டேப்ளட் பி.சி.யில் நீங்கள் எதிர்பார்ப்பது போல எந்த ஐகானும் அமைந்திருக்காது. டேப்ளட் பி.சி.யில், இதற்கு 'செட்டிங்ஸ்' செல்ல வேண்டும். அதில், “connections” அல்லது “network connections” Wi Fi என்ற பிரிவு உள்ளதா எனப் பார்த்து, அதனை கிளிக் செய்திடவும்.
இது, டேப்ளட் பி.சி. தயாரித்து அளித்த நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடும்.
அடுத்து, உங்கள் வீட்டில் தரப்பட்டிருக்கும் பிராட்பேண்ட் இணைப்பு, வை பி தரப்படும் வகையில் உள்ளதா என சோதித்துக் கொண்டு, அதனை இயக்கவும்.
இனி, டேப்ளட் பி.சி. செட்டிங்ஸ் பக்கத்தில், Airplane Mode, 'OFF' நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தவும். 'ON' நிலையில் இயக்கப்பட்டிருந்தால், வை பி இணைப்பு, டேப்ளட் பி.சி.யில் இயங்காது.
இனி, வை பி அல்லது நெட்வொர்க் கனெக்ஷன் பகுதியில், உங்கள் டேப்ளட் பி.சி. உணர்ந்தறியும் அனைத்து வை பி இணைப்புகளின் பெயர்களும் காட்டப்படும்.
உங்கள் இணைப்பின் பெயர் நிச்சயம் அந்தப் பட்டியலில் இருக்கும்.
அதில் தட்டி, இயக்கினால், உடன் பாஸ்வேர்ட் கேட்கப்படும்.
சரியாக பாஸ்வேர்டைக் கொடுத்தால், இணைப்பு கிடைக்கும்.
அடுத்த முறை, உங்கள் இணைய இணைப்பினை நீங்கள் இயக்கி இருந்தால், டேப்ளட் பி.சி. தானாகவே உணர்ந்து, அதில் இணைந்து கொள்ளும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக