளிக் செய்திடுகையில், அச்சொல் சரியான எழுத்துக்களுடன் காட்டப்படுகிறது. இதைப் போல, அந்த சொல்லுக்கான எதிர் பொருள் தரும் எதிர்ச் சொல் பெற என்ன செய்திட வேண்டும்?
ஆவணங்களை உருவாக்குகையில், வேர்ட் புரோகிராமில், அகராதி ஒன்று பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும். அது, நீங்கள் அமைக்கும் சொற்களைச் சரி பார்த்து, அதில் எழுத்துப் பிழை இருந்தால், உடனே சிகப்பு வண்ணத்தில் கோட்டினை அமைக்கும்.
எதிர்ச்சொல், Thesaurus என்பதில் கிடைக்கும்.
வேர்டில் 'தெசாரஸ்' இயங்கினாலும், குறைவான எண்ணிக்கையிலேயே சொற்கள் அதில் இருக்கும். இருப்பினும் சில செயல்பாடுகளை மேற்கொள்வதன் மூலம், எதிர்ச் சொற்களையும் பெறலாம்.
எந்த சொல்லுக்கு எதிர்ப்பதம் வேண்டுமோ, அதில் கர்சரை நிறுத்தவும்.
அடுத்து, Shift+F7 கீகளை அழுத்தவும்.
வேர்ட், Research Pane என்ற ஒரு பிரிவினை டாகுமெண்ட் வலது பக்கம் காட்டும்.
நீங்கள் தேர்ந்தெடுத்த சொல்லுக்கு எதிர்ச்சொல் இருந்தால், அந்த சொல் காட்டப்பட்டு அருகிலேயே (Antonym) எனக் காட்டப்படும்.
சில வேளைகளில், ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எதிர்ப்பதங்கள் காட்டப்படும். ஒத்த பொருள் தரும் சொற்களும் காட்டப்படும்.
ஒத்த பொருள் கொண்ட சொல் கிடைக்க, குறிப்பிட்ட சொல் மீது ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் கீழ் விரி மெனுவில், Synonym என்பதில் கிளிக் செய்தால், ஒத்த பொருள் கொண்ட சொற்கள் பட்டியலிடப்படும்.
இந்த சொற்களில் ஒன்றை டாகுமெண்ட்டில் இடைச் செருக, அந்த சொல் மீது ரைட் கிளிக் செய்தால், அதில் உள்ள Insert அல்லது Copy ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக