பல வருடங்களுக்கு முன்பு ஒரு ஊடக நேர்காணலில் “உங்கள் முதல் இராணுவ நடவடிக்கை எது?” என்று வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் கேட்கப்பட்டது. அதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிளalfred்ளை பிரபாகரன் “அல்பிரட் துரையப்பா” என்று பதிலளித்தார். பிரபாகரன் நிச்சயமாக யாழ்ப்பாண குடாநாட்டில் வைத்து ஜூலை 27,1975ல் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரபலமான மேயரும் மற்றும் முன்னாள் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினருமான அல்பிரட் தங்கராஜா துரையப்பா அவர்களைத்தான் குறிப்பிட்டிருக்கிறார். பிரபாகரன் மற்றும் கலாபதி,கிருபாகரன் மற்றும் சற்குணம் என்கிற ஏனைய மூவரும்தான் பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலயத்துக்கு முன்பாக நடைபெற்ற அந்த குரூரமான படுகொலைக்கு பொறுப்பானவர்கள்.
தேர்தல் மூலம் பதவியொன்றை வகித்துவரும் நிராயுதபாணியான ஒரு குடிமகனைக் கொலை செய்வது பொதுவாக ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்று பார்க்கப்படுமே தவிர ஒரு இராணுவச் செயற்பாடாக அல்ல. ஆனால் துரையப்பாவின் கொலையை பிரபாகரன் தனது முதல் இராணுவ நடவடிக்கை என்று கோருவது, ஒரு பயங்கரவாத செயலை இராணுவ நடவடிக்கை என்ற உணர்வில் தெரியப்படுத்துவது, உண்மைகளை திரித்துக் கூறும் பிரபாகரனின் மனப்போக்கை அடையாளப்படுத்துகிறது.
இது ஒருவேளை ஸ்ரீலங்காவின் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்களின் படுகொலைகளுக்கு பொறுப்பாக இருந்த இருந்த கொடிய புலி இயக்கத் தலைவரின் சுபாவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடும்.
யாழ்ப்பாண மேயர் துரையப்பாவில் ஆரம்பித்து பிரபாகரனின் எல்.ரீ.ரீ.ஈ, ஒரு முன்னாள் இந்திய பிரதமர், ஒரு ஸ்ரீலங்கா ஜனாதிபதி, ஒரு ஸ்ரீலங்காவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர், பல அமைச்சரவை அமைச்சர்கள், மாவட்ட அபிவிருத்தி சபைகளின் முன்னாள் தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், போட்டி தமிழ் போராளிக் குழுக்களின் தலைவர்கள் போன்றவர்கள் உட்பட எண்ணற்ற அரசியல் தலைவர்களை கொலை செய்திருக்கிறது. பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருப்பது, தமிழ் அரசியலில் தற்பொழுது நிலவும் வலிமையான அரசியல் தவைருக்கான பற்றாக்குறைக்கான காரணம், எல்.ரீ.ரீ.ஈ யின் தொடர்ச்சியான அரசியல் படுகொலைகளினால் ஏற்பட்ட விளைவுதான் என்று.
எனினும், மே 2009ல் ஸ்ரீலங்கா ஆயுதப் படைகளினால் எல்.ரீ.ரீ.ஈ இராணுவ ரீதியாக தோற்கடிக்கப் பட்டதுடன் இந்த கொலைகள் யாவும் சடுதியான ஒரு முடிவுக்கு வந்தன. புலிகளின் தலைமை அழிக்கப்பட்டது. சரணடைந்த 12,000 மேற்பட்ட எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு ஒரு புனர்வாழ்வு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டதின் பின்னர் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டனர். புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பு கட்டுக்குலையாமல் இருந்தது, ஆனால் ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ வீழ்ச்சி அடைந்ததின் காரணமாக அது தீவிர வலுவற்றதாக இருந்தது. புலம்பெயர் புலிகள் வெளிநாட்டில் செயற்பாட்டில் இருந்தபோதும், ஸ்ரீலங்கா மண்ணில் வன்முறையில் ஈடுபடும் அவர்களின் தகுதி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதால், அவர்களால் ஸ்ரீலங்காவுக்கு பெரிதான சேதம் எதனையும் ஏற்படுத்த முடியவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
பொதுவாக ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசிக்கும் தமிழ் மக்கள் மற்றும் குறிப்பாக அவர்களின் அரசியல் கட்சிகள் இந்த விவகாரங்களின் நிலை மாற்றத்தினால் பிரதான பயனாளிகளாக மாTNA MPறின. ஸ்ரீலங்கா தமிழ் மக்களின் பிரதான அரசியல் கூட்டணியான - தமிழ் தேசியக் கூட்டமைப்பு - கடந்த எட்டு வருடங்களில் எதுவித அரசியல் கட்டுப்பாடு மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின் கீழ் பாதிக்கப்பட்டிருந்த அடிமைத்தனம் எதுவுமின்றி சுதந்திரமாக எழுச்சி பெற்றது. மாறுபட்ட சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை கண்டுபிடித்துக் கொண்ட ரி.என்.ஏ அதன் அரசியல் நடவடிக்கையை சுதந்திரமாக மேற்கொண்டு வந்தது. ரி.என்.ஏ யின் பிரதான கட்சியான இலங்கை தமிழ் அரசுக்கட்சி மிகவும் துணிவாக தன்னை வலியுறுத்திக் கொண்டு தமிழ் அரசியலில் மிகவும் கடுமையான பங்கினை வகிக்கத் தொடங்கியது. ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழர்களைப் பிரதிநிதிப்படுத்தும் ஆதிக்கமுள்ள கட்சியாக தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்ட அது, பாராளுமன்றம் மற்றும் மாகாணசபை தேர்தல்களில் நல்ல பலன்களைப் பெற்றுக் கொண்டது. 2010 மற்றும் 2015 பாராளுமன்றத் தோதல்களில் ரி.என்.ஏ முறையே 14 மற்றும் 16 ஆசனங்களை வெற்றி கொண்டது. ரி.என்.ஏ 2012 கிழக்கு மாகாணசபை தேர்தலில் 11 ஆசனங்களையும் மற்றும் 2013 வட மாகாணசபை தோதலில் 30 ஆசனங்களையும் வென்றது.
தமிழ் அரசியல்வாதிகள் உண்மையை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட, யதார்த்தத்தில் ஆயுதப் படைகளினால் எல்.ரீ.ரீ.ஈ க்கு ஏற்பட்ட தோல்வி மற்றும் அழிவு என்பனவே, ஜனநாயக ஸ்ரீலங்கா தமிழ் அரசியல் கோளத்தின் மறுமலர்ச்சிக்கான காரணம். புலிகளின் ஆட்சியின் கீழ் பல வருடங்களாக இருந்த தமிழ் தலைவர்கள் அச்சமின்றி ஜனநாயக அரசியலில் ஈடுபட இயலுமாக இருந்தது. ஓர்விலியன் சொல்வழக்கான “பெரிய அண்ணன் கவனிக்கிறார்” என்பதை ஸ்ரீலங்கா அரசியலில் “தம்பி” இனிமேல் கவனிக்கமாட்டார் என்றாகிவிட்டது. ஜனநாயக தமிழ் அரசியல்வாதிகளுக்கு எல்.ரீ.ரீ.ஈ யின் கரங்களால் மரணத்தை எதிர்நோக்கியிருந்த ஆபத்து மறைய ஆரம்பித்தது. தமிழ் அரசியல்வாதிகள் புலிகளினால் படுகொலை செய்யப்படுவது நினைவிலிருந்து மறையத் தொடங்கியது.
கொலை செய்வதற்கு நிச்சயமான சதி
ஆனால் நிலமை கடந்தமாதம் ஒரு கடுமையான திருப்பத்துக்கு இலக்கானது. ஒப்பிடும்போது பல வருடங்களாக நிலவிய அமைதியும் பாதுகாப்பானதுமான சூழல் மறைந்து மிதவாத தமிழ் அரசியல் தலைவர்கள் எல்.ரீ.ரீ.ஈயினால் கொல்லப்படும் நிலை மீண்டும் எழுந்துள்ளது. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்.ரீ.ரீ.ஈயினால் கொலை செய்யப்படும் சாத்தியம் மீண்டும் ஒருமுறை அதிர்ச்சி தரும் உண்மையாக மாறியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மற்றும் சட்டத்தரணியுமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனை பி - 402 என அழைக்கப்படும் சொர்ணப்பற்று - தாழையடி வீதியில் ஒரு கண்ணிவெடியை வெடிக்க வைத்து கொலை செய்வதற்கு நிச்சயிக்கப்பட்ட சதி முயற்சி காவல்துறையின் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால்(ரி.ஐ.டி) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சுமந்திரன் தனது மனைவியுடன் சேர்ந்து அந்த வீதியால் அன்றைய தினம் (ஜனவரி 13) மருதங்கேணியில் நடைபெறவிருந்த ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். எனினும் சில தனிப்பட்ட காரணங்களினால் அவர் அந்தப் பயணத்தை 12ந் திகதியே இரத்துச் செய்துவிட்டார். இந்த எதிர்பாரத இரத்துச் செய்தமை கொலையாளிகளின் பயங்கரமான சதித் திட்டத்தை அவர்கள் விருப்பத்துக்கு மாறாக முறியடித்து விட்டது.
நான்கு சந்தேக நபர்கள் அனைவருமே முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் இது தொடர்பாக sumanthiran4கைது செய்யப்பட்டு ஜனவரி 20ல் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்கள். கண்ணி வெடிகள், வெடிபொருட்கள் மற்றும் கேரள கஞ்சா பொதிகள்(மர்ஜூவானா) என்பன அவர்கள் வசம் இருந்து கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்தார்கள். ஒரு மிக முக்கியமான அரசியல் பிரமுகரைக் கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டியதாகவும் அங்கு சொல்லப்பட்டது. சுமந்திரனது பெயர் அங்கு குறிப்பிடப் படவில்லை. நான்கு சந்தேக நபர்களும் போதைப் பொருள், மற்றும் ஆபத்தான வெடிபொருட்கள் என்பனவற்றை வைத்திருந்தமை, மற்றும் ஒரு அரசியல் வி.ஐ.பி இனைக் கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டியமை போன்றதாகச் சொல்லப்படும் குற்றங்களுக்காக தனித்தனியாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள். மூன்று “பி” அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. எந்தவொரு சந்தேக நபரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின (பி.ரி.ஏ); கீழ் குற்றம் சாட்டப்படவில்லை. நான்கு பேரும் ஜனவரி 30ந் திகதிவரை பிஸ்கால் காவலில் வைக்கப்பட்டார்கள். அவர்கள் அனுராதபுர சிறைச்சாலையில் அடைக்கப் பட்டார்கள். சுமந்திரனை கொலை செய்யவிருந்ததாக சதித் திட்டம் தீட்டப்பட்டது பற்றி இந்தச் சமயத்தில் அறிவிக்கப் படவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டது பற்றிய விரிவான விபரங்கள் பிரத்தியேகமாக ஜனவரி 28, 2017 டெய்லி மிரர் பத்திரிகையில் வெளிவரும் இந்தப் பத்தி மூலம் ஸ்ரீலங்காவில் வெளியானது. இந்தியாவில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழான த ஹிந்துவும் அதன் கொழும்பு நிருபரினால் இந்தக் கதை பற்றிய செய்தியை வெளியிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து ஏனைய பத்திரிகைகளும் இந்தக் கதையை எடுத்து பிரசுரித்திருந்தன. ஆகவே கிளிநொச்சி நீதிமன்றில், ஜனவரி 30ல் இந்த வழக்கு திரும்பவும் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்தச் சதி முயற்சியில் இலக்க வைக்கப்பட்ட நபர் சுமந்திரன் என்பது எல்லோருக்கும் தெரிய வந்தது.
மூன்று வெவ்வேறு அறிக்கைகள்
இருந்தும் காவல்துறை அதன் முந்தைய நிலைப்பாட்டையே ஜனவரி 30இலும்; ஒரேயொரு மாற்றத்துடன் பின்பற்றியது. விஜயன் என்கிற மன்னாரைச் சேர்ந்த மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப் பட்டிருந்தார். இப்போது அங்கு ஐந்து சந்தேக நபர்கள் உள்ளனர். சாட்டப் பட்டிருக்கும் குற்றங்கள் இன்னமும் அதே குற்றங்களாகவே இருந்தன. போதைப் பொருள் வைத்திருந்தமை, ஆபத்தான வெடி பொருட்களை வைத்திருந்தமை, மற்றும் ஒரு அரசியல் வி.ஐ.பி யினைக் கொல்ல சதி மேற்கொண்டது என் மூன்று வெவ்வேறு குற்ற அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. சுமந்திரனது பெயர் வெளிப்படையாகத் தெரிவிக்கப் படவில்லை. மறைக்கப்பட்ட பதிவுகளை கண்டு பிடிப்பதற்கும் மற்றும் ஆய்வுகளுக்காக இந்த ஐந்து சந்தேக நபர்களினதும் கையடக்கத் தொலைபேசிகளை மொரட்டுவ பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவதற்கு உத்தரவு வழங்கும்படி காவல்துறையினர் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தனர். சந்தேக நபர்கள் சார்பில் இரண்டு சட்டத்தரணிகள் ஆஜரானதுடன் அவர்களை அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாண சிறைக்கு மாற்றும்படி வேண்டுகோள் விடுத்தார்கள். ஐந்து பேரின் சிறைக்காவலும் மேலும் பெப்ரவரி 13ந்திகவரை நீட்டிக்கப்பட்டது.
சந்தேக நபர்களை சிறையிலடைத்த பின்னர் கிளிநொச்சி நீதவானும் மற்றும் மாவட்ட நீதிபதியுமான ஏ.ஏ. அனந்தராஜா காவல்துறையினரை தனது அறைக்கு வருமாறு கட்டளையிட்டார். நீதிபதி ரி.ஐ.டி அதிகாரிகளிடம் இலக்கு வைக்கப்பட்ட வி.ஐ.பி யின் பெயரைக் கூறும்படி கேட்டார். அது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் என அவரிடம் சொல்லப்பட்டது. அதன் பின்னர் நீதிபதி திரு. ஆனந்தராஜா அவர்களிடம் வேறு அரசியல் வி.ஐ.பிக்கள் யாராவது இது தொடர்பாக இலக்கு வைக்கப்பட்டுள்ளார்களா என விசாரித்தார். அதற்கு ரி.ஐ.டி யினர் சுமந்திரன் பா.உ மட்டுமே இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். அப்போது நீதிபதி காவல்துறை ஏன் சுமந்திரனின் பெயரை அறிக்கைகளில் ஏன் குறிப்பிடவில்லை என்று கேட்டார். அதற்கு அவர்கள் சந்தேக நபர்களின் கையடக்கத் தொலைபேசிகளை மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பரிசோதனை செய்தபின்னர் தாங்கள் அதைச் செய்யவிருந்ததாக பதிலளித்தார்கள். அதன் பின்னர் திரு. ஆனந்தராஜா மூன்று வெவ்வேறு அறிக்கைகளையும் ஒரு அறிக்கையாக இணைத்து அடுத்த நாள் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கினார். அவர் மேலும் காவல்துறையினரிடம் கொலைச் சதித்திட்டத்தின் இலக்கான சுமந்திரனின் பெயரையும் அறிக்கையில் சேர்க்குமாறு அறிவுறுத்தினார்.
அது காவல்துறையினரால் ஒழுங்காக பின்பற்றப்பட்டு ஒரு புதிய அறிக்கையான பி 85ஃ2017 இனை ஜனவரி 31ல் நீதிமன்றில் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கை கிளிநொச்சி நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதும், ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர் திரு. எம்.ஏ சுமந்திரன், ஜனவரி 13,2017ல் சந்தேகத்துக்குரிய கொலை முயற்சி திட்டத்தில் இலக்காக குறி வைக்கப்பட்டவர் என்பது விசேடமாக தெரிய வந்தது. குணசேகரலிங்கம் ராஜ்மதன் - திருகோணமலை, லூயிஸ் மரியாம்பிள்ளை அஜந்தன் - மருதங்கேணி, காராளசிங்கம் குலேந்திரன் - கிளிநொச்சி, வேலாயுதம் விஜயன் - மன்னார் மற்றும் முருகையா தவேந்திரன் - கிளிநொச்சி ஆகிய ஐந்து பேர்களே அந்த ஐந்து சந்தேக நபர்களாவர். அடுத்த விசாரணை பெப்ரவரி 13, 2017ல் நடைபெறும்.
இந்த வகையான குற்றம் சுமத்தப்படும் சந்தேக நபர்களை வழக்கமான நடைமுறையாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் (பி.ரி.ஏ) கீழ்தான் குற்றம் சாட்டப்பட்டு மேலதிக விசாரணை மேற்கொள்வது வழக்கம் எனினும் இந்த விடயத்தில் இந்த நடைமுறை பின்பற்றப் படவில்லை. இது முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தப் பிtyரச்சினை பற்றி கேள்வி எழுப்புவதற்கு வழியேற்படுத்தியுள்ளது. ஒரு ஊடக சந்திப்பில் பேராசிரியர். பீரிஸ் அரசாங்கம் இந்த சந்தேக நபர்களை ஏன் பயங்கரவாத தடைச் சட்த்தின் கீழ் குற்றம் சாட்டப்படவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார். அதிகாரபூர்வ வட்டாரங்களின் தகவல்களின்படி, அரசாங்கம் ஏற்கனவே கொடிய பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு அதை மிகவும் ஏற்றுக் கொள்ளத்தக்கதான பயங்கரவாத சட்டப்பிரிவின் கீழ் மாற்றீடு செய்வதற்கான ஒரு கொள்கை முடிவை எடுத்துள்ளது. அது மாற்றப்படும்வரை ஒருவரையும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டுவதில்லை என அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன் காரணமாக இந்த வழக்கு தொடர்பாக பி.ரி.ஏ யினைப் பயன்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை, பி.ரி.ஏ யினைப் பயன்படுத்தாமலே இந்த வழக்கில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும். கடந்த காலங்களில் திரு. சுமந்திரன் தானே பி.ரி.ஏ பற்றி நெருக்கடி கொடுத்து வந்திருப்பதால், அரசாங்கத்தின் இந்த முடிவு பற்றி, ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர் இந்த வழக்கில் தானே இலக்காக இருந்தபோதிலும், உண்மையை விட்டு விலகாமல் ஒரு பதிலை வழங்கவேண்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.
கவனம் மற்றும் பாதுகாப்பு
பி.ரி.ஏ யினை செயலாக்குவதில்லை என் முடிவெடுத்திருந்த போதிலும் அதன் கருத்து அரசாங்கம் குறிப்பாக சுமந்திரன் மற்றும் பொதுவாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனம் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றில் அக்கறை எடுக்கவில்லை என்பதல்ல. யுத்தத்துக்கு பின்னான வருடங்களில் ஸ்ரீலங்கா மண்ணில் எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர் பெறுவதற்கான பயனற்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை நாம் கண்டிருக்கிறோம். இந்த முயற்சிகள் யாவும் புலம் பெயர்ந்தவாகளிடையே உள்ள எல்.ரீ.ரீ.ஈ மற்றும் எல்.ரீ.ரீ.ஈ சார்பான சக்திகளின் பலமான பின்துணையுடனேயே மேற்கொள்ளப் பட்டன. அதிர்ஷ்டவசமாக இந்த முயற்சிகள் யாவும் விழிப்புடன் இருந்த காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினரால் சரியான நேரத்தில் கண்டு பிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டன. இந்த சந்தர்ப்பத்திலும் இதுதான் விஷயமாக இருந்தது. சுமந்திரனை கொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முயற்சிக்கும் மற்றும் முந்தைய முயற்சிகளுக்கும் இடையில் உள்ள முக்கியமான வித்தியாசமாகத் தோன்றுவது என்னவென்றால் உண்மையில் முதல் தடவையாக ஒரு குறிப்பிட்ட நபரை கொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சொர்ணப்பற்று - தாழையடி வீதியில் வைத்து முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ போராளிகள் சுமந்திரனை கொலை செய்வதற்கு தீட்டிய சதித் திட்டத்திற்கு வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ பின்துணை வழங்கியுள்ளது என்பது தெளிவற்றதோ அல்லது சந்தேகத்துக்கு இடமானதோ அல்ல.
தமிழ் சமூகத்தில் உள்ள தீவிரவாதிகளின் கோபத்துக்கு சுமந்திரன் ஆளாகியுள்ளார். இது குறிப்பாக உலகளாவிய தமிழ் புலம் பெயர்ந்தவர்களிடையே உள்ள புலிகள் மற்றும் புலிகள் சார்பான சக்திகளிடையேயும் உள்ளது. எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டில் உள்ள மற்றும் அவர்களுக்கு பக்கச் சார்பான ஊடக அடைப்புகளால் அவர் தொடர்ச்சியாக தாக்கப்பட்டும் மற்றும் இழிவுபடுத்தப்பட்டும் வருகிறார். 2015ன் ஆரம்பங்களில் ரி.என்.ஏ தலைவர் சம்பந்தன் மற்றும் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக வெளிநாட்டு தமிழாகள் மத்தியில் திட்டமிடப்பட்ட பிரச்சாரம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அவர்களது கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. அந்த நேரத்தில் அந்த தாக்குதல்கள் பற்றி கவனமெடுத்து அந்த விபரங்களை டெய்லி மிரருக்காக எழுதப்பட்ட இந்த பத்தியில் விரிவாக எழுதியிருந்தேன்.
“தமிழ் தீவிரவாதிகள் சம்பந்தன் மற்றும் சுமந்திரனை இலக்கு வைத்துள்ளார்கள்” என்கிற தலைப்பில் 28 பெப்ரவரி 2015ல் வெளியான டெய்லி மிரர் பத்திரிகையில் பிரசுரமான கட்டுரையில் சுமந்திரனது பாத்திரத்தையும் தமிழ் தீவிரவாதிகள் அவரை ஏன் தாக்குகிறார்கள் என்பதும் விரிவாக விளக்கப்பட்டிருந்தது, அதில் இருந்து பெறப்பட்ட சில எடுத்தாள்கைகள் கீழே தரப்பட்டு உள்ளன: - “இந்த எதிர்ப்பான பிரிவினர் எப்போதும் குற்றம் கண்டுபிடித்து ரி.என்.ஏ யினை குறிப்பாக அதன் தலைவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக காத்திருப்பவர்கள். விசேடமாக சுமந்திரன் தனிமைப் படுத்தப்படுகிறார் ஏனென்றால் அவர் ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினாகளிடையே மிகவும் இலகுவில் மற்றவர்களுடன் உறவாடுவதில் வல்லவர். தேசிய அளவில் தென்பகுதி அரசியல்வாதிகளிடையேயும் மற்றும் சர்வதேச அளவில் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளால் பரந்த அளவில் ஏற்றுக்கொளளப் பட்டவர். சுமந்திரன் எண்பதுகளில் உள்ள சம்பந்தனுக்கு மிகவும் நம்பிக்கையானவரும் திறமையான துணைத் தலைவரும் ஆவார். சமீப காலங்களில், தமிழ் அரசியல் விவகாரங்களில் சுமந்திரன் ஒரு ஆக்கபூர்வமான பங்களிப்பை ஆற்றி வருகிறார். சிறந்த இராஜதந்திரமும் கூடவே பகிரங்க வாதிடும் திறமையும் கொண்ட கலவையான ரி.என்.ஏ தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அவரது சமூகத்துக்கு சிறப்பான சேவையை ஆற்றி வருகிறார். பல சந்தர்ப்பங்களில் சம்பந்தனை பலவீனப் படுத்;தவேண்டும் என நினைப்பவர்கள் அதற்கான இலக்காக சுமந்திரனைப் பயன்படுத்துவார்கள். இதில் உள்ள திட்டம் என்னவென்றால் அரசியல் ரீதியாக சம்பந்தனை முடக்குவதற்கு சுமந்திரனை குறை மதிப்பீடு செய்வதுதான்.
சுமந்திரனது அரசியல் பங்களிப்பு
சுமந்திரனது அரசியல் பங்களிப்பு பலராலும் பாராட்டப்பட்டு புகழப்படுகிறது ஆனால் அது ரி.என்.ஏ க்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் உள்ள சில குறிப்பிட்ட வட்டாரங்களுக்கு ஆத்திரத்தையும் உண்டாக்குகிறது. இன்றைய ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர்களில், சுமந்திரன் ஒருவர் மட்டும்தான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு, எல்.ரீ.ரீ.ஈ உட்பட எந்தவொரு போராளி குழுவினருடனும் எதுவிதமான தொடர்புகளையும் வைத்துக் கொள்ளாதவர். யாழ்ப்பாணம், இணுவிலில் உள்ள மக்லியோட் மருத்துவ மனையில் பிறந்திருந்தாலும் கொழும்பில் வளர்ந்து றோயல் கல்லூரியில் படித்தவர். ரி.என்.ஏயில் இணையும்படி சம்பந்தன் அழைப்பு விடுவதற்கு முன்பு சுமந்திரன் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்ததுடன், கொழும்பில் சட்டத் தொழில் நடத்தி வந்தார். அவர் சம்பந்தனால் 2010ல் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப் பட்டார்”.
நான் இந்தக் கட்டுரையை 2015 ஆரம்பத்தில் எழுதியபோது சுமந்திரன் ஒரு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். எனினும் 2015 ஆகஸ்ட் தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். புலம்பெயர் புலிகள் 2015 தேர்தலில் சுமந்திரனை தோற்கடிப்பதற்காக பெருந்தொகையான பணத்தை செலவிட்டார்கள். சுமந்திரன் கணிசமானளவு வாக்குகளால் வெற்றியீட்டினார். ஆனால் வெளிநாட்டு புலிகளால் ஆதரிக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும்’ ஈ.பி.ஆர்.எல்.எப் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் மோசமான தோல்வியடைந்தனர். அதன் பின்னர் புலிகள் ஒன்றிணைந்து சுமந்திரனை யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் மற்றும் மேற்கத்தைய நாடுகளான அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் சுவிற்ஸர்லாந்து போன்ற இடங்களில் வைத்து பகிரங்கமாக இழிவுபடுத்தி அவரை தூஷிப்பதை ஒரு பிரச்சாரமாக நடத்தி வருகின்றனர். அதன் கீழ் உள்ள திட்டம் சுமந்திரனை அரசியலை விட்டு வெளியேற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பது. அதுவும் கூட நடக்கவில்லை.
இனங்களுக்கு இடையில் உள்ள இடைவெளிக்கு பாலம் அமைப்பதிலும் மற்றும் ஜனநாயக வழியில் தமிழர் உரிமைகளை மீளவும் உறுதிப்படுத்தும் முயற்சியிலும் சுமந்திரன் மிகவும் சாத்தியமான ஒரு பங்களிப்பை ஆற்றி வருகிறார். சமீப காலங்களில் அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளில் அரசியல் நிர்ணய சபையின் வழிகாட்டுக் குழுவில் ரி.என்.ஏ அங்கத்தவர் என்கிற தனது பதவி மூலமாகவும் மற்றும் அரசியல் நிர்ணய சபையின் காரியாலயத்தின் நிருவாகக் குழுவில் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்னவுடன் இணைத் தலைவராகவும் இருந்து ஆக்கபூர்வமான பங்களிப்புகளை வழங்கி வருகிறார். ஒரு முற்போக்கான அரசியலமைப்பை சட்டமாக்குவது ஒரு முக்கியமான சாதனை என பரவலாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது, அது உண்மையான நீதி,சமத்துவம் மற்றும் இன நல்லிணக்கம் என்பனவற்றை வரவேற்கும். ஒரு உறுதியான உண்மை என்னவென்றால் வெளிநாட்டிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ சக்திகள் மற்றும் உள்நாட்டில் புலிகளுக்கு சார்பான சக்திகளும் சுமந்திரன்மீது தீவிர வெறுப்புக் கொண்டுள்ளார்கள். மேலும் குழப்பமூட்டும் காரணம் என்னவென்றால் ஸ்ரீலங்காவிலும் மற்றும் வெளிநாட்டிலுமுள்ள எல்.ரீ.ரீ.ஈ சார்பான மூலகங்களால் சுமந்திரன் தீவிரமாக தூற்றப்பட்டும் இழிவு படுத்தப்பட்டும் வருகிறார். துரோகி பட்டம் சூட்டுவது மற்றும் ஒருவரின் குணாதிசயத்தை கொலை செய்வதும் ஒரு நபரைக் கொல்வதற்கு முன்பும் பின்பும் எல்.ரீ.ரீ.ஈ மேற்கொள்ளும் நடைமுறையாகும். இந்தச செயல்வகை கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் படுகொலையில் அப்பட்டமான தெளிவாக உள்ளது.
துரோகத்தனமான நிகழ்வுகள்
இந்த துரோகத்தனம் மற்றும் வெளியேற்றும் நடவடிக்கை என்பனவற்றைபnediyavan்பற்றி விரிவாக “தமிழ் தேசியவாத அரசியலில் துரோகத்தனத்தின் தொடர் நிகழ்வுகள்” என்கிற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை ஒன்று 14 மார்ச் 2015 டெய்லி மிரர் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. அதிலிருந்து ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது:“எந்த ஒரு தமிழனும் சமரச அரசியலை முன்மொழிந்தால் அல்லது அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பதற்கு ஆதரவு தெரிவித்தால் அவரைத் தாக்குவதற்காக அவரது தலைக்கு மேல் துரோகத்தனத்தின் வாள் ஒன்று மயிரிழையில் தொங்கிக் கொண்டிருக்கும். தற்போதைய நிலமையில் ஒப்பீட்டளவில் மிதவாத தலைவர்களான ஆர்.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய படங்கள் மற்றும் கொடும்பாவிகள் என்பன எரியூட்டப் பட்டுள்ளன. ரி.என்.ஏ தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் எல்.ரீ.ரீ,ஈ சக்திகளின் விருப்பத்துக்குரிய இலக்கு. அவர் துரோகி என பரவலாக இழிவு படுத்தப்பட்டு வருகிறார். முன்பு குறிப்பிட்டதைப் போல கடந்த கால நடைமுறை என்னவென்றால் புலிகள் ஒருவரை அழிக்க நினைத்தால் அவரை ஒரு துரோகி என அரக்கத்தனமாக சித்தரிப்பது பின்னர் அவரைப் பூண்டோடு அழிப்பதுதான் நடைமுறை.
அதிர்ஷ்டவசமாக புலிகளுக்கும் அவர்களது சக பயணிகளுக்கும் இனிமேல் இது ஒரு தெரிவாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால் ஸ்ரீலங்காவில் புலிகளை இராணுவ ரீதியாக அழித்ததின் மூலமாக மகிந்த ராஜபக்ஸ தமிழர்களுக்கு மிகச் சிறந்த பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். பிரபாகரனுக்கு பின்னான சகாப்தத்தில், இருக்கக்கூடிய செயல்முறை படுகொலை அல்ல, ஆனால் அவர்களின் குணாதிசயங்களை படுகொலை செய்வது. அந்த திட்டம் இலக்கு வைத்திருப்பவரை ஒரு துரோகி எனச் சித்தரித்து அவரைக் கொல்லாமல் கொல்வது ஆகும். உடல் ரீதியாக கொல்ல இயலவில்லை அதனால் இரத்தவெறி பிடித்த பேய்கள், உருவப்படங்கள் மற்றும் கொடும்பாவிகளை தகனம் செய்து தங்கள் வேட்கையை திருப்தி செய்கின்றன. எனினும் ஒரு அழிவுத் திறனை நோக்கிச் செல்லும் இந்தப் போக்கினை தடுக்காமல் விட்டாலோ அல்லது இப்போதே அடக்கி வைக்காமல் விட்டாலோ இதன் மூலம் பெரிய ஆபத்து காத்திருக்கிறது.”
மேலே குறிப்பிட்ட வரிகளை கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பே நான் எழுதியிருந்தேன், வெளிநாட்டு புலிகள் அல்லது அவர்களது கூட்டாளிகள், யுத்தத்துக்கு பின்னான ஸ்ரீலங்காவின் தற்போதைய காலகட்டத்தில் கொலைகளை நாடாமலோ அல்லது படுகொலைகளை ஊக்குவிக்காமலோ இருக்க மாட்டார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. இது எதனாலென்றால், யாருக்காவது; சிறிதளவு பகுத்தறிவு மற்றும் குறைந்த பட்சம் கடுகளவாவது ஸ்ரீலங்காவில் உள்ள தமிழ் மக்களின் நலனில் அக்கறை இருக்குமாயின் வன்முறைகளின் மீள் எழுச்சி அல்லது வெடிப்பு சமுதாயத்தின் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் ஒரு தற்கொலை முயற்சி என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள். ஆனால் எல்.ரீ.ரீ.ஈ மற்றும் அதன் சக பயணிகள் பகுத்தறிவற்ற மற்றும் தமிழ் மக்களின் நலனில் முழுதாக அக்கறையற்ற ஒருவித வழியில் வழிநடத்தப் பட்டுள்ளார்கள். இந்த சம்பவங்களின் போக்குத்தான் முள்ளிவாய்க்கால் மற்றும் நந்திக்கடல் பகுதிகளில் மனிதாபிமான பேரழிவுக்கு வழிவகுத்தன என்பதை இது விளக்குகிறது.
எல்லாம் முற்றாக மாற்றப்பட்டது
இந்தப் பின்னணியில்தான் நான் மார்ச் 2015ல், சுமந்திரனுக்கு எதிராக உருவப்படம் மற்றும் கொடும்பாவி எரிக்கும் பிரச்சாரம் ஆபத்தான திருப்பத்தை எடுக்கும் என்றும் மற்றும் அதைக் கவனிக்காமல் விட்டாலnோ அல்லது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராவிட்டாலோ, அது உயிராபத்து விளைவிக்கக்கூடிய அதிக அழிவுத்திறனை அடையும் என்று எச்சரிக்கை செய்திருந்தேன். அப்போது வெளியிட்ட அச்சம் இப்போது உண்மையாக மாறியுள்ளது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் முதல்தடவையாக அதிகாரிகள், ஒரு ஜனநாயக பாராளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்வதற்கு புலி மூலகங்கள் மேற்கொண்ட சதித்திட்டத்தை கண்டு பிடித்துள்ளார்கள். சுமந்திரன் மட்டுமல்ல ஆனால் நல்லிணக்கம் மற்றும் சமாதானமான சக வாழ்வு என்பனவற்றுக்கு வருவதற்கு பாடுபடும் எல்லா ஜனநாயக தமிழ் அரசியல்வாதிகளும் இப்போது சாத்தியமான ஒரு ஆபத்தை எதிர்கொள்கிறார்கள். இது அரசியல் சூழ்நிலையை முற்றாக உருமாற்றியுள்ளது. ஈஸ்ட் தனது “ஈஸ்ட்டர் 1916” இல் எழுதியுள்ளது போல”எல்லாம் மாறிவிட்டது, முற்றாக மாறிவிட்டது”.
சிறிசேன - விக்கிரமசிங்க அரசாங்கம் மாறிவிட்ட இந்தக் காட்சியைப் பற்றி கவனிக்காமல் இல்லை. ஜனாதிபதி தலைமையேற்ற தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டம் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கருணசேன ஹெட்டியாராய்ச்சி தலைமைதாங்கிய புலனாய்வு சேவைகள் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் என்பனவற்றில் மேற்கொள்ளப்பட்ட நீடித்த விவாதங்களின் பின்னர், ஒரு புதிய பாதுகாப்பு ஏற்பாடு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மற்றும் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினரான எம்ஏ.சுமந்திரன் ஆகியோரின் பாதுகாப்புக்கு காவல்துறையின் விசேட செயலணி படைகள் (எஸ்.ரி.எப்) வழங்கப்படும், அதற்கு மேலதிகமாக ரி.என்.ஏயின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை அமைச்சர்கள் ஆகியோருக்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்படும். இது சமீப காலங்களாக புலம்பெயர் புலிகளை அடிவருடல் செய்வதாக குற்றம் சாட்டப்படும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் கூட செயற்படுத்தப்படும்.
அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு திட்டம் சம்பந்தன் மற்றும் சுமந்திரனுக்கு இந்த வார ஆரம்பத்திலேயே நடைமுறைப் படுத்தப்பட்டு விட்டது. ஜனவரி மாத நடுப்பகுதியில் மரணத்துக்கு குறி வைக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒரு கொலை வழக்கில் பிரதிவாதிகள் தரப்பில் வாதாடுவதற்கும் மற்றும் சில அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகவும் வார நடுப்பகுதியில் வடக்கு குடாநாட்டுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்த பலரும் கொலைச் சதி முயற்சி கண்டுபிடிக்கப் பட்டதின் பின்னர் இவ்வளவு விரைவாக சுமந்திரன் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்வார் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவரது ஆதரவாளர்கள் பலரும் பாராளுமன்ற உறுப்பினரை யாழ்ப்பாணத்தில் கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்ததுடன் அவரது பாதுகாப்பு குறித்து கவலை வெளியிட்டார்கள். யாழ்ப்பாண உயர் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நீதிமன்றில் சுமந்திரனிடம், அவரைக் கொலை செய்வதற்கான திட்டம் அம்பலமான பிறகு, தான் இவ்வளவு விரைவில் சுமந்திரனை யாழ்ப்பாணத்தில் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தார். கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள இளம் மாணவாகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியது தனது கடமை என சுமந்திரன் பதிலளித்தார். நீதிமன்ற சுற்றாடலிலும் அதைச் சுற்றியுள்ள சூழலிலும் சுமந்திரனுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கும்படி நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தல் வழங்கினார்.
வெற்றி, மாறன் மற்றும் அமுதன்
ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதும் மற்றும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப் பட்டதையும் இட்டு நிச்சயமாக திருப்தி அடைந்த போதிலும், இதில் மீந்திருக்கும் காரணம் என்னவென்றால், முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ போராளிகள் வெளிநாட்டில் உள்ள புலிகளின் முகவர்களினால் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதுதான்.கடந்த வார பத்தியில் குறிப்பிட்டதின்படி ரி.ஐ.டி அதிகாரிகள், அவுஸ்திரேலியாவில் உள்ள வெற்றி மற்றும் பிரான்சில் உள்ள மாறன் மற்றும் மலேசியாவில் உள்ள அமுதன் ஆகிய மூவரும் ஸ்ரீலங்காவில் உள்ள ஐந்து சந்தேக நபர்களுக்கும் நிதியுதவி மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க ஒத்துழைப்பு வழங்குவது என்பனவற்றுக்கு திட்டம் தீட்டியுள்ளார்கள் என்று கண்டுபிடித்துள்ளார்கள். ஸ்ரீலங்கா சட்ட அமலாக்க அதிகாரிகள் மேற்குறிப்பிட்ட நாடுகளில் உள்ள அவர்களது சக உத்தியோகத்தர்களுக்க எச்சரிக்கை செய்துள்ளார்கள். பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியாவில் விசாரணைகள் ஆரம்பமாகி நடந்து வருகின்றன ஆனால் மலேசிய பாதுகாப்பு வட்டாரங்கள் அமுதன் இப்போது அந்த நாட்டில் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள். இதற்கிடையில் வட பகுதி ஸ்ரீலங்காவாசிகளுடன் அமுதன் தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு பயன்படுத்திய ‘சிம் அட்டை’ பிரேசிலை சேர்ந்ததாக உள்ளதாம்.
அமுதன் மாறன் மற்றும் வெற்றி ஆகியோர் ஆட்டுவித்த கைப்பாவைகளாக ஸ்ரீலங்காவில் கைது செய்யப்பட்ட இந்த முன்னாள் போராளிகள் ஐவரும் இருந்துள்ளார்கள், ஆனால் இந்த மூவரும் கூட ஒரு பெரிய புலிகள் வலையமைப்பின் ஒரு அங்கம். ஸ்ரீலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் உறுதியாக நம்புவது இந்த வலையமைப்பு நெடியவன் என அழைக்கப்படும் புலிச் செயற்பாட்டாளரின் தலைமையின் கீழ் உள்ளது என்று, அவரது உண்மையான பெயர் பேரின்பநாயகம் சிவபnorway ltteரன் ஆகும். 40 வயதான பேரின்பநாயகம் சிவபரன், யாழ்ப்பாணம், வலிகாமம் மேற்கிலுள்ள வட்டுக்கோட்டை, சங்கரத்தையை சேர்ந்தவர். அவரது இயக்கப்பெயர் உயர்ந்த மனிதர் எனப் பொருள்படும் நெடியவன் ஆகும். நெடியவன் தனது 18ம் வயதில் 1994ல் எல்.ரீ.ரீ.ஈ யில் இணைந்தார். அவர் எல்.ரீ.ரீ.ஈ யினால் மேற்படிப்புக்காக ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அரசியல் விஞ்ஞ}னம் படித்தார் ஆனால் சிவபரன் மாஸ்கோவில் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தெரிகிறது. சுவராஸ்யமாக, ரஷ்யாவில் நெடியவனின் படிப்புக்கான செலவு கேபி என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனினால் கையாளப்பட்டது, இந்த இளைஞனில் கேபி தனிப்பட்ட ஆர்வம் காட்டினார். கேபி, வெளிநாட்டு நிருவாகம், நிதி சேகரிப்பு மற்றும் கொள்வனவு என்பனவற்றுக்கு 2002க்கு முதல் பொறுப்பாக இருந்தார், நெடியவனுக்கு ஒழுங்காக பணம் அனுப்ப பிரான்சில் இருந்த ஒருவரைக் கண்டு பிடித்திருந்தார். ஓரவஞ்சனையாக இதே நெடியவன் பின்னாளில் கேபிக்கு எதிராக திரும்பினார்.
நெடியவன் எல்.ரீ.ரீ.ஈ யின் அரசியல் பிரிவில் செயலாற்றினார் மற்றும் முன்னாள் அரசியல் பிரிவு தலைவர் சுப்பையா பரமு தமிழ்செல்வனுடன் 2002 - 2003 காலப் பகுதியில் சில சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கு துணையாகச் சென்றார். பின்னர் அவர் கஸ்ட்ரோ எனப்படும் வீரகத்தி மணிவண்ணின் தலைமையின் கீழிருந்த எல்.ரீ.ரீ.ஈ யின் வெளிநாட்டு நிருவாகப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். நெடியவன் கஸ்ட்ரோவின் பொதுசனத் தொடர்பு பிரிவுக்கு பொறுப்பாக இருந்து, சமாதான நடவடிக்கை சமயத்தில் வன்னிக்கு வருகை தந்த அநேக வெளிநாட்டு செயற்பாட்டாளர்களடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். அப்போதுதான் நெடியவன் என்கிற சிவபரன் தனது வருங்கால மனைவியான சிவகௌரி சாந்தமோகனைச் சந்தித்தார். அவர் ஒரு நோர்வே பிரஜை. அவரது தந்தை , ரஞ்சன் லாலா என்கிற ஞ}னேந்திரமோகனின் சகோதரர். ஞ}னேந்திரமோகன் எல்.ரீ.ரீ.ஈயின் முன்னோடி உறப்பினர்களில் ஒருவரும் மற்றும் பிரபாரனின் நம்பிக்கைக்கும் விசுவாசத்துக்கும் பாத்திரமான ஒருவர். ரஞ்சன் லாலா யாழ்ப்பாணத்தில் ஒரு உந்துருளியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது இராணுவத்தால் சுடப்பட்டார்.
சிவபரன் மற்றும் சிவகௌரி
புலிகளின் ஆதரவாளர்களான பல திருமணம் செய்யாத பெண்கள், சமாதான நடவடிக்கை காலத்தில் வன்னிக்கு வருகை தந்தபோது, அவர்கள் புலிப் போராளிகளான இளம் தமிழ் ஆண்களுடன் பழகியபோது, மன்தன் தொடுத்த ஐந்துவித மலர்க்கணைகளால் தாக்குண்டு தாங்க முடியாத காதல் வயமாகினார்கள். சிவபரன் மற்றும் சிவகௌரியும் காதலில் விழுந்தார்கள். ரஞ்சன் லாலாவின்மீது மிகவும் பிரியமாக இருந்த பிரபாகரன் இவர்களின் இணைப்புக்கு ஆதரவாக இருந்தார். அவர்களின் திருமணத்தின் பின்னர் சிவபரன் 2006ல் நோர்வே சென்றார். இந்த வருடங்களில் எல்.ரீ.ரீ.ஈ பல செயற்பாட்டாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியது. எல்.ரீ.ரீ.ஈயின் பல்வேறு துறைகளுக்குச் சொந்தமான இந்த அங்கத்தவர்கள் இந்த புது நாடுகளில் புலிச் செயற்பாட்டாளர்களாக இயங்கி வரலானார்கள். இந்த அங்கத்தவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் மற்றும் புலனாய்வு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.
நெடியவன் நோர்வேயில் வதிவுரிமை எடுத்தார். சிவகௌரியுடனான திருமண பந்தம் எல்.ரீ.ரீ.ஈயில் நெடியவனின் செல்வாக்குக்கு இன்னும் வலிமை சேர்த்தது. வெளிநாட்டு செயற்பாட்டாளர்களுடன் தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கு கஸ்ட்ரோ நெடியவனைப் பயன்படுத்திக் கொண்டார். போர் விரிவடைந்ததும் வன்னிக்கும் மற்றும் வெளிநாட்டிலுள்ள புலிகளுக்கும் இடையே தொடர்பு கொள்வது கடினமாக இருந்தது. அதனால் கஸ்ட்ரோ தனது சார்பாக வெளிநாட்டு பிரதிநிதி ஒருவரை நியமித்தார். இந்த நபர் எல்.ரீ.ரீ.ஈ யின் வெளிநாட்டுக் கிளைகள் அனைத்துக்கும் ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தார். இந்த நபர் வேறுயாருமல்ல நெடியவன் என்கிற சிவரன்தான் அது.
ஒரு காலத்தில் எல்.ரீ.ரீ.ஈயின் வெளிநாட்டுக் கிளைகளுக்கு பொறுப்பாக இருந்த கேபி என்கிற செல்வராசா பத்மநாதன் திரும்பவும் எல்.ரீ.ரீ.ஈயில் இணைந்தபோது 2009 ஜனவரியில் சர்வதேச தொடர்புகளின் தலைவராக நியமிக்கப்பட்டார். பிரபாகரனின் அனுமதியுடன் கேபி வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈக்குள் தனது கட்டுப்பாட்டை மீளவும் நிறுவுவதற்கு இந்த பதவியை பயன்படுத்தினார். இது கஸ்ட்ரோவுக்கு சினமூட்டியது. கேபி உலகளாவிய புலித் தலைமை பொறுப்பை பெறுவதற்கு, கஸ்ட்ரோவின் அதிகாரத்துடன் நெடியவன் எதிர்ப்பைக் காட்டினார். இந்த எதிர்ப்பு மே 2009ல் எல்.ரீ.ரீ.ஈ தலைவர் அழிக்கப்பட்ட பின்னரும்கூட தொடர்ந்தது. தலைமைப் பதவியை தனது அனுபவ மூப்பைக் கணக்கிலெடுத்து கேபி அணிந்துகொண்ட அதேவேளை நெடியவன் மற்றும் அவரது விசுவாசிகள் அதை எதிர்க்கலானார்கள். 2009 ஆகஸ்ட்டில் மலேசியாவில் வைத்து கேபி கைது செய்யப்பட்டு ஸ்ரீலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பின்னர், வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ கட்டமைப்புகள்மீது நெடியவன் தனது பலமான கட்டுப்பாட்டை ஸ்தாபித்துக் கொண்டார்.
நெடியவனின் வலையமைப்பு பிரதானமாக கொண்டிருப்பது ஒரு காலத்து எல்.ரீ.ரீ.ஈ கிளைகள் மற்றும் முன்னணி நிறுவனங்கள் என்பனவற்றை. பெரும்பாலான மேற்கு நாடுகளில் எல்.ரீ.ரீ.ஈ ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என தடைசெய்யப் பட்டுக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரிந்த பல புலிகளின் கிளைகள் இயங்காதவையாக மாறின அல்லது தங்களை புது அமைப்புக்களாக மாற்றிக்கொண்டன. புதிய முன்னணி அபை;புகளும்கூட நிறுவப்பட்டன. நெடியவன் குழுவும் கூட வெவ்வேறு நாடுகளில் உள்ள தமிழ் புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அமைப்புக்களைக் கொண்ட ஒரு வலையமைப்பை நிறுவிக் கொண்டது. இந்த அமைப்புகள் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள மக்கள் பேரவை அல்லது தேசிய பேரவை என அழைக்கப் பட்டன. இந்த அமைப்பிலுள்ளவர்கள் தம்மை ஒருமட்டத்தில் ஜனநாயக அரசியல் செயற்பாட்டாளர்கள் என அழைத்துக் கொண்ட போதிலும் வேறு மட்டத்தில் நிழலான பல செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். இது எதனாலென்றால் இந்த அமைப்புகள் அடிப்படையில் எல்.ரீ.ரீ.ஈ கிளைகள், ஆனால் சட்டபூர்வமான அமைப்புகளாக பாசாங்கு செய்து கொண்டிருந்தன.
நெடியவன் வலையமைப்பு
இதன்படி நெடியவன் வலையமைப்பு; பாசாங்கு தனமான ஒன்றாக இருந்தபோதிலும் அதற்கு மாறாக அது வெளிப்படையானதோ அல்லது பொறுப்புடமையானதோ இல்லை. அதன் ஜனநாயக நம்பிக்கைகள் என அழைக்கப்படுபவவை அதிகம் விரும்பத் தகாதவையாக இருந்தன. நெடியவனை பின்பற்றுபவர்கள் வன்முறையாளர்களாக இருந்தார்கள். அதற்கு மேலும் நெடியவனின் வலையமைப்பு, அதன் செயற்பாட்டாளர்கள் பலர் நிழலானதும் சர்ச்சையானதுமான கடந்தகாலத்தை கொண்டிருப்பதால் அது இரகசியங்கள் மற்றும் தெளிவின்மை என்பனவற்றால் மறைக்கப் பட்டிருந்தது. வெவ்வேறு நாடுகளில் உள்ள அதன் முக்கிய அலுவலக உத்தியோகத்தர்கள் எல்.ரீ.ரீ.ஈ யின் அங்கத்தவர்களாகவோ அல்லது முன்னாள் அங்கத்தவர்களாக இருந்தபடியால் ஆயுதப் பயிற்சியும் அதேபோல போர்க்கள அனுபவத்தையும் கொண்டிருந்தார்கள். நெடியவன் குழுவினால் வெளியிடப்படும் அரசியல் அறிவிப்புகள், அனைத்துலக செயலகம் என அழைக்கப்படும் எல்.ரீ.ரீ.ஈ அலுவலகத்தில் ltte-diasproஇருந்து வெளியிடப்பட்டன.
இதற்கிடையில் ஸ்ரீலங்கா அதிகாரிகள் சில வருடங்களுக்கு முன்பு நெடியவனை தங்களிடம் கையளிக்குமாறு நோர்வேயிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். ஒஸ்லோ அதற்கு இணங்கவில்லை, ஆனால் நோர்வீஜியன் அதிகாரிகள் நெடியவனை நேர்காணல் செய்து நோர்வே மண்ணில் வாழும் வேளையில் அவர் வன்முறைகளில் ஈடுபடவோ அதை ஊக்கப்படுத்தவோ கூடாது என எச்சரிக்கை செய்திருந்தார்கள். அதன்பின் நெடியவன் ஒஸ்லோவில் இருந்து 500 கி.மீ அப்பால் உள்ள ஈட்ஸ்விக் என்ற பகுதிக்கு குடியேறிவிட்டார். அவர் தனது சுயவிபரங்களை அதிகம் வெளிப்படுத்தாமல் பராமரித்து வருவதுடன் பொதுவாக அவரை யாரும் அணுக முடியர்தபடி வாழ்ந்து வருகிறார். எனினும் அவர் தனது முக்கிய துணைத் தலைவர்களுடன் நம்பிக்கையான தகவல் வழங்குபவர்கள் ஊடாக வாய்மொழியாக தொடர்பு கொண்டு கட்டளைகளை தெரிவித்து வருவதாக நம்பப்படுகிறது. எனினும் படுகொலை செய்யும்படி உத்தரவிடுவது போன்ற முக்கியமான பெரிய முடிவுகளை நெடியவன் தானே அறிவித்து வருவதாக சந்தேகிக்கப் படுகிறது.
ஸ்ரீலங்கா அரசாங்கம் மீண்டும் ஒருமுறை நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரனை, மேலதிக விசாரணை மற்றும் சாத்தியமான தண்டனைக்காக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற ஒரு முறைப்படியான வேண்டுகோளை நோர்வேயிடம் விடுக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. சுமந்திரனது கொலை முயற்சிக்குப் பிறகு, ஸ்ரீலங்காவின் வழக்கு இப்போது முன்னரைவிட வலிமையானதாக மாறியுள்ளதாகத் தெரிகிறது. இந்த முறை ஒஸ்லோ கொழும்பின் வேண்டுகோளுக்கு இணங்குமா அல்லது இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கொழும்பிலுள்ள றோயல் நோர்வே தூதரகம், எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை முயற்சி தொடர்பாகவும் மற்றும் ஸ்ரீலங்கா காவல்துறையினருடன் மேற்கொள்ளும் ஒத்துழைப்பு பற்றியும் ஒரு பத்திரிகை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்தப் பத்திரிகை அறிக்கை இப்படித்தான் உள்ளது: - “பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன்மீது மேற்கொள்ளப் பட்டதாகச் சொல்லப்படும் கொலை முயற்சி தொடர்பாக வெளிவந்த சமீபத்தைய பத்திரிகை கட்டுரைகள் தொடர்பாக அறியத் தருவது. ஸ்ரீலங்கா செய்திப் பத்திரிகைகளில் வெளிவந்திருப்பதைத் தவிர நோர்வே தூதரகத்துக்கு இது தொடர்பாக வேறு தகவல்கள் எதுவும் கிட்டவில்லை. இது ஸ்ரீலங்கா காவல்துறையினால் கையாளப்பட வேண்டிய ஒரு சட்டப் பிரச்சினை என்றே நாம் கருதுகிறோம். பொதுவாக ஸ்ரீலங்கா காவல்துறை சர்வதேச ஒத்துழைப்பை கோரினால் அல்லது அதற்கான முயற்சியை ஆரம்பித்தால் அத்தகைய ஒத்துழைப்புக்காக நிறுவப்பட்ட சர்வதேச நடைமுறைகள் உள்ளன. தூதரகம் இது பற்றி மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை”.
டி.பி.எஸ்.ஜெயராஜ்
மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக