இங்கு ஆறு வாரத்திற்கு ஒருமுறை தோல் உரிக்கும் உலகின் அதிசய பாம்பு பெண் பற்றி கூறப்பட்டுள்ளது.
பெண்கள் என்றாலே அழகு. முகத்தில் சிறிய அளவு பரு வந்தாலே பெண்கள் பெரியவளவில் கவலைப்படுவார்கள். ஆனால், இதுவே ஒரு பதின் வயது பெண்ணுக்கு ஆறு வாரத்திற்கு ஒருமுறை உடலில் இருக்கும் ஒட்டு மொத்த தோலும் உரிந்து வருகிறது என்றால்?
நினைத்து பார்க்கவே கஷ்டமாக இருக்கும் இந்த சூழலில் தான் தினமும் வாழ்ந்து வருகிறார் இந்தியாவை சேர்ந்த ஷாலினி எனும் பெண்....
ஷாலினி யாதவ் 16 வயது நிரம்பிய இளம் பெண். இவர் ஒரு வினோத சரும பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஒவ்வொரு ஆறு வாரத்திற்கும் ஒருமுறை இவரது தோல் பாம்பு தோல் போல உரிந்து வந்துவிடுகிறது.
இந்த சரும கோளாறுக்கு பெயர் எர்தோடெர்மா என கூறப்படுகிறது. இவர் வலி இல்லாமல் இருக்க க்ரீம் பயன்படுத்துகிறார். இவரது வீட்டின் பொருளாதார சூழலால் அந்த க்ரீமை எப்போதும் வாங்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
ஷாலினிக்கு இந்த சரும கோளாறு குழந்தை பருவத்தில் இருந்து இருக்கிறது. 45 நாட்களுக்கு ஒருமுறை தோல் உரிந்து வந்துவிடும்.
ஷாலினியின் பெற்றோர் இவரை பல மருத்துவர்களிடம் காண்பித்துவிட்டனர். ஆனால், இதற்கான சரியான சிகிச்சை முறை இல்லை என கூறப்படுகிறது.
இந்த சரும கோளாறு இவரை கொல்லவில்லை எனிலும், இவரது வாழ்க்கை கொஞ்சமாக, கொஞ்சமாக முடிந்து வருகிறது. இதனால் ஏற்படும் வலி, சரும வெடிப்பு, இரத்தம் கசிதல் போன்றவை மிகவும் வலி மிகுந்தது. இதை எல்லாம் பார்த்துக் கொண்டு உதவ முடியாத சூழலில் இருக்கிறார் ஷாலினியின் தாய்.
மற்ற குழந்தைகள் அச்சம் கொள்வதால் இவரை பள்ளியில் சேர்க்க மறுக்கிறார்கள். இவருடன் நட்புடன் பழகவும் யாரும் முன்வருவது இல்லை. இந்த சரும கோளாறுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம், இதனால் என்னை ஏன் வெறுக்கிறீர்கள் என்ற கேள்வியை தான் ஷாலினி மக்கள் முன் வைக்கிறார்.
Thatstamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக