வேர்ட் புரோகிராமில் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கும்போது, டாகுமெண்ட் பக்கத்தினைச் சுற்றி, புள்ளிகளால் ஆன கட்டம் காட்டப்படும் ஆனால், அது அச்சிடுகையில் இருக்காது.
இந்த வசதி அனைத்து வேர்ட் புரோகிராமிலும் கொடுக்கப்பட்டுள்ளது. புள்ளிகளால் ஆன இந்தக் கட்டம், உங்கள் டாகுமெண்ட் அதற்கான பக்கத்தில் எந்த அளவிற்கு இடம் எடுத்துக் கொள்கிறது என்பதைக் காட்டுகிறது.
இதற்கு டாகுமெண்ட்டினை Print Layout அமைப்பில் உருவாக்க வேண்டும். இதனை அமைக்க,
1. Word Options டயலாக் பாக்ஸைக் கொண்டு வரவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, கீழாக உள்ள Word Options பட்டனை கிளிக் செய்திட வேண்டும்.
2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு கிடைக்கும் ஆப்ஷன்ஸ் பட்டியலில் மவுஸை உருட்டிக் கொண்டு செல்லவும். Show Document Content என்ற பிரிவில் நிறுத்தவும்.
4. Show Text Boundaries என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தினால், டெக்ஸ்ட் எல்லைக் கோடு காட்டப்படும். எடுத்துவிட்டால் காட்டப்பட மாட்டாது.
தேவையானதை ஏற்படுத்திய பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக